Author: gpkumar

இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

பொன்ராம் இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் நிறுவனம் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள திரைப்படத்தை தயாரிக்கவுள்ளது என்ற தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இதையடுத்து நேற்று விஜய் சேதுபதி நடிக்கவுள்ள திரைப்படம் சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்று அதிகாரபூர்வ அறிவிப்பு ஓன்றும் வெளியாகியுள்ளது. தற்போது சன்பிக்சர்ஸ் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தை தயாரித்து கொண்டுயிருக்கிறது. அடுத்ததாக இந்நிறுவனம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படத்தை தயாரிக்க உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை சன்பிக்ஸர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது .இந்த படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கவுள்ளார். தமிழ் திரையுலகில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. தற்போது ஒரே நேரத்தில் தமிழ்சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினிகாந்த், விஜய், சூர்யா போன்ற பிரபல நடிகர்களின் படங்களை தயாரித்து வருகிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம் என்ற செய்தி அனைவரும் தெரிந்ததே. தற்போது இந்த லிஸ்டில் விஜய்செதுபதியின் திரைப்படமும் இணைந்துள்ளது. தமிழ்…

Read More

தமிழகத்தில் ரயில் நிலையங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு பிளாட்பார்ம் டிக்கெட் விலையை தெற்கு ரயில்வே அதிரடியாக உயர்த்தி இருக்கிறது. ரயில் நிலையங்களில் உள்ளே செல்வதற்கு பிளாட்பார்ம் டிக்கெட் எனப்படும் அனுமதிச் சீட்டு கட்டாயமாக வைத்திருக்கனும். ரயில்வே வாரியம் கடந்த 2015ஆம் ஆண்டில் ரூ.5ஆக இருந்த பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணத்தை ரூ.10ஆக உயர்த்தியது. கூட்ட நெரிசல் உள்ளிட்ட ஏதேனும் குறிப்பிட்ட தேவை இருக்கும் போது பிளாட்பார்ம் டிக்கெட்டின் விலையை ரூ.10க்கும் அதிகமாக நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று அந்தந்த ரயில்வே பிரிவுகளுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட்டின் விலையை ரூ.10லிருந்து ரூ.15ஆக தெற்கு ரயில்வே உயர்த்தியது. இது இடைக்கால உத்தரவாக இருந்தது. அப்போது கோடை கால கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே விளக்கம்…

Read More

தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.இதனால் மாநிலங்களுக்கு இடையே நடக்கும் ஜூனியர் அளவிலான கிரிக்கெட் போட்டிகளை இந்த ஆண்டு மே மாதம் வரை ரத்து செய்ய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உத்தரவிட்டுள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்திருந்த நிலையில், பிசிசிஐ முஷ்டாக் அலி கோப்பை மற்றும் விஜய் ஹசாரே கோப்பைகான போட்டிகள் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார்கள். அப்போது கிரிக்கெட் வீரர்கள் அனைவரையும் பயோ பபுள் சூழலுக்குள் வைத்து பிறகு போட்டியை நடத்தி முடித்தார்கள் . தற்போது பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. தற்போது டெல்லி,மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது . இதனால் மாநிலங்களுக்கு இடையே நடத்தப்படும் ஜூனியர் அளவிலான கிரிக்கெட் போட்டிகள் அனைத்தையும் இந்த ஆண்டு மே மாதம் இறுதிவரை ரத்து செய்ய வேண்டும் என்று பிசிசிஐ செயலாளர்…

