ஹைலைட்ஸ்:

  • கொரோனா சிறப்பு ரேஷன் தொகுப்பு பையில் 13 ரேஷன் பொருட்கள் அடங்கி உள்ளது.
  • தொகுப்பு பையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படமோ, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் புகைப்படமோ இடம் பெறவில்லை.
  • மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜீன் 3-ஆம் தேதி இந்த தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இந்த தீவிரத்தின் காரணமாக இந்தியாவில் தினம்தோறும் 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள், புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

மேலும் இந்தியாவில் தினமும் 3000 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பால் மரணமடைந்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் குறிப்பிட்டக்காலத்திற்கான ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மே 10-ம் தேதிலிருந்து முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க கொரோனா சிறப்பு ரேஷன் தொகுப்பு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார்.

இந்த கொரோனா சிறப்பு ரேஷன் தொகுப்பு பையில் 13 ரேஷன் பொருட்கள் அடங்கி உள்ளது. இந்தத் தொகுப்பு வழங்கப்படும் பைகள் தற்போது அச்சடிக்கப்பட்டு தயார்நிலையில் இருக்கிறது.

 

இந்த பையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படமோ, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் புகைப்படமோ இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொகுப்பு பையின் மேல் தமிழக அரசு முத்திரை மட்டுமே அச்சடிக்கப்பட்டுள்ளது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜீன்-3ஆம் தேதி இந்த தொகுப்பு வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

தொகுப்பு பையில் உள்ள 13 பொருட்கள்

கோதுமை மாவு -1 கிலோ, உப்பு -1 கிலோ, ரவை -1 கிலோ, சர்க்கரை -500 கிராம், உளுந்தம் பருப்பு -500 கிராம், புளி -250 கிராம், கடலை பருப்பு -250 கிராம், டீ தூள் -200 கிராம், கடுகு -100 கிராம், சீரகம் -100 கிராம், மஞ்சள் தூள் -100 கிராம், மிளகாய்த் தூள் -100 கிராம், குளியல் சோப் (125 கிராம்) ஒன்று, துணி சோப் (250 கிராம்) ஒன்று.

See also  டாஸ்மாக் கடைகளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை