தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றின் தடுப்பு மருத்து ரெம்டிசிவிர்.

ரெம்டிசிவிர் தடுப்பு மருந்து சென்னையில் உள்ள கீழ்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் டோக்கன் முறையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நோயாளிகளின் கூட்டம் அதிகமாக உள்ளததால் ரெம்டிசிவிர் தடுப்பு மருந்து விற்பனை சென்னை கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரியில் இருந்து நேரு விளையாட்டு அரங்கிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நாளை காலை 9.00 மணி முதல் நேரு விளையாட்டு அரங்கில் ரெம்டிசிவிர் தடுப்பு மருந்து விற்பனை செய்யப்படும். ஒரு நாளைக்கு 300 பேருக்கு தடுப்பு மருந்து வழங்கப்படும். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த நேரு விளையாட்டு அரங்கில் கூடுதல் மையங்கள் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் தெரிவித்துள்ளது.

See also  'மாநாடு' திரைப்பட நடிகர் சிம்பு மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு வாழ்த்துக்கள்