உலகில் முதல் பத்து இடத்தை பிடித்துள்ள கோடிஸ்வரர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு கோடிஸ்வரர்களில் முதலிடத்தில் 177 பில்லியன் அமெரிக்க டாலரை வைத்துள்ள அமேசான் நிறுவர் ஜெப்பெசாஸ் இருக்கிறார். இவரை தொடர்ந்து 2வது இடத்தில் 151 பில்லியன் டாலர் வைத்துள்ள டெஸ்லாவின் தலைமைச் செயல் அதிகாரி எலான்மஸ்க் இருக்கிறார். எலான்மஸ்க் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள கோடீஸ்வரர்களின் பட்டியலில் 31வது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது இடத்தில் LVMH தலைமை செயல் அதிகாரி பெர்னார்ட் அர்னாலட் உள்ளார். இவர் 150 பில்லியன் டாலர் வைத்துள்ளார். அவரை தொடர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உரிமையாளர் பில்கேட்ஸ் நான்காம் இடத்தை பிடித்துள்ளார். அடுத்ததாக பேஸ்புக் நிறுவர்மார்க் ஜூக்கர்பெர்க் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். இவரை தொடர்ந்து ஆறாவது இடத்தில் வாரன் பஃபெட் உள்ளார். ஏழாவது இடத்தில் லாரி எலிசனும், 8வது இடத்தில் லாரி பேஜ்-யும் , ஒன்பதாவது இடத்தில் சர்ஜிப்ரினனும் உள்ளார்கள். முகேஷ்…
Author: gpkumar
தமிழக அரசு அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை ஏற்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது. கொரோனோ பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் , கல்லூரிகளின் இறுதி பருவத் தேர்வுகளைத் தவிர பிற தேர்வுகளை ரத்து செய்வதாக தமிழக அரசு அரசாணை ஒன்று வெளியிட்டது. இதில் அரியர் தேர்வுகளையும் ரத்து செய்வதாகவும் தெரிவித்திருந்து. இது தொடர்ப்பாக, பல்கலைக்கழக மாணியக் குழுவுக்கு எதிராக இவ்வாறு தேர்வுகளை ரத்து செய்வது முரணானது என தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டு இருந்தது. இதற்கான வழக்கு விசாரணையில் ஏற்கெனவே ஆஜராகியிருந்த யுஜிசி சார்பு செயலாளர் உமாகாந்த் பலுனி, தமிழக அரசின் இந்த அறிவிப்பிற்கு ஆட்சேபனை தெரிவித்து இருந்தார். மேலும் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில், அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ஏற்க இயலாது என்றும், தேர்வு நடத்துவதை…
சட்டமன்ற தேர்தல் நேற்று ஒரே கட்டமாக தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலத்திலும் , புதுச்சேரியிலும் நடைபெற்றது. தமிழகத்தில் அ.தி.மு.க வுக்கும், தி.மு.க.வுக்கும் இடையே போட்டி பலமாக இருந்தாலும் 5 முனைப்போட்டி நிலவியது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் 3,998 வேட்பாளர்கள் களத்தில் இருந்தார்கள். மேலும் தமிழகத்தில் 6,28,69,955 பேர் மக்கள் வாக்களிக்க இருந்தார்கள். தமிழ்நாட்டில் நேற்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் ஆரம்ப கட்டத்திலே ஆர்வத்துடன் வந்து ஓட்டுப்போடத் தொடங்கினார்கள். கடுமையான வெயிலிலும் மக்கள் உற்சாகமாக வாக்களிக்க வந்தார்கள். மேலும் அங்குள்ள தேர்தல் அதிகாரிகள் வாக்காளர்களை முக கவசத்துடன் வாக்குச்சாவடி அருகே அனுமதித்தார்கள். தமிழ்நாட்டில் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் காலையில் இருந்தே மிகவும் ஆர்வமாக வந்து வாக்காளர்கள் ஓட்டு போட்டதை பார்க்கமுடிந்தது. தமிழ்நாட்டில் நேற்று காலை 9 மணி நிலவரப்படி 13.80 சதவீத வாக்கும், காலை 11 நிலவரப்படி 26.90 சதவீத வாக்கும் பதிவாகியிருந்தது. மதியம் 1 மணி…
வாடிக்கையாளர்கள் தங்கள் சிலிண்டர்களை வாட்ஸ்அப் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை எரிவாயு முகவர் நிறுவனங்கள் அறிமுகபடுத்தி உள்ளது. வாடிக்கையாளர்களின் வசதிக்காக, சமீபத்தில் பல ஆன்லைன் செயல்முறைகளைக எரிவாயு முகவர் நிறுவனங்கள் கொண்டு வந்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் தங்களின் கேஸ் புக் செய்ய, கேஸ் விநோயம் செய்பவரை தொடர்பு கொள்ளலாம், அல்லது இணையதளம் மூலமாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். தற்போது எரிவாயு நிறுவனத்தின் வாட்ஸ்அப் எண்ணில் ஒரு மெசேஜ் மட்டும் செய்து கேஸ் புக் செய்து கொள்ளலாம் என்ற வசதியை தற்போது அறிமுகம் செய்துள்ளது. வாட்ஸ்அப்பில் எல்பிஜி முன்பதிவு தற்போது எண்ணெய் நிறுவனங்கள் WhatsApp மூலம் LPG சிலிண்டர்களை முன்பதிவு செய்து கொள்ள தங்கள் சொந்த எண்களை வெளியிட்டு உள்ளது. இந்த எண்ணிற்கு நீங்கள் வெறும் REFILL என்று டைப் செய்து அனுப்பினால் மட்டும் போதும் உங்கள் LPG சிலிண்டர் புக் ஆகிவிடும். மேலும் WhatsApp மூலம் முன்பதிவு செய்த…
எல்ஐசி-யின் புதிய ஆதார் ஸ்டாம்ப் திட்டமானது ஆதார் அட்டை வைத்திருக்கும் ஆண்களுக்கு மட்டும், ஒரு நோக்கமற்ற லாப எண்டோவ்மென்ட் அஷ்யூரன்ஸ் ஆயுள் காப்பீட்டு திட்டம் ஆகும். இந்த இன்சூரன்ஸ் திட்டத்தில் பாலிசிதாரர் குறைந்த பிரீமியத்தை செலுத்தினால் போதுமனது. இந்த பாலிசியில் உள்ள நல்ல விஷயம் என்னவென்றால் ஒரு நாளைக்கு பிரீமியமாக 30 ரூபாய் செலுத்தினால் போதுமானது. குறைத்த மதிப்பான 30 ரூபாய் செலுத்தும்பட்சத்தில் பாலிசி முடிவடைந்த பிறகு கிட்டதட்ட 4 லட்சம் ரூபாய் வரையில் முதிர்வு தொகை கிடைக்கும். அது மட்டும் அல்லாமல் , இந்த சிறிய திட்டம் இறத்தபிறகு சலுகைகள் மற்றும் பிற வசதிகளையும் கொடுக்கிறது. ஆண்கள் மட்டுமே எடுக்க முடியும் எல் ஐ சியின் இந்த பாலிசி திட்டமானது சேமிப்பு பாதுகாப்பு மற்றும் இரண்டையும் கொடுக்கிறது. எனினும் இந்த திட்டத்தில் உள்ள நெகடிவ் பாயிண்ட் என்னவென்றால் இந்த பாலிசியானது ஆண்களுக்கு மட்டுமே. இந்த எல் ஐ சி திட்டத்தை…
வேர்க்கடலை உடலுக்கு அதிக நன்மையும் ஆரோகியாமும் தரக்கூடியது. இதற்கு பல பெயர்கள் உண்டு.அதாவது நிலக்கடலை, கடலைக்காய், மல்லாட்டை, மல்லாக்கொட்டை, மணிலாக்கொட்டை,கடலை ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் சிறுவர்களுக்கு அளித்துவரும் நொறுக்குதீனிகளான (ஜல்லி ,சிப்ஸ்,ஐஸ்) தவிர்த்து கடலைமிட்டாய்,எள்ளு மிட்டாய், பொறி உருண்டை போன்ற உடலுக்கு நம்மை தரும் பொருட்களை விரும்பி உண்ண ஊக்கம் அளிக்கவேண்டும். நிலக்கடைலையானது பாதாம், பிஸ்தா, முந்திரியைவிட சத்து நிறைந்த ஒன்றாகும் . ‘ஏழைகளின் பாதாம்’ என்று நிலக்கடலையைக் குறிப்பிடுவர் , பாதாம் பருப்பைவிட உடலுக்கு அதிக நன்மையும் ஆரோகியாமும் தரக்கூடியது என ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது. நாம் நாகரிக வளர்ச்சியின் காரணமாக வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் பாரம்பரிய உணவுப் பொருள்கள் பலவற்றை நாம் அன்றாட வாழ்வில் மறந்து வருகிறோம். அந்த வரிசையில் வேர்க்கடலையையும் நாம் மறந்துவிட்டோம். தற்போது மறந்துபோன நம் பாரம்பரிய உணவுகளை மீட்டெடுக்கும் முயற்சி ஒருபுறம் நடந்துகொண்டிருக்கும் இந்தச் சூழலில், வேர்க்கடலை குறித்து பல ஆய்வுகள்…
கொரோனா பரவல் காரணமாக ஏப்ரல் 7ஆம் தேதியிலிருந்து கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கும் என சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார். இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் உறுதியாகியுள்ளது. இதனால் தற்போது தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்து உள்ளது. தேர்தலுக்குப் பின் ஊரடங்கு போடப்படும் என்ற யூகங்களும் சொல்லப்படுகிறது. முழு ஊரடங்கு என்பது வதந்தியே இதை நம்பவேண்டாம், ஏப்ரல் 7ஆம் தேதியிலிருந்து கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்று சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். செய்தியாளர்களை இன்று சந்தித்த அவர், வாக்களிக்கச் செல்லும் ஒவ்வொருவரும் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும். மேலும் வாக்குச்சாவடிகளில் தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது . தேர்தல் பணிகளில் ஈடுபடும் வாக்குச்சாவடி ஊழியர்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் குழப்பம் ஏற்படக்கூடாது என்பதற்காகவே வீடு…
தமிழகத்தில் நாளை சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில்,மின்னனு வாக்கு எந்திரத்தில் எப்படி வாக்களிப்பது என்பதை குறித்து தகவல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுயுள்ளது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நாளை காலை 7மணி முதல் மாலை 7மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே வழங்கியுள்ள வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் தகவல் சீட்டையும் அல்லது 11அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்றை எடுத்துக்கொண்டு வாக்குச்சாவடிக்குள் முகக்கவசத்துடன் செல்லவேண்டும். தமிழகத்தில் ஓவ்வொரு வாக்குச்சாவடியிலும் சமூகஇடைவெளிக்கான வட்டம் அமைக்கப்பட்டு இருக்கும். அந்த வட்டத்திற்குள் வரிசையாக நிற்கவேண்டும். பிறகு தங்களுக்கான வாய்ப்பு வரும்போது உள்ளே செல்ல வேண்டும். அங்கு வாக்குப்பதிவு அலுவலர்கள் 4 பேர் இருப்பார்கள். மேலும் அங்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்களுக்கான தேர்தல் முகவர்கள் இருப்பார்கள். அலுவலகரிடம் வாக்குச்சாவடிக்கான வாக்காளர் பட்டியல் மற்றும் தொகுதி இருக்கும். முதல் அலுவலரிடம் உங்கள் வாக்காளர் தகவல் சீட்டில் தரப்பட்டுள்ள பெயர், வார்டு எண் போன்ற தகவல்களைக் கூற…
இந்த ஆண்டு 10th, 12th, ITI,Diploma, Bachelors Degree,B.Com படித்தவர்களுக்கு பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. Supervisor Trainee, Apprentice, Technician Apprentice ஆகியவற்றிக்கு பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் BHEL நிறுவனத்தின் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.bhel.com விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது. BHEL நிறுவனத்தின் வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. BHEL Jobs 2021 வேலைவாய்ப்பு – 01 பதவி பெயர் : Apprentice காலி இடங்கள் : 319 கல்வித்தகுதி : 10th, 12th, ITI, Bachelors Degree சம்பளம் : As Per BHEL Official Notification வயது வரம்பு : 18 – 27 ஆண்டுகள் பணியிடம் : திருச்சி, தமிழ்நாடு தேர்வு செய்யப்படும் முறை :On the basis of Merit அல்லது Interview விண்ணப்பிக்கும் முறை :ஆன்லைன் விண்ணப்ப கட்டணம் :இல்லை அறிவிப்பு வெளியிடப்பட்ட…
ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்க இருக்கும் வாக்குப்பதிவு நாளில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை செவ்வாய் கிழமை காலை 7 மணி இருந்து இரவு 7 மணிவரை நடைப்பெற இருக்கும் வாக்குப்பதிவிற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் முடிவடைந்தது. அனைத்து அரசியல் கட்சியினர்கள் மற்றும் வேட்பாளர்கள் வாக்குப்பதிவு நடைபெறும் நாள் அன்று கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது. தேர்தல் ஆணையத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் விவரம் கீழ் வருமாறு: வாக்குப்பதிவு நாளில் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை தர வேண்டும். தேர்தலை சுமூகமாகவும்,அமைதியாகவும் நடைபெற வழிவகுக்கும். இதனால், வாக்காளர்கள் எந்தவித பிரச்சினைகள் இன்றி முழு சுதந்திரத்துடன் வாக்களிக்க முடியும். அரசியல் கட்சியால் நியமித்த தேர்தல் பணியாளர்கள் கண்டிப்பாக தேர்தல் முடியும்வரை தன்னுடைய அடையாள அட்டையினை அணிந்து கொள்ள வேண்டும். வாக்காளர்களுக்கு வழங்கப்படும் அலுவலகம் சாரா அடையாள சீட்டில் (பூத்…
தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலுக்கான அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், பணப்பட்டுவாடாவை தடுக்கும் பொருட்டு வருமான வரித்துறையினரும் பறக்கும் படையினரும் அதிரடியான சோதனயை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, அரசியலில் முக்கிய அரசியல் புள்ளிகளை குறிவைத்து ஆய்வு நடத்தப்படுகிறது. அண்மையில், மக்கள் நீதி கட்சியின் பொருளாளர் சந்திரசேகர், திமுக வேட்பாளர் எ.வ.வேலு, அண்ணாநகர் திமுக வேட்பாளரின் மகன் உள்ளிட்டோர் வீடுகளிலும் அவர்களுக்கு சொந்தமான இடங்களிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டிலும் மருமகன் சபரீசன் வீட்டிலும் தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி வீட்டிலும் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில், தேனி மாவட்டம் போடியில் உள்ள துணை முதல்வர் ஓ.பி.எஸ் அலுவலகம் அருகே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அ.தி.முகவை சேர்ந்த தேனி மாவட்ட ஜெ.பேரவை பொருளாளர் குறிஞ்சி மணி வீட்டில் ஐடி…
உலகிலேயே அதிக விலை உயர்ந்த காய்கறி வகையில் ஒன்றை பிஹார் விவசாயி ஒருவர் உற்பத்தி செய்து அசத்தியுள்ளார். பிஹார் மாநிலம், அவுரங்காபாத் மாவட்டம், கராம்நித் கிராமத்தில் அம்ரேஷ் சிங் வயது (38) என்பவர் வசித்து வருகிறார். விவசாயி ஆன இவர், வாரணாசியில் உள்ள இந்திய காய்கறி ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து ‘ஹாப் ஷூட்ஸ்’ என்ற காய்கறி வகையின் விதைகளை வாங்கி பயிரிட்டுள்ளார். யாரும் எடுக்காத ரிஸ்க்கை எடுத்த அவருக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. தற்போது அவர் உற்பத்தி செய்யும் ‘ஹாப் ஷூட்ஸ்’ என்ற காய்கறியின் விலை ஒரு கிலோ ரூ.1 லட்சத்துக்கு விற்பனை ஆகிறது. இந்த வகை பயிரின் அனைத்து பாகங்களும் பயன் உள்ளதாக இருக்கிறது என கூறப்படுகிறது. இது கனாபசீ குடும்ப வகையைச் சார்ந்தது. மேலும் இதில் இருக்கும் தண்டு, மலர், காய் மற்றும் கனி ஆகிய அனைத்து பொருட்களும் பயனுள்ளதாக இருப்பதால் இத்தகைய முக்கியத்தும் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இது…
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வின் விண்ணப்பத்தை அறிவித்து உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கலாம். பணி: Junior Draughting Officer (Highways Department) காலியிடங்கள்: 177 + 6 பணி: Junior Draughting Officer (Public Works Department) காலியிடங்கள்: 348 பணி: Junior Technical Assistant (Handlooms and Textiles Department) காலியிடங்கள்: 01 சம்பளம்: மாதம் ரூ. 35,400-1,12,400 பணி: J unior Engineer (Fisheries Department) காலியிடங்கள்: 05 சம்பளம்: மாதம் ரூ. 35,900-1,13,500 கல்வி தகுதி: பொறியியல் துறையில் Civil, Architectural Assistantship,Textile Manufacture, Handloom Technology ஆகிய பிரிவுகளில் டிப்ளமோ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். Age limit: 01.07.2021 தேதி அன்று குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு…
கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்ட கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியை கேட்ட அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள். சச்சின் டெண்டுல்கருக்கு மார்ச் 27 ஆம் தேதி கொரோனாவின் லேசான அறிகுறி இருந்ததால் அவர் கொரோனா பரிசோதனை செய்துக்கொண்டார். அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனைத்தொடர்ந்து அவர் தனது வீட்டிலேயே தனிப்படுத்திக்கொண்டார். கடந்த மார்ச் 27 ஆம் தேதி சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும், மேலும் தனது குடும்பத்தில் வேறு யாருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படவில்லை என்றும் கூறியிருந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட சச்சின் ஆறு நாட்களுக்கு பிறகு இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், அனைவரின் பிரார்த்தனைகளுக்கும் நன்றி தெரிவித்து இருக்கிறார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மருத்துவ ஆலோசனையின் படி நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன் என்றும் அவர்…
