உலகத்தில் அனைத்து இடங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. தினமும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் பாதிப்படைந்த நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டுவருகின்றது. கொரோனா வைரஸ் இந்தியாவை அதிகமாக தாங்கிவரும் நிலையில் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.

இந்த சமயத்தை பயன்படுத்தி ஒரு சில நிறுவனங்கள் ஆக்ஸிஜன் கருவிகளை விற்பனை செய்வதாக கூறி பணத்தை சம்பாதித்து வருகின்றனர். இந்த போலி நிறுவனங்கள்,போலியான ஆக்ஸிஜன் கருவிகளான அதாவது nebulizers,humidifiers போன்றவற்றை சமூக வலைத்தளங்களான வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் விற்பனை செய்து வருகின்றனர்.

இதுபோன்ற ஆக்ஸிஜன் கருவிகளை பயன்படுத்தி நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்துவந்தால், அவை உயிரை பாதுகாக்காது என்றும் அதை பயன்படுத்தினால் இறப்பு நேரிடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மருத்துவ சான்று பெற்ற தரமான ஆக்ஸிஜன் சிலிண்டர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறித்தியுள்ளனர்.