நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காற்றை போல பரவி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பரவல் அதிகரித்து வருவதால் நோயாளிகளை ஏற்றி செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

கொரோனா நோயாளிகளை சிகிச்சைக்காக ஏற்றி செல்லும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களில் அதிக கட்டணம் வசூலிக்க படுவதாக புகார் எழுந்துள்ளது.

இந்த புகார்கள் குறித்து சுகாதார துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் சாதாரண ஆம்புலன்ஸ் வாகனங்களில் முதல் 10 கி.மீ.,க்கு ரூ.1,500 ஆகவும், பிறகு கூடுதலாக செல்லும் ஒவ்வொரு கி.மீ.,க்கும் ரூ.25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களில் முதல் 10 கி.மீ ,க்கு ரூ.2000 ஆகவும், கூடுதலாக செல்லும் ஒவ்வொரு கி.மீ.,க்கும் ரூ.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெண்டிலேட்டர் வசதி உள்ள ஆம்புலன்ஸ் வாகனங்களில் முதல் முதல் 10 கி.மீ ,க்கு ரூ.4000 ஆகவும், கூடுதலாக செல்லும் ஒவ்வொரு கி.மீ.,க்கும் ரூ.100 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

See also  மயாத்திரை official டீஸர்