ஹைலைட்ஸ்: ஐ.ஜி.சி.ஏ.ஆர் நிறுவனம் 13 பதவிகளுக்கான 337 காலிபணியிடங்களை அறிவித்துள்ளது. அனைத்து பதவிக்கும் விண்ணப்பிக்க கடைசி தேதி 14.05.2021. அதேபோல் அனைத்து பதவிக்கும் 15.04.2021 அன்று முதல் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. வேலை பார்க்கவேண்டிய இடம் சென்னை, கல்பாக்கம். 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை ஐ.ஜி.சி.ஏ.ஆர் (IGCAR) Indira Gandhi Centre for Atomic Research நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஐ.ஜி.சி.ஏ.ஆர் நிறுவனம் கடந்த ஏப்ரல் -15 அன்று வேலைக்கான அனைத்து விவரங்களையும் அறிவித்துள்ளது. புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த ஆண்டிற்கான மொத்தம் காலிபணியிடங்களை ஐ.ஜி.சி.ஏ.ஆர் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த காலிபணியிடங்கள் குறித்த முழு தகவல்களையும் கீழே பார்ப்போம். இந்த பணிகளுக்கு https://www.igcar.gov.in/ என்ற ஐ.ஜி.சி.ஏ.ஆர்-ரின் அதிகார பூர்வ இணையதளத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்களை பார்ப்போம். ஐ.ஜி.சி.ஏ.ஆர் நிறுவனம் 13 பதவிகளுக்கான 337 காலிபணியிடங்களை வெளியிட்டுள்ளது. வேலை பார்க்கவேண்டிய இடம் சென்னை, கல்பாக்கம்.…
Author: gpkumar
ஹைலைட்ஸ்: மே 2ஆம் தேதி 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை அன்று கடைபிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது. வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அளித்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அன்று கடைபிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது. மே 2ஆம் தேதி 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு வாக்கு எண்ணிக்கையை பாதுகாப்பாக நடத்த இந்திய தலைமை தேர்தல் ஆணையம், அந்தந்த மாநில தேர்தல் ஆணையங்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் படி, மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை அன்று கடைபிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.…
ஹைலைட்ஸ்: 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வரும் மே மாதம் 1ஆம் தேதியிலிருந்து கொரோனா தடுப்பூசி. இன்று மாலை 4 மணி முதல் 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யலாம். ஒரு செல்போன் நம்பரை பயன்படுத்தி நான்கு பேருக்கு முன்பதிவு செய்யலாம். 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வரும் மே மாதம் 1ஆம் தேதியிலிருந்து கொரோனா தடுப்பூசி செலுத்துவதாக மத்திய அரசு தெரிவித்து இருந்தது. இதைத்தெடர்ந்து தற்போது 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள இன்று மாலை 4 மணி முதல் அரசின் இணைத்தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தடுப்பூசி மையங்களில் 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கூட்டம் கூட வாய்ப்புள்ளது. தடுப்பூசி மையங்களில் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்க்காக மத்திய அரசு கொரோனா தடுப்பூசி முன்பதிவு செய்ய COWIN என்ற இணைத்தளத்தையும், ஆரோக்ய சேது செயலியையும் அறிமுகப்படுத்தி உள்ளது. 18 வயதிற்கு…
ஹைலைட்ஸ் : இந்தியாவில் கொரோனா நோய் தொற்று தினமும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. கொரோனா நோய் தொற்று பாதிப்பு 15 சதவிகிதத்திற்கும் மேல் உள்ள 150 மாவட்டங்களில் அடுத்த சில வாரங்களுக்கு முழு பொதுமுடக்கம். தமிழகத்தில் கோவை, சென்னை,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 15 சதவிகிதத்திற்கும் மேல் கொரோனா நோய் தொற்று பாதிப்பு. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து கொண்டு வருவதால் தற்போது மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா நோய் தொற்று பாதிப்பு 15 சதவிகிதத்திற்கும் மேல் உள்ள 150 மாவட்டங்களில் முழு பொதுமுடக்கம் அடுத்த சில வாரங்களுக்கு அமல்படுத்த உள்ளதாக மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக மக்கள் பீதியில் உறைந்துள்ளார்கள். அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் பல தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதனை மக்கள்…
ஹைலைட்ஸ்: கீழாநெல்லியில் எண்ணற்ற மருத்துவக் குணங்கள் உள்ளது. கீழாநெல்லியின் இலையில் ‘பில்லாந்தின்’ என்னும் மூலப்பொருள் உள்ளது. கீழாநெல்லி மஞ்சள் காமாலை, மாலைக் கண் நோய், கண் பார்வை மங்குதல் ஆகியவற்றை குணப்படுத்தும். பொதுவாக எந்தவித பராமரிப்பும் இல்லாமல் தானாகவே வளரகூடிய செடிகளில், எண்ணற்ற மருத்துவக் குணங்கள் உள்ளது. இதை நாம் அலட்சியப்படுத்தி விடுகிறோம். இந்தவகையில் அற்புதமான மூலிகைக் கீரைதான் ‘கீழாநெல்லி’. கீழாநெல்லியை கீழ்வாய் நெல்லி, கீழ்க்காய் நெல்லி என்றும் அழைப்பார்கள். இந்த குறுச்செடி நீர்நிலைகள், வயல் வரப்புகள் மற்றும் பாழ் நிலங்களில் வளரக்கூடியது. இந்த செடியின் இலைகள் புளியமரத்தின் இலைகளைப் போலவே இருக்கும். இந்த செடியில் பூக்களும் காய்களும் இலைகளுக்குக்கீழ் காணப்படும். கீழாநெல்லியின் இலையில் ‘பில்லாந்தின்’ என்னும் மூலப்பொருள் இருக்கும். மேலும் இதில் பொட்டாசியம் சத்து அதிகமாகக் காணப்படும். இந்த செடிகளின் இலைகளுக்குக் கீழே நெல்லிக்காய் வடிவத்தில் காய் இருப்பதால் இதை ‘கீழாநெல்லி’ என்று அழைக்கிறோம். இதேபோல் இலைகளுக்கு மேலே காய்…
ஹைலைட்ஸ்: ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி. ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க 5 நிபுணர்கள் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. ஆக்சிஜன் விநியோகத்தில் தமிழகத்திற்கு முன்னுரிமை இல்லை. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது. இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு ஆக்சிஜன் தேவை என்பதை பற்றிய விவரம் மத்திய அரசிடம் உள்ளது. அதனால் ஆக்சிஜன் விநியோகத்தில் தமிழகத்திற்கு முன்னுரிமை வழங்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாடு இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் உற்பத்திக்காக வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையில் தமிழகமே ஸ்டெர்லைட் ஆலையை ஏற்று நடத்தலாம் என்று யோசனை கூறியது. இதைத்தொடர்ந்து , நேற்று தமிழக முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி…
ஹைலைட்ஸ்: ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கால், கொரோனா ஏற்றத்தின் வேகம் சற்று குறைந்துள்ளது. சில நாட்களுக்கு மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம். ரெம்டெசிவர் மருந்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு தினங்களாக கொரோனா பரவல் வேகம் சற்று குறைந்துள்ளதாக சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார். இது தமிழக மக்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது. சென்னை, தண்டையார் பேட்டையில் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் பேசியது , ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கால், கடந்த இரண்டு நாட்களாக கொரோனா ஏற்றத்தின் வேகம் சற்று குறைந்துள்ளதாக கூறினார். மேலும் அடுத்த சில நாட்களுக்கு மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம். மாஸ்க் போடாமல் வெளியே வராதீர்கள் என்றும் கூறினார். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை மக்கள் குறைத்து கொள்ளவேண்டும். தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுககளை முழுமையாக கடைப்பிடித்தால் கொரோனாவை முழுமையாக குறைந்துவிடலாம் என்றும் தெரிவித்து இருக்கிறார்.…
ஹைலைட்ஸ்: இரும்புச் சத்து குறைபாடு இருந்தால் உங்கள் சருமம் வெளிரிய நிறத்தில் இருக்கும். இரும்புச் சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம். கர்ப்பிணி பெண்களுக்கு இரும்புச் சத்துக் குறைபாடு அதிகமானால், தாய்-சேய் இருவருக்கும் பாதிப்பு. இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவதற்கான முக்கிய காரணம்,பொதுவாக நாம் உண்ணும் உணவில் இரும்புச்சத்து குறைவாக இருப்பது தான். இரும்புச்சத்து உறிஞ்சுதலில் கால்சியம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் 80 சதவிகிதம் பேருக்கு இரும்புச் சத்துக் குறைபாடு உள்ளதாம். இரும்புச் சத்துக் குறைபாடு அதிகரிக்கும்போது, அது ரத்தசோகை ஏற்படுகிறதாம். இரும்புச் சத்துக் குறைபாடு ஆண்களைவிட பெண்களுக்கு தான் அதிகம் இருக்கிறது. இருபாலரின் உடல் ஆற்றல் அதிகரிக்க, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இரும்பு சத்து மிகவும் அவசியமானதாகும். தினசரி நாம் சரிவிகித உணவை எடுத்து கொள்வதன் மூலம் இரும்புச் சத்துக் குறைபாட்டை போக்கலாம். நம் உடலில் ஹீமோகுளோபின் குறைய காரணம் இரும்புச் சத்து தான். பொதுவாக இரும்பு…
ஹைலைட்ஸ்: தமிழகத்தில் திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிறன்று முழுநேர ஊரடங்கும் அமுலுக்கு வந்தது. ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடக்கூடாது, பார்சலுக்கு மட்டும் அனுமதி. நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் சலூன் கடைகள் திறக்க அனுமதி இல்லை. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்தவகையில் நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழக அரசு திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிறன்று முழுநேர ஊரடங்கும் அமுல்படுத்தி உள்ளது. மேலும் தமிழக அரசு இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகள்: ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடக்கூடாது, பார்சலுக்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளது. அதுவும் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், நற்பகல் 12 மணி முதல் 3 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு…
ஹைலைட்ஸ்: மே, ஜூன் ஆகிய இரண்டு மாதங்களுக்கு தலா 5 கிலோ இலவச தானியங்கள் 5 கிலோ இலவச உணவு தானியங்களுக்காக மத்திய அரசு 26 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியது. 80 கோடி ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் உணவு தானியங்கள் இலவசம் என மத்திய அரசு அறிவிப்பு நாடு முழுவதும் இரண்டாம் அலை கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு பிறப்பித்து உள்ளது. அதேபோல் நேரக்கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.மேலும் உயர்மட்ட குழுவினருடன் ஆலோசனையும் நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில அரசுகள் ஆக்சிஜன் தடையின்றி கிடைக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார். மாநில முதல்வர்களுடன் நேற்று மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.…
ஹைலைட்ஸ்: ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல். தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வேதாந்தா நிறுவனத்துக்குச் சொந்தமான தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்படுவதாகக் கருதி கிராம மக்கள் போராட்டத்தில் இறங்கினர். அப்போது போராட்டத்தின் உச்சக்கட்டமாக கிராம மக்கள் 2018-ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி பேரணி ஒன்றை நடத்தினார்கள். இந்த பேரணி கலவரமாக மாறியது. இந்த கலவரத்தின் போது கிராம மக்கள் 13 பேர் காவல் துறைனரால் சுட்டு கொல்லப்பட்டார்கள். இதற்கு பிறகு ஸ்டெர்லைட் ஆலைக்குச் சீல் வைக்கப்பட்டது. நாடு முழுவதும் இரண்டாவது அலையாக கொரோனா வைரஸ் பரவிவருவதால், தற்போது மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதாக புகார் எழுந்து வருகிறது. இந்த பிரச்சனையை தீர்க்க மத்திய அரசு மேற்கொண்டு பல முயற்சிகளை வருகிறது.…
ஹைலைட்ஸ்: தினமும் இஞ்சி தேநீர் அருந்தி வந்தால் தொண்டை கரகரப்பு நீங்கும். இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும் இஞ்சி தேநீர். வயிறு கோளாறு, குமட்டல், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும் இஞ்சி தேநீர். தினமும் ஒரு கப் இஞ்சி தேநீர் (இஞ்சி ஹெர்பல் டீ) குடித்து வந்தால் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த தேநீரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் இருக்கிறது. இந்த அமிலங்கள் நமது உடலில் புற்றுநோய் மற்றும் அலர்ஜிகள் ஏற்படுவதைத் தடுக்கிறது. வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் அமீனோ ஆசிட்கள் இஞ்சி தேநீரில் அதிகமாக இருக்கும். இவை இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து இதயக் கோளாறு பிரச்னைககள் வராமல் தடுக்கிறது. மேலும் இது கெட்ட கொழுப்புகளையும் கரைக்கிறது. மாரடைப்பு, பக்க வாதம் போன்ற பிரச்சனைகளையும் வராமல் தடுக்கிறது. மேலும் இது நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகரிக்கிறது. கல்லீரல் பிரச்சனைகள்,வயிறு கோளாறு, குமட்டல், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் வராமல்…
ஹைலைட்ஸ்: நூக்கலில் இருக்கும் சத்துக்கள் நம் உடலுக்கு அதிக அளவு நன்மை தரும். நூக்கல் வயிற்று பிரச்சனைகளை தீர்க்கும் தன்மைக் கொண்டது. நம் உடலில் நரம்பு தளர்ச்சி ஏற்படுவதை தவிர்க்கும். அன்றாட உணவில் நாம் காய்கறிகளை சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. பெரும்பாலான காய்கறிககளை நாம் சமைத்து சாப்பிடுவதே இல்லை. அந்தவகையில் இன்றைய காலகட்டத்தில் தாய்மார்கள் பலரும் நாட்டு காய்கறிகளை விரும்பி சமைப்பதில்லை. நாட்டு காய்கறி வகையில் நூக்கல் காய்கறியும் ஒன்றாகும். நூக்கல் என்ற பெயரையே கேள்விப்பட்டது இல்லை என்று சிலர் கூறுவதை நாம் கேள்வி பட்டுயிருப்போம். ஆனால் நூக்கலில் இருக்கும் சத்துக்கள் நம் உடலுக்கு அதிக அளவில் நன்மைகளை தரக்கூடியது என்று பலருக்கும் தெரியாது ஒன்றாகும். நாம் தினமும் நூக்கலை சமைத்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பார்ப்போம். நூக்கலை அடிக்கடி நம் உணவில் சமைத்து சாப்பிட்டு வந்தால் நம் உடலில் இருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம். மேலும் இதில் நீர்ச்சத்து…
ஹைலைட்ஸ்: ஒரேநாளில் 3 லட்சத்து 14 ஆயிரத்து 835 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி. இந்தியாவில் நேற்று ஒரேநாளில் கொரோனாவால் 2,104 பேர் உயிரிழப்பு. தற்போது மருத்துவமனைகளில் படுக்கைகள் கூட இல்லாத சூழ்நிலை. நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக கொரோனா நோய் தெற்று அதிகரித்து கொண்டே வருகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 3 லட்சத்து 14 ஆயிரத்து 835 பேருக்கு கொரோ னா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரேநாளில் இந்தியாவில் மூன்று லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாவது இதுவே முதல்முறையாகும். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்தமாக எண்ணிக்கை 15,930,965 ஆக உயர்ந்துள்ளது. அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. நேற்று ஒரேநாளில் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் 62 ஆயிரத்து…
