Author: gpkumar

இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

சென்னையில் 15 நாட்களுக்கு பிறகு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்று குறைந்து இருக்கிறது. நாடு முழுவதும் சமீபகாலமாக பெட்ரோல், டீசல் விலை முயல் வேகத்தில் அதிகரித்து வந்தது. தற்போதுபெட்ரோல், டீசல் விலை ஆமை வேகத்தில் குறைந்தும் வருகிறது. அந்த வகையில் 15 நாட்களுக்குப் பிறகு சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 15 காசுகள் குறைந்து, 92 ரூபாய் 43 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு லிட்டர் டீசல் விலை 13 காசுகள் குறைந்து, 85 ரூபாய் 75 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read More

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதால், சுமார் நாளொன்றுக்கு 8,000 பேர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தற்போது கொரோனா நோய் தொற்று பரவல் அதிகமாக உள்ளதால், நியாயவிலைக் கடைகளில் பயன்படுத்தப்படும் பயோமெட்ரிக் முறையின் மூலமும் நோய்த் தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று மக்கள் அச்சப்படுகிறார்கள். இந்த பயோமெட்ரிக் முறையினால் கொரோனா நோய் தொற்று அதிகரிக்க கூடும், அதனால் இந்த முறையை மாற்ற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார். அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் தற்போது பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்குப் பதிலாக மாற்று ஏற்பாடுகளை அரசு உடனடியாக செய்ய வேண்டும் என்று மக்கள் சக்தி இயக்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொதுமக்கள் தங்களுடைய விரல் ரேகையைப் பதிவுசெய்வதின் மூலம் நோய் தொற்றும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.…

Read More

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஆரோக்யமான உணவு வகைகளை எடுத்து கொள்வது மிகவும் நல்லது. அந்தவகையில் பழவகைகளையும்,காய்கறிகளையும் நாம் உணவாக எடுத்துக்கொள்கிறோம். இதில் பழங்களை உண்ணும்போது அதன் குணங்கள் பற்றி அறிந்து கொள்வதும் மிகவும் நல்லது. அந்த வகையில் அன்னாசி பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி பார்க்கலாம். அன்னாசி பழத்தை அளவாக சாப்பிடுவதால் நமக்கு நிறைய பயன்கள் கிடைக்கும். இதில் பல உடல்நலத்திற்கு தேவையான பயன்கள் இருப்பது போல சில உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் காரணிகள் இருக்கிறது. இயற்கையாகவே அன்னாசி பழத்தில் சர்க்கரை அதிகமாக இருக்கும். எனவே சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இந்த பழம் நல்லது கிடையாது. இந்த பழம் நாம் உண்ணும் சில மருந்துகளோடு சேர்ந்து கொண்டு நமக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும். மேலும் பழுக்காத அன்னாசி பழத்தை சாப்பிட்டாலோ அல்லது ஜூஸாக செய்து சாப்பிட்டாலும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஆபத்து ஏற்படும். இந்த பழத்தை அதிகமாக…

Read More

மத்திய அரசு 2015 ஆம் ஆண்டில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க பெற்றோரை ஊக்குவிக்கும் வகையில் சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY) திட்டத்தை தொடங்கியது. இந்த கணக்கினை 10 வயதிற்குள் உள்ள பெண் குழந்தைகளுக்கு, பெற்றோர் அல்லது காப்பாளரின் உதவியுடன் தொடங்கலாம். இந்திய தபால் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஒரு பெற்றோர் இரு பெண் குழந்தைகளின் பெயரில் இந்த திட்டத்தைத் தொடங்கலாம். இத்திட்டத்தில் ஓராண்டில் குறைந்தபட்சமாக ரூ.1,000 முதல் அதிகபட்சமாக ரூ.1,50,000 வரை முதலீடு செய்யலாம். வட்டி விகிதம் முதலீடு செய்யும் பணத்திற்கான வட்டி விகிதம் ஏப்ரல் – ஜூன் 2020 நிலவரப்படி 7.6% ஆக இருந்தது. இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் காலண்டுக்கு ஒரு முறை அரசால் மாற்றம் செய்யப்படும். இது முதலீட்டுக்கு நஷ்டமில்லாமல், கணிசமான லாபத்தினை கொடுப்பதால், பெண் குழந்தைகளின் வருங்காலத்திற்கு உதவியாக இருக்கும். இந்த சேமிப்புத் திட்டத்தை 14 ஆண்டுகள் வரை தொடர முடியும்.…