Read More

இந்த ஆண்டு ஆஸ்கர் விழாவை நடிகை பிரியங்கா சோப்ராவும் அவருடைய கணவரான பாடகர் நிக் ஜோனாசும் தொகுத்து வழங்க உள்ளார்கள். உலகத்திலேயே மிக உயர்ந்த விருதான ஆஸ்கார் விருது சினிமா துறையில் வழங்கப்படுகிறது. தற்போது 93வது அக்கடமி அவார்ட்ஸ் வழங்கும் விழாவில் நாமினிகளை பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவர் நிக் ஜோனசும் அறிவிக்க உள்ளார்கள். பொதுவாக பிப்ரவரி மாதம் நடக்கும் இந்த அகடமி விருது நிகழ்ச்சி கொரோனா காரணமாக இந்த ஆண்டு ஏப்ரல் 25 -ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுயுள்ளது. இந்த முறை விழா வழக்கம் போல நடத்தப்பட்டாலும் கொரோனா காரணமாக குறைந்த எண்ணிக்கையிலேயே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ளார்கள். இருப்பினும் நேரடியாக சமூக ஊடகங்களின் மூலமாக இந்நிகழ்ச்சியை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரியங்கா சோப்ரா 2016ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில் விருது கொடுப்பதற்காக கலந்து கொண்டார் , இந்த ஆண்டு பிரியங்கா சோப்ரா ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட படங்களின்…

Read More

இந்திய மக்கள் முன்னேற்ற கட்சியின் தலைவர் அர்ஜூனமூர்த்தி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடபோவதில்லை என்று அறிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்த போது ரஜினிகாந்தின் நண்பர் அர்ஜூனமூர்த்தி பாஜகவில் இருந்து விலகி ரஜினி தொடங்க இருந்த அரசியல் கட்சிக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். பிறகு ரஜினிகாந்த் அரசியலுக்கு குட் பை சொல்லிவிட்டார். இதனால் அர்ஜூனமூர்த்தி இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி என்ற கட்சியைத் தொடங்கினார். பின்னர் அக்கட்சியின் சின்னமாக ரோபோவை அறிவித்திருந்தார். மேலும் தேர்தல் அறிக்கையையும் அவர் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று அறிக்கை வாயிலாக தெரிவித்து உள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக அரசியலில் ஒரு மாற்றத்திற்க்காவும் , தமிழ் மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்வதற்கும், ஒரு முற்போக்கான மற்றும் நேர்மையான அரசியல் கட்சியின் வலுவான தேவையும் தான், ஒரு புதிய அரசியல் கட்சியான நமது…

Read More

அனைத்து வங்கிகளும் தனியார் மயமாக்கப்படாது, மேலும் அனைத்து வங்கி ஊழியர்களின் நலன்களும் கவனிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கி ஊழியர்களுக்கு உறுதி அளித்துள்ளார். அனைத்து பொதுத்துறை வங்கிகளும் தனியார் மயமாக்கப்படாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்து உள்ளார். மார்ச் 16ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடு முழுவதும் அனைத்து வங்கிகளும் தனியார் மயமாக்கப்படாது என்று கூறினார். மேலும் வங்கிகள் தனியார் மயமாக்குவது என்ற முடிவு திட்டமிட்ட ஒன்று தான் என்றும், எல்லா பொதுத்துறை வங்கிகளுமே தனியார்மயமாக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார். தனியார் வசம் தரப்படும் வங்கிகளைப் பொறுத்தவரையில், வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரின் நலனும் காக்கப்படும் என்றும் எந்தச் சூழலிலும் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும் நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார். கடந்த மார்ச் 15 மற்றும் 16 ஆம் தேதி மத்திய அரசு…

Read More

அஜித்தின் ’வலிமை’ படத்தின் அப்டேட் கேட்டு வந்த ரசிகர்களுக்கு ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தேதியை இன்று தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் போனி கபூருக்கு போஸ்டர் அடித்து நன்றி தெரிவித்து வருகிறார்கள். ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் வெற்றிக்குப்பிறகு போனி கபூர், அஜித்,ஹெச்.வினோத் கூட்டணி மறுபடியும் ‘வலிமை’ படத்தில் இணைந்துள்ளார்கள். அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடித்துள்ளார். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும் இப்படத்தின் அப்டேட்டை கடந்த ஒரு வருடமாக ரசிகர்கள் கேட்டுவந்த நிலையில், தயாரிப்பாளர் போனிகபூர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், அஜித்தின் 50-வது பிறந்தநாள் மே 1 ஆம் தேதி ’வலிமை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதனால், அஜித் ரசிகர்கள் உற்சாகத்திலும் மகிழ்ச்சியிலும் மிகுந்து இருக்கிறார்கள். நேர் கொண்ட பார்வை படம் இயக்குநர் வினோத்துக்கு நல்ல பெயரை சம்பாதித்து கொடுத்தது.…

Read More

பருவக்கால மாற்றங்கள் உருவாகும் போது உடல் ஆரோக்கியமும் மாறுப்படும். குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு கோடைக்கால நோய்கள் தாக்கம் அதிகம் இருக்கும். நாம் தற்போது கோடையை எதிர்நோக்கி கொண்டிருக்கிறோம். இந்த சூழலில் உடல் ஆரோக்கியத்திற்காக வளரும் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் மீது நாம் தனிகவனம் செலுத்த வேண்டும். பொதுவாக கோடைகால நோய்களை பற்றி நாம் தெரிந்துகொண்டால் சில நோய்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளலாம்​. கொப்புளங்கள் வெப்ப கொப்புளங்கள் அதிக கஷ்டங்களை தரக்கூடியது. இந்த கொப்புளங்கள் பரவக்கூடியது. பெரும்பாலும் குழந்தைகளுக்கு தான் உடலில் கொப்புளங்கள் வரக்கூடும். குறிப்பாக குழந்தைகள் மண்ணில் விளையாடும் போது அவர்கள் வியர்வையோடு மண்ணும் சருமத்தில் ஒட்டிகொள்ளும். இதனால் கொப்புளங்கள் உருவாகிறது. உடலின் உள்வெப்பமும், வெளியில் படும் வெப்பமும் கொதித்து கொப்புளங்களாக உருவாகும். இதை சரியாக கவனிக்காவிட்டால் மிகப்பெரிய சிக்கலை உருவாக்கிவிடும். இது மிகப்பெரிய கஷ்டங்களை தரக்கூடியது. சின்னம்மை வெயில்காலங்களில் குழந்தைகளுக்கு வரக்கூடிய பொதுவான நோய்களில் சின்னம்மையும் உண்டு. இது உடல்…

Read More

நாடாளுமன்றத்தில் கடந்த 2 ஆண்டுகளாக 2 ஆயிரம் ரூபாய் நோட் அச்சடிக்கவில்லை என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடிக்கப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு மக்களவையில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, 2018 மார்ச் 30ம் தேதி நிலவரப்படி நம் நாட்டில் 336.2 கோடி 2 ஆயிரம் ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்தது. மேலும் 2021 பிப்ரவரி 26ஆம் தேதி நிலவரப்படி இது 249.9 கோடியாக குறைந்துள்ளது. மத்திய அரசு, குறிப்பிட்ட மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பது பற்றி ரிசர்வ் வங்கியுடன் ஆலோசித்துதான் முடிவு எடுக்கும். 2016-17ம் நிதியாண்டில் (2016 ஏப்ரல்- 2017 மார்ச்) 354.29 கோடி 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடிக்கப்பட்டது. மேலும் 11.15 கோடி 2 ஆயிரம் ரூபாய் நோட்டு மட்டுமே…

Read More

பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் ஆகியவற்றை இப்போதைக்கு ஜி.எஸ்.டி. வரிவிதிப்புக்குள் கொண்டு வர வாய்ப்பு இல்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டி. வரிக்குள் கொண்டுவரப்படுமா என்று மக்களவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி கேட்டு இருந்தார். இதற்கு மக்களவையில் நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தற்போதைய நிலையில் பெட்ரோல், டீசல், விமான எரிபொருள், சமையல் கியாஸ் சிலிண்டர்,இயற்கை எரிவாயு ஆகியவற்றை ஜி.எஸ்.டி. வரிக்குள் கொண்டுவரும் திட்டம் ஏதும் இல்லை. பெட்ரோலியப் பொருட்களை ஜி.எஸ்.டி. வரிவிதிப்புக்குள் எப்போது கொண்டுவரலாம் என்ற தