Author: gpkumar

இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் ஜூன் 21 ஆம் தேதி வரை 27 மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மே 9 ஆம் தேதி முதல் மதுபான கடைகள் மூடப்பட்டு இருந்தது. கடந்த 34 நாட்களாக மூடப்பட்டு இருந்த மதுபான கடைகள் நேற்று திறக்கப்பட்டது. டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட ஒரே நாளில் ரூ.165 கோடிக்கு மது பாட்டில்கள் விற்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்டுப்பாடு வழிமுறைகளை மதுபிரியர்கள் கடைப்பிடிக்க ஞாயிற்றுகிழமை டாஸ்மாக் கடைகளின் முன்பு தடுப்பு அரண்கள் அமைக்கப்பட்டது. வட்டத்திற்குள் நின்று சமூக இடைவெளியை பின்பற்றி மதுபாட்டில்களை வாங்க அரசு உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் 34 நாள்களுக்குப் பிறகு திறக்கப்பட்டதால் பல இடங்களில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. கூட்டத்தை காவல்துறையினரால் கட்டுப்படுத்த முடியவில்லை. டாஸ்மாக் கடைகளுக்கு வந்த மதுபிரியர்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான கிருமி நாசுனி தெளிக்கப்பட்டு, சமூக இடைவெளி பின்பற்றப்பட்டது. ஒரு…

Read More

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அதிகாரபூர்வ இணையதளத்தில் Junior Research Fellow (JRF), Technical Assistant பணியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதி B.E, M.E, Diploma என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக சென்னை கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த வேலைக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள். நிறுவனம் : Anna University chennai பணியின் பெயர் : Junior Research Fellow (JRF), Technical Assistant கல்வித் தகுதி : B.E, M.E, Diploma பணியிடம் : Chennai தேர்வு செய்யப்படும் முறை : Interview மொத்த காலிப் பணியிடங்கள் : 3 மாதச் சம்பளம் : 30,000/- per month விண்ணப்பிக்கும் முறை : Online விண்ணப்பிக்க கடைசி நாள் : 25-06-2021 மேலும் முழு விவரங்களை : https://www.powergrid.in/sites/default/files/ADVERTISEMENT-SR-2-DIPLOMA-TRAINEE-2021.pdf என்ற லிங்கை…

Read More

தமிழகத்தில் இன்று முதல் ஜூன் 21 வரை அதிக அளவிலான தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது. கொரோனா நோய் தொற்று காரணமாக இந்த ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில்,11 ஆம் வகுப்பு மற்றும் பாலிடெக்னிக் தொழிநுட்ப கல்விக்கான மாணவர் சேர்க்கை எதன் அடிப்படையில் நடைப்பெறும் என்ற குழப்பம் நீட்டித்து வந்தது. இந்நிலையில் தற்போது 9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை மற்றும் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று(ஜூன் 14) முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சேர்க்கை தொடங்கியுள்ளது. மேலும் அனைத்து பள்ளிகளிலும் கொரோனா வழிகாட்டுதல்கள் முழுமையாக கடைபிடிக்கப்பட்டு மாணவர்சேர்க்கை நடைப்பெற்று வருகிறது. தமிழகத்தில் 6000-க்கும்…

Read More

டெல்லியில் இன்று 44-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இந்த காணொலி கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் பல்வேறு மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்றார்கள். காணொலி காட்சி மூலம் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து ஜிஎஸ்டி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை விளக்கி கூறினார். அதாவது கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு அளிக்கப்படும் ஆம்போடெரிசின்-பி என்ற மருந்துக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கபட்டுள்ளது. ரெம்டெசிவிர் மருந்து, ஆம்புலன்ஸ், ஆக்சிஜன் சிலிண்டர், ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர், வெண்டிலேட்டர், பல்ஸ் ஆக்ஸிமீட்டர், கொரோனா பரிசோதனை கருவி, வெப்பநிலை பரிசோதனை, சானிடைசர் உள்ளிட்ட பெரும்பாலான கொரோனா தடுப்பு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி 12 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்படும். கொரோனா தடுப்பூசிகளுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரியில் எந்த மாற்றமும் இல்லை. மத்திய அரசு 75 %…

Read More

ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், 11ஆம் வகுப்பு மற்றும் கல்லூரியில் எந்த மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படுவது என்ற குழப்பம் நீடித்து வந்தது. இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, தமிழகத்தில் உள்ள 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடப்பு ஆண்டிற்கான சேர்க்கை 9-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடத்தப்படும் என தெரிவித்தார். மேலும் பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளின் சேர்க்கைக்கான விதிமுறைகளை குழு…

Read More

கரும்பு வளர்ப்பு நிறுவனத்தின் (Sugarcane Breeding Institute) அதிகாரபூர்வ இணையதளத்தில் Young Professional, Senior Research Fellow பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கான கல்வித்தகுதி M.E, M.Tech, M.Sc, B.Sc. Agriculture என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக கோயம்பத்தூர் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த வேலைக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள். நிறுவனம் : Sugarcane Breeding Institute(SBI) பணியின் பெயர் : Young Professional (YP), Senior Research Fellow (SRF) கல்வித்தகுதி : M.E, M.Tech, M.Sc, B.Sc. Agriculture பணியிடம் : Coimbatore தேர்வு செய்யப்படும் முறை : Interview விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 21-06-2021 மேலும் முழு விவரங்களை : https://sugarcane.icar.gov.in/index.php/en/ என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.

Read More

ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்கும்போது அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையத்தில் பயின்றவர்களுக்கு தேர்வு கிடையாது என்ற புதிய விதிமுறை 2021 ஜூலை 1 ஆம் தேதி முதல் அமுலுக்கு வரும் என மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கான விதிகளை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்களின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: 1. டிரைவிங் பயிற்சி பெற வரும் நபர்களுக்கு, தரமான பயிற்சியை வழங்க, இந்த ஓட்டுநர் பயிற்சி மையங்கள் ‘சிமுலேட்டர்’- வாகனம் போன்ற வடிவமைப்பு, டிரைவிங் பழகுவதற்கான பிரத்யேக பாதை ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும். 2. மோட்டார் வாகன சட்டம் , 1988- ன் கீழ் ஓட்டுநர் பயிற்சி மையங்களில் ஓட்டுநர்களுக்கு புத்தக படிப்பு மற்றும் பயிற்சி வசதிகள் கிடைக்க வேண்டும். 3. இந்த ஓட்டுநர் பயிற்சி மையங்களில் வெற்றிகரமாக பயிற்சியை முடிப்பவர்களுக்கு,…

Read More

சிம்பு நடித்த ஈஸ்வரன் படம் நாளை அதாவது ஜுன் 12-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. சுசீந்திரன் இயக்கத்தில் தமன் இசையமைப்பில், சிலம்பரசன், ராஷிகண்ணா, பாரதிராஜா மற்றும் பலர் நடித்த ‘ஈஸ்வரன்’ படம் பொங்கலுக்கு வெளியானது. விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படம் அப்போது வெளிவந்து போட்டியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் ‘ஈஸ்வரன்’ படம் தியேட்டர்களில் வெளியாகும் போதே வெளிநாடுகளில் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. ஆனால், தியேட்டர் உரிமையாளர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதனால் வெளிநாட்டில் ஓடிடியில் வெளியிடுவதை தள்ளி வைத்தார்கள். இந்நிலையில் சிம்பு நடித்த ‘ஈஸ்வரன்’ படம் 5 மாதங்கள் கழித்து நாளை ஓடிடியில் வெளியாக உள்ளது. இது சிம்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. நாளை (ஜூன் 12) முதல் இப்படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் காணலாம். தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ படம் அடுத்த…

Read More

சமுதாய மேம்பாட்டிற்காக சேவை செய்து வரும் இளைஞர்கள் முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘சமுதாய வளர்ச்சிக்காக சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில், முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவின் போது வழங்கப்படுகிறது. இந்த விருது 15 வயது முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்களுக்கும், 3 பெண்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும். நடப்பு ஆண்டுக்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது, 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி நடக்கும் சுதந்திர தின விழாவில் முதலமைச்சரால் நேரடியாக வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆண் மற்றும் பெண்களுக்கு 1.4.2021ஆம் தேதியன்று 15 வயது நிரம்பி இருக்க வேண்டும். அல்லது இவர்களுக்கு 31.3.2021…

Read More

உங்களிடம் பழைய காலத்து 1 ரூபாய், 5 ரூபாய்,10 ரூபாய் மற்றும் 2 ரூபாய் நோட்டுகள் இருந்தால், உங்களுக்கு ஜாக்பாட் அடிக்கின்ற நேரம் தான். உங்களிடம் ட்ராக்டர் புகைப்படம் போட்ட 5 ரூபாய் பழைய நோட்டு இருந்தால் அதில் 789 என்ற எண் அச்சிடப்பட்டிருந்தால் அதனை நீங்கள் 30 ஆயிரம் ரூபாய் வரைக்கும் விற்கலாம். நீங்கள் உங்கள் பழைய நாணயங்களை விற்க விரும்பினால் https://coinbazzar.com/ என்ற இணைய தளத்தில் உங்களின் பெயர் மற்றும் இதர விபரங்களை பதிவு செய்ய வேண்டும். இந்த இணையத்தில் பழங்கால நாணயங்கள் வாங்கவும் விற்கவும் வாடிக்கையாளர்களும் உரிமையாளர்களும் அனுமதி உண்டு. இந்த விற்பனை இணைய தளத்தில் பழைய ஒரு ரூபாய் நோட்டுக்கு கூடுதல் விலை வைக்கப்பட்டுள்ளது. இந்த பழைய ஒரு ரூபாய் நோட்டு 1977 – 79 காலங்களில் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். அந்த ரூபாய் நோட்டில் நிதித்துறை அமைச்சகத்தின் முதன்மை செயலாளர் ஹிருபாய் எம். படேலின் கையெழுத்து…

Read More

கொரோனா நோய் தொற்று காரணமாகப் பொறியியல் படிப்புகளுக்கான 2020ஆம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகள், 2021-ம் ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைப்பெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் ஏப்ரல் மாதத்தில் வெளியாகின. ஆனால் இந்த தேர்வு முடிவில் முறைகேடுகள் நடைபெற்று உள்ளதாக புகார் எழுந்ததால், மறுதேர்வு நடத்த உயர் கல்வித்துறை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டது. இதனிடையே மறுதேர்வு மற்றும் 2021 ஏப்ரல்-மே மாத செமஸ்டர் தேர்வு (முதுகலை 2-வது செமஸ்டர் தவிர்த்து) எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி பொறியியல் மாணவர்களுக்கான தேர்வுகள் கொரோனா நோய் தொற்றுக் காலத்துக்கு முன்பு நடைபெற்றதைப் போல 3 மணி நேரம் ஆஃப்லைன் முறையில், பேனா மற்றும் காகித முறையில் நடைபெறும். வீட்டிலிருந்தே தேர்வுகள் எழுத மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. பொறியியல் மாணவர்களுக்கான தேர்வு காலை, மதியம் என இரு வேளைகளிலும் 3…

Read More

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று காரணமாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு பொது தேர்வு நடத்தப்பட மாட்டாது என தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 2021-2022 கல்வி ஆண்டு மாணவர்களுக்கான பாடத்தையும் தொடங்க உள்ள நிலையில், தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வரும் ஜூன் 14-ஆம் தேதி முதல் பணிக்கு வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளதாலும், மாணவர்களுக்கு வழங்க வேண்டிய விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்க உள்ளதாலும், கற்றல் கற்பித்தலுக்கு தேவையான இதர நலத்திட்டங்களை வழங்க வேண்டி உள்ளதாலும், தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவரும் ஜூன் 14 ஆம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு…

Read More

மாருதி சுசூக்கி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. Maruti Suzuki India Limited எனப்படும் தனியார் வாகன உற்பத்தி நிறுவனத்தில் வெளியாகி உள்ள இந்த வேலைக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாருதி சுசூக்கி நிறுவனத்தில் Automobiles பிரிவுகளில் Apprentice பணிக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர் :Maruti Suzuki பணியின் பெயர் :Apprentice வயது வரம்பு :18 வயது முதல் 23 வயதிற்குள் கல்வித் தகுதி :ITI Passouts (Govt. ITIs Only), NCVT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை :Online Test (Technical, Aptitude & Behavioural) மற்றும் Personal Interview விண்ணப்பிக்கும் முறை :ஆன்லைன் விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.06.2021 இந்த வேலைக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://register.cocubes.com/msil-2020 என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது இந்நிறுவனத்தின் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.marutisuzuki.com விண்ணப்பிக்கலாம்.

Read More

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தனிபெருமான்மையுடன் வெற்றிப்பெற்று ஆட்சியமைத்தது. இதனைத் தொடர்ந்து திமுக தலைவர், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில், பொதுமக்கள் தங்கள் புகார்களை நேரடியாக தமிழக முதல்வரிடம் அளிக்க, தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் தங்கள் புகார்களை https://cmcell.tn.gov.in/register.php என்ற இணைய முகவரியில் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்திலே பொதுமக்கள் அளித்த புகார் சம்பந்தமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இதற்கான வசதியும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடமிருந்து நேரடியாக புகார்களை பெறும் வகையில், ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’என்ற தனிப்பிரிவு உருவாக்கப்படும் என்று திமுக தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

Read More