Read More

கோடைக் காலத்தில் வெயில்,வியர்வை சுரப்பதன் காரணமாக பலரும் சருமப் பிரச்னையால் அவதிப்படுவர். உடலில் டீஹைடிரேஷன் அதாவது நீர்ச்சத்து குறையும்போது சருமத்திற்குத் தேவையான நீர் கிடைக்காதபோது சருமம் வறண்டு காணப்படும். மேலும் வெயிலில் செல்வதால் அலர்ஜி, உடலில் தடிப்புகள், பருக்கள்,வியர்க்குரு போன்றவை ஏற்படும். இயற்கையாக இதனை சரிசெய்ய பல பொருள்கள்,வழிகள் இருக்கின்றன. இயற்கை பொருட்களான தேன் மற்றும் தயிர் இரண்டும் வெயிலிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க பெரிதும் உதவுகிறது. அதேபோல் பாலாடியில் சிறிதளவு மஞ்சள் சேர்த்து முகத்திற்கு பூசி வந்தால் முகம் பளபளப்பை பெரும். ஒரு ஸ்பூன் தயிர், அரை ஸ்பூன் தேன் இரண்டையும் நன்றாகக் கலந்து முகத்தில் தடவவும். ஒரு 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரால் கழுவவும். தேன் மற்றும் தயிர் இரண்டும் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தைத் தக்க வைக்கிறது. இதனைச் செய்யும்போது உங்கள் வறண்ட சருமம் பளிச்சென்று ஆகிவிடும். மேலும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளையும், அழுக்குகளையும் மற்றும்…

Read More

ஆர். பார்த்திபன் இயக்கி , நடித்த ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படம் 2019-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தின் விமர்சனங்கள் சிறப்பான வரவேற்பை பெற்றது. மேலும் மத்திய அரசு இந்த படத்திற்கு இரண்டு தேசிய விருதுகளை அறிவித்தது. இதை தொடர்ந்து இயக்குநர் பார்த்திபன் ‘இரவில் நிழல்’ என்ற படத்தை இயக்கவுள்ளார். இந்த படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட உள்ளார்கள். மேலும் இப்படத்தில் பார்த்திபனே நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த படத்தில் மற்ற கதாபாத்திரங்கள் இடம்பெறுமா என்பது குறித்து தகவல் ஏதும் வெளியாக வில்லை. இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றிருந்தார். அப்போது பார்த்திபன் இயக்கும் ‘இரவின் நிழல்’ படத்திற்கு இசையமைக்கும் தகவலை அவர் அங்கே உறுதி செய்தார். இதை தொடர்ந்து இயக்குநர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் ஏ.ஆர்.ஆர்…

Read More

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் +2 பொதுத்தேர்வை ஒத்தி வைப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை அடுத்து தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மே 3-ஆம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பை குறைக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் மே 3-ஆம் தேதி நடைபெற இருந்த +2 தேர்வு மொழிப்பாடம் மட்டும் மே 31-ஆம் தேதி நடைபெறும் என்று தமிழக அரசு நேற்று அறிவித்தது. மே 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் தேர்வு நடத்துவது சாத்தியம் இல்லை. இதனால் முதல் தேர்வு மே 31-ஆம் தேதியும், இதர தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில்…

Read More

ஃப்ளிப்கார்ட் தனது பொருட்களைக் குறித்த நேரத்தில் வாடிக்கையாளர்களிடம் சேர்க்க அதானி நிறுவனத்துடன் இணைந்துள்ளது. ஃப்ளிப்கார்ட் உலகின் மிகப்பெரிய இ மாகர்ஸ் நிறுவனமான விளங்குகிறது. தற்போது இந்தியாவில் ஃப்ளிப்கார்ட் நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனத்துக்கு பல லட்சக்கணக்கில் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இந்நிறுவனம் அனைத்து வகையான பொருட்களையும், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பொருட்களையும் வர்த்தகம் செய்து வருகிறது. தற்போது அதானி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்துடன் ஃப்ளிப்கார்ட் கை கோர்த்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில் தங்கள் பொருட்களைக் கொண்டு சேர்க்க அதானி நிறுவனத்துடன் இணைந்துள்ளதாக ஃப்ளிப்கார்ட் நிறுவனம் கூறியுள்ளது. இதற்காக மும்பையில் 5,34,000 சதுர அடியில் ஒரு சரக்கு முனையம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதனால் மேற்கு இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களை வழங்க இந்நிறுவனம் உத்தேசித்து இருக்கிறது. இந்த சரக்கு முனையம் வரும் 2022 ஆம் ஆண்டு மூன்றாம் நிதியாண்டு காலாண்டில் செயல்பட இருக்கிறது. மேலும் அதானி கனெக்ஸ் பி லிமிடெட் டேட்டா சேவை நிலையமும் சென்னையில்…

Read More

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1.68 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் கட்ட அலைவீச தொடங்கி தற்போது இது அதிவேகமாக பரவி வருகிறது. இதற்கு முன் ஒரு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரு லட்சத்துக்கும் குறைவாகவே இருந்தது. இது கடந்த சில நாட்களாக 1.5 லட்சத்திற்கும் மேல் பதிவாகி வருகிறது. கொரோனா வைரஸ் முதல் அலையை விட இரண்டாம் அலை அசுர வேகத்தில் பரவிவருகிறது. தற்போது மக்கள் மத்தியில் கொரோனா வைரஸ் பீதியை கிளப்பிவருகிறது. மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு அறிவுறுத்தி உள்ளது. இதனால் அந்தந்த மாநில அரசுகள் அதிரடியாக கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் நாளுக்கு நாள் அதிகரித்த கொண்டே இருக்கிறது . கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1.68 லட்சம் பேருக்கு கொரோனா…

Read More

நாசா நிர்வாகி ஸ்டீவ் ஜுர்சிக், என்பவர் சந்திரனில் முதன் முதலில் பெண்ணை தரையிறைக்கினர். இது மட்டுமல்லாமல், ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் கீழ் முதல் நபராகவும் இருக்க முயன்றார். 2024 ஆம் ஆண்டில் ஆர்ட்டெமிஸ்-III பணி நடைபெற உள்ளது. அதில் முதலில் பெண்ணையும் அடுத்த ஆணையும் சந்திரனுக்கு அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2022 நிதியாண்டுக்கான விருப்பத்தின் செலவினங்களை ஜோ பிடென் – கமலா ஹாரிஸ் நிர்வாகம் ஜனாதிபதியின் முன்னுரிமைகளை நேற்று சமர்ப்பித்தது. ஜனாதிபதியின் வேண்டுகோள்படி, பூமியின் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை கண்காணிப்பதற்கும், அதன் நிலவரத்தை நன்கு புரிந்துகொள்வதற்கும், கணிப்பதற்கும் நாசாவின் திறனை அதிகரிக்கிறது. அமெரிக்காவின் இரு கட்சி நிலவை செவ்வாய் கிரக விண்வெளி ஆய்வு திட்டத்திற்கு தொடர்ந்து முன்னேற்றுவதற்கு தேவையான ஆதாரங்களையும் இது வழங்குகிறது, இதில் முதல் பெண் மற்றும் முதல் நபரை தரையிறக்குவது உட்பட ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் கீழ் சந்திரனில் நிறம் உள்ளது, இதைப்பற்றி ஜூர்சிக் நேற்று ஒரு அறிக்கையில் கூறினார். இந்த…

Read More

தமிழக சட்டமன்ற தேர்தலை யொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்த போது திருப்பத்தூர் மாவட்டத்தில் வாகன சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்த 80 பேருக்கு ரூ.1.19 கோடி திருப்பி வழங்கபட்டு இருக்கிறது . தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான உடனே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு கொண்டு வரப்பட்து இருந்தது. தேர்தல் நடத்தை விதிமுறையின்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் 14 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் 42 நிலை கண்காணிப்புக்குழுவினர், 75 தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தார்கள். தேர்தல் ஆணையம் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்லுதல், ரூ.10 ஆயிரத்துக்கு மேல் பொருட்களை கொண்டு செல்லுதல் போன்றவைக்கு தடை விதித்திருந்த நிலையில், ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட பணம், விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட பொருட்களை தேர்தல் பறக்கும் படையினரும், நிலை கண்காணிப்பு குழுவினரும்…

Read More

நீலநிற நிறம் கொண்ட, ஐஸ்கிரீம் சுவையில் ப்ளூ ஜாவா வாழைப்பழங்கள் கண்டறியப்பட்டுள்ளது. வாழைப்பழம் அதிக ஆரோக்கியம் மற்றும் சத்து நிறைந்த பிரபலமான பழங்களில் ஒன்று .அனைத்து மக்களாலும் உலகளவில்  அதிகமாக விரும்பி சாப்பிடப்பட்டு வருகிறது. ஆனால் சமீப காலமாக ஒரு புதிய வகை வாழைப்பழத்தை பற்றி அதிகம் பேசப்பட்டு வருகிறது.  கற்பூரவள்ளி, மோரிஸ், பச்சை வாழை, பூம்பழம், ரஸ்தாளி, செவ்வாழை என்று  பல வாழைப்பழ வகைகள் உள்ளது. ஒவ்வொரு பழமும்  தனித்துவமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. மேலும்,செவ்வாழை மற்றும்  பச்சை வாழை தவிர்த்து மற்ற அனைத்து வகைகளும் மஞ்சள் நிற தோலை கொண்டிருக்கும் என்பது அனைவர்க்கும் தெரித ஒன்றே  . ஆனால், சமீபத்தில் நீலநிற நிறம் கொண்ட  ப்ளூ ஜாவா வாழைப்பழங்கள் கண்டறியப்பட்டுள்ளது. தோல் மட்டுமல்லாமல்  பழம் முழுவதுமே நீல நிறத்தில் இருப்பது தான் ஆச்சர்யம். தற்போது இணையத்தில்  இந்த பழத்தின் புகைப்படம்  வைரலாகி வருகிறது. மேலும் இது ஐஸ்கிரீம் போன்ற…

Read More

கோடைகாலம் என்றாலே மே மாதம் தான் அதாவது தமிழ் மாதம் சித்திரையில் தான் கோடைவெயிலானது கொளுத்து விட்டு எரியும் என்றுதான் கேள்விப்பட்டு இருக்கிறோம்.ஆனால் இந்த காலத்தில்  தாங்க முடியாத அளவிற்கு வெயிலானது மார்ச் மதமே தொடங்க ஆரபித்துவிடுகின்றது. வீட்டில் கூட இருக்க முடியாத அளவிற்கு வெயிலானது கொளுத்துகிறது,வெயிலின் அளவு அதிகரிக்க அதிகரிக்க நம் உடலில் வெப்பத்தின் அளவு அதிகமாகி, நமக்கு வியர்வையை மூலையில் இருக்கும் ஹிப்போதலாமஸ் சுரக்கச்செய்கிறது, இதனால் உடலில் நீர் குறைத்து மயக்கம் அடைய செய்கிறது. வெப்ப தளர்ச்சி சாதாரணமாக வெப்பமானது உடலில் 98.4 டிகிரி பாரன்ஹீட், ஆனால் கோடைகாலத்தில் வெப்பம் அதிகமாகும் போது நம் உடலின் வெப்பநிலை 106 டிகிரியாக உயர்ந்து உடல் சோர்வு,அதிகப்படியான தண்ணீர்தாகம், மயக்கம்,தலைசுற்றுதல் போன்றவை ஏற்படுவதோடு சோடியம், பொட்டாசியம் மற்றும் mg போன்ற உப்புகள் வெளியேறி அதன் மூலம் உடல் சோர்வு அடைகிறது இதை வெப்ப தளர்ச்சி என்கிறோம். வெப்ப மயக்கம் அதிக அளவு…

Read More

பொன்னியின் செல்வன் எனும் நாவல் , எழுத்தாளர் கல்கியின் மாஸ்டர் பீஸ் நாவலாகவும் அனைவரும் விரும்பி படித்துவந்த நாவலாக இருக்கிறது. தற்போது பொன்னியின் செல்வன் என்ற தலைப்பில் திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் திரைக்கதை, வசனத்தை ஜெயமோகன் எழுத, கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். இயக்குனர் மணிரத்னம் இத்திரைப்படத்தை இயக்கிவருகிறார். மிக பிரமாண்டமாக இந்தத் திரைப்படம் மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தின் சில காட்சிகளை மத்திய பிரதேசத்தில் படமாக்க திட்டமிட்டிருந்தவர்கள், கோவிட் வேகமாக பரவி வருவதால் அந்தத் திட்டத்தை கைவிட்டனர். சென்னை மற்றும் ஹைதராபாத்தில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இந்நிலையால், பொன்னியின் செல்வன் படத்தின் 70 சதவீத படப்பிடிப்பு நிறைவுபெற்றிருப்பதாகவும், 2022-ல் பொங்கலை முன்னிட்டு இந்த படம் திரைக்கு வரும் என்று சுல்தான் புரமோஷனில் கலந்து…

Read More