Author: gpkumar

petrol-deisel

ராஜஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சதம் இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலை சதம் அடித்துள்ளது. தொடர்ந்து 9-வது நாளாக இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாடு முழுக்க உயர்ந்த நிலையில், ராஜஸ்தானில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ கங்காநகர் பகுதியில் ஹைய் ஆக்டேன் கொண்ட ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 102.34க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் சாதாரணப் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 99.56 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் ரூ.92.13 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பெட்ரோல் விலை சதம் கடந்த நகர் என்ற நிலைமைக்கு அந்த ஊர் தள்ளப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் மீதான தொடர் விலை உயர்வு மற்றும் மத்திய அரசு கூடுதல் வருமானத்திற்காகப் பெட்ரோல் மற்றும் டீசல் மீது…

Read More

மாஸ்டர் – பொலக்கட்டும் பரா பரா வீடியோ | தலபதி விஜய் | விஜயசேதுபதி | அனிருத் ரவிச்சந்தர் பாடல் தலைப்பு: பொலக்கட்டும் பரா பரா ஆல்பம் / திரைப்படம்: மாஸ்டர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார் பாடல் – விஷ்ணு எடவன் குரல் – சந்தோஷ் நாராயணன் நட்சத்திரம் விஜய், விஜய் சேதுபதி மாலவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, சாந்தனு லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கியுள்ளார் டாப் – சத்யன் சூரியன் ஆசிரியர் – பிலோமின் ராஜ் தயாரிப்பாளர் – சேவியர் பிரிட்டோ இணை தயாரிப்பாளர்கள் – லலித் குமார், ஜெகதீஷ் பழனிசாமி

Read More

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா தோல்வியடைந்த நிலையில் 50 விழுக்காடு ரசிகர்களுடன் மிகவும் எதிர்பார்ப்புடன் 2ஆவது போட்டி நடந்துபெற்று வருகிறது. டாஸ்யில் வென்ற இந்திய அணி உலக சாம்பியன்ஷிப்யில் தகுதி பெற இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற சூழ்நிலையில் இந்திய அணி இருக்கிறது. டாஸ்யில் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்ந்தெடுத்தார். இந்தப் போட்டியில் இந்திய அணியில் 3 மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி முதல் டெஸ்ட்டில் விளையாடிய பும்ரா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷபாஸ் நதீம் ஆகியோர் நீக்கப்பட்டு, இவர்களுக்கு பதிலாக அக்ஸர் படேல், குல்தீப் யாதவ் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இதனையடுத்து டாஸ்யில் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்து தொடர்ந்தது விளையாடிவருகிறது. தொடக்க வீரர்களாக சுப்மன் கில், ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினர்கள். இதில்…

Read More

டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தராகண்ட், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் நேற்று இரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பல இடங்களில் கட்டிடங்கள் குலுங்கியதால், மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு அவசரமாக வெளியேறினர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. தஜிகிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பஞ்சாப் அமிர்தசரஸ் பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக பல இடங்களில் கட்டிடங்கள் குலுங்கின. வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த மக்கள், அச்சத்தில் வீடுகளை விட்டு அவசரமாக வீதிகளை நோக்கி ஓடிவந்தனர். இந்த நிலநடுக்கத்தில் நள்ளிரவு வரை எவ்வித உயிர்ச்சேதமும் இல்லை என பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங் தெரிவித்தார். தலைநகர் டெல்லி பஞ்சாப்பை போல் தலைநகர் டெல்லியிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அனைத்து மக்களின் பாதுகாப்பிற்காக கடவுளிடம் பிரார்த்திப்பதாக கூறியுள்ளார். மேலும்…

Read More

பச்சா பச்சிகே வீடியோ பாடல் | பாரிஸ் ஜெயராஜ் | சந்தனம் | சந்தோஷ் நாராயணன் | ஜான்சன் கே லார்க் ஸ்டுடியோஸ் பிரசண்ட்ஸ் சந்தனம் இல் & என “பாரிஸ் ஜெயராஜ்” பாடல் பெயர்: பச்சா பச்சிகே இசை: சந்தோஷ் நாராயணன் பாடல்: ரோகேஷ், மெட்ராஸ் மீரன் பாடகர்: சந்தோஷ் நாராயணன் பாஸ் தோல் – ஆறுமுகம் பக்க டிரம் – சரத் பாஸ் டிரம் – தனிகவேல், தேவங்கு சத்தி – சரத் கட்டே மொல்லோம் – க out தம், புவனேஷ், வல்லரசு டேப்ஸ், ஜே.எஸ்.ஜெயராம், யுவராஜ், கமல், தினேஷ் டோலக், டோல்கி: கணபதி, வெங்கட் கோரஸ்: பிரிட்டோ, சின்னா, யோகி சேகர், சுகுமார் சந்தோஷ் நாராயணன் @ ஃபியூச்சர் டென்ஸ் ஸ்டுடியோஸ் இசையமைத்தார், ஏற்பாடு செய்தார் கூடுதல் புரோகிராமிங்: ஆர் கே சுந்தர் பதிவுசெய்தவர்: சாய் ஷ்ரவனம், சுகுமார், ஆர்.கே.சுந்தர், சந்தோஷ் நாராயணன் @ எதிர்கால…

Read More

நடிகை ஷாலினி முதலில் குழந்தை நட்சத்திரமாக  சினிமாவில்  அறிமுகமானார். இவர்  கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இதையடுத்து நடிகை ஷாலினி மலையாளத்தில் வெளியாகிய ‘அனியாத பிறவு’ என்ற படத்தின்  மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.  மலையாளத்தில் வெளியாகிய ‘அனியாத பிறவு’ என்ற படம்  தமிழில் ‘காதலுக்கு மரியாதை’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.  இந்தப்படத்தை  இயக்குநர் ஃபாசில் இயக்கினார். இதிலும் கதாநாயகியாக ஷாலினியே நடித்தார். இதன் மூலம் ஷாலினி தமிழிலும் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படம் வெற்றி  பெற்றதால் ஷாலினிக்கு வாய்ப்புகள் குவிந்தன. அஜித்குமார் ஜோடியாக அமர்க்களம் படத்தில் நடித்தார். இதற்கிடையே 1999-ம் ஆண்டு இப்படப்பிடிப்பின் போது, படத்தின் ஹீரோ அஜித்துக்கும் ஷாலினிக்கும் காதல் ஏற்பட்டது.  மணிரத்னம் இயக்கத்தில் நடித்த ‘அலைபாயுதே’ படம் ஷாலினிக்கு இன்னொரு திருப்பு முனை படமாக அமைந்தது. கண்ணுக்குள் நிலவு, பிரியாத வரம் வேண்டும் ஆகிய படங்களை நடித்து முடித்த கையோடு 2000-ம் ஆண்டில்…

Read More

நாடு முழுதும், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, கடந்த மார்ச் மாதம் இறுதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மே மாதம் வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல்  இருந்தது. ஆனால்  ஜூன் மாதம் முதல் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன. நாட்டின் பல நகரங்களில்  பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது . தமிழகத்தில் பெட்ரோல் மற்றும்  டீசல் விலை இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 22 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் பெட்ரோல்  ரூ.90.18 க்கு  விற்பனை செய்யப்படுகிறது. அதே போல்  டீசல்  விலை  நேற்றைய விலையிலிருந்து 28 காசுகள் உயர்ந்து ஒரு  லிட்டர் டீசல் ரூ.83.18 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை மாற்றி …

Read More

சம்பத்ராமின் 200 வது படம் ”கசகசா” நாளை எம்.எக்ஸ் பிளேயர், ஹங்காமா ஆகிய ஒடிடி தளங்களில் வெளியாகிறது. வெளியாகியுள்ளது. சம்பத்ராம் ரஜினிகாந்த், கமல்ஹாசன்,அஜித், விஜய், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் வில்லன், குணச்சித்திர வேடம் என்று பல படங்களில் கலக்கி வருகிறார். தமிழ் மட்டும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார். டாக்டர். தமிழ் சுடர் அறிமுக இயக்குநராக ‘கசகசா’படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலரை நேற்று இயக்குநர் பா.இரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இயக்குநர் பா.இரஞ்சித் இத்திரைப்படத்தின் டிரைலரை பார்த்து படக்குழுவினரை அதிகமாக பாராட்டியுள்ளார். இத்திரைப்படத்தில் சம்பத்ராம் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். சம்பத்ராம், ஹீரோயிசம் மற்றும் வில்லத்தனம் கலந்த வித்தியாசமான வேடத்தில் மிகவும் கலக்கலாக நடித்துள்ளார்

Read More

விஜய் ஹசாரே போட்டிக்கான தமிழக அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் விடுவிக்கப்பட்டுள்ளார். பிசிசிஐயின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டியுள்ளது. இடது கை வேகப்பந்து வீச்சாளர் நடராஜன், சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியை சேர்ந்தவர். இவர் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டித்தொடரில் பங்கேற்று ,டெஸ்ட் ,ஒரு நாள் ,டி20 போட்டிகளில் அறிமுகமானவர். விஜய் ஹசாரே ஒரு நாள் போட்டிக்கான தமிழக அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் நடராஜன், தினேஷ் கார்த்திக் தலைமையில் இடம்பிடித்துள்ளார். பிப்ரவரி 20 முதல் மார்ச் 14 வரை, விஜய் ஹசாரே ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது. டி 20 தொடரிகளில் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் நிச்சயம் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் கலந்து கொள்ள இருப்பதால் தற்போது ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. விஜய் ஹசாரே ஒரு நாள் போட்டியில் தமிழக அணி சார்பாக நடராஜன் விளையாடினால்…

Read More

தனுஷ் கட்டும் புதிய வீட்டின் பூமி பூஜையில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். தனுஷ் நடித்த கர்ணன் படப்பிடிப்பு முடிந்தநிலையில், அடுத்து கார்த்திக் நரேன் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகன் தனுஷ்யும் கதாநாயகி மாளவிகா மோகனனும் நடிப்பதாகவும், முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த புதிய படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்ததாக அந்தப்படத்தின் கதாநாயகி மாளவிகா மோகனன் அவரது ட்விட்டர் பக்கத்தில் அப்டேட் செய்திருந்தார். இதனைத்தொடர்ந்து ரூஸோ சகோதரர்கள் இயக்கும் ‘தி க்ரே மேன்’ படப்பிடிப்பில் தனுஷ் கலந்து கொள்ள நேற்று இரவு அமெரிக்கா செல்ல இருந்ததாகச் சொல்லப்பட்டது. அவெஞ்சர்ஸின் ஃபினிடி வார், எண்ட்கேம் உள்ளிட்டப் படங்களை இயக்கியதும் ரூஸோ சகோதரர்கள் தான். இந்நிலையில் தனுஷ் இன்று போயஸ்கார்டனில் தான் கட்டும் புதிய வீட்டுக்கான பூமி பூஜையில் ஈடுபட்டுள்ளார். அந்த பூஜையில் நடிகர் ரஜினிகாந்த், தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், லதா ரஜினிகாந்த் ஆகியோர் கலந்துகொண்டனர். தனுஷ் புதிய வீடு பூமி…

Read More

மியான்மரில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்வதாக கூறப்படுகிறது. ” யாங்கோன் ” என்ற நகரத்தில் மட்டும் மூன்று லட்சத்திற்கும் அதிகமாக தமிழர்கள் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. பக்கோ, மூன், கரீன், ஏராவடி உள்ளிட்ட மாநிலங்களிலும் தமிழர்கள் பெருமளவில் வாழ்ந்து வருகிறார்கள். அங்கு இப்பொழுதும்  தமிழ் மொழி பேசப்பட்டு, கலாசாரமும், பாரம்பரியமும் பாதுகாக்கப்பட்டு வருகிறதாம் . 1962 முதல் 2011 வரை என சுமார் 49 ஆண்டுகளுக்கு மியான்மரை ராணுவம்தான் ஆட்சி செய்தது. ராணுவத்தின் ஆட்சியில் உரிமைகளை இழந்து, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு , மக்கள்  2015-ஆம் ஆண்டு முதல் சுவாசிக்க தொடங்கிய சுதந்திர காற்று இப்பொழுது மீண்டும் பறிக்கப்பட்டுவிட்டது  என்று மியான்மரின் யாங்கோன்  நகரை சேர்ந்த பர்மிய திரைப்பட இயக்குநரும், தமிழருமான சுந்தர்ராஜ் கூறுகிறார் . தமிழர்களின் பிரச்சனைகள் மியான்மர் வாழ் தமிழர்களான இயக்குநர் சுந்தர்ராஜ் மற்றும் வழக்குரைஞரான அகத்தியன் ஆகிய இருவரும்  வெளிப்படுத்திய பிரச்சனைகள். பல்வேறு காரணங்களுக்காக   தமிழர்கள் பல…

Read More

நோயின்றி வாழும் மனிதர்கள் தான் பணக்காரர்களாக கருதப்படுகிறார்கள். எவ்வளவு வசதியாக இருந்தாலும் நாம் நோயில்லாமல் வாழ்ந்தால் தான் நல்லது. இதற்கு இயற்கையான மருத்துவ முறையில் என்ன செய்யலாம் என்று சிலவற்றைப் பார்ப்போம் . கொத்தமல்லி விதையை (தனியா) தண்ணீரில் கொதிக்கவைத்து ஆறியபின் அந்த தண்ணீரில் கண்களை கழுவி வந்தால் கண்கள் குளிர்ச்சியாக இருக்கும். கணினியில் அதிக நேரம் வேலை பார்ப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் இவை அனைத்தையும் சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து வடிக்கட்டி இரவில் ஒரு டம்ப்ளர் குடித்து வந்தால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம். வெங்காயத்தை நெருப்பில் சுட்டு சாப்பிட்டு வந்தால் பித்தநோய்கள் தீரும். தயிரை உடம்பில் தேய்த்தது குளித்து வந்தால் வேர்க்குரு வராது. வேர்க்குரு வந்தாலும் குணமாகிவிடும்.உலர் திராட்சைப் பழத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் இதய நோய் குணமாகும். மாதவிடாய்…

Read More

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான “பரியேறும் பெருமாள்” படத்தில் நடிகர் கதிரிக்கு அப்பாவாக நடித்த தங்கராசுவின் நிலைமையை பார்ப்போம். நாட்டுப்புற கலைஞரான தங்கராசுவின் திறமையை அறிந்த மாரி செல்வராஜ், இவருடைய முதல் படத்திலே தங்கராசுக்கு நடிக்க வாய்ப்பளித்தார். இந்த படம் தமிழகத்தில் பட்டி தொட்டியெல்லாம் பெரும் வெற்றியை தேடித்தந்தது,இருந்தாலும் தங்கராசுவின் நிலைமை மாறவில்லை. இவர் வசிக்க ஒரு நல்ல வீடு கூட இல்லாத நிலைமையில், அவதிபடுக்கிறார் . இதை அறிந்த தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நெல்லை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்க்கு கொண்டு சென்று இருக்கிறார்கள். தங்கராசு சுமார் 40 ஆண்டுகளாக பெண்வேடம் அணிந்து நாட்டுப்புற கலைஞராக நடித்தவர். இவர் தன் மனைவி பேச்சிக்கனியுடன் மிகவும் சேதமடைந்த கூரை வீட்டில் வசித்து வருகிறார்.இந்த வீடு நெல்லை வண்ணாரப்பேட்டையில் இளங்கோ நகரில் உள்ளது. இவருடைய வீட்டுக்கு கதவு, மின்விளக்கு எதுயும் இல்லாதால் டீச்சர் டிரைனிங் முடித்த தனது மகளை…

Read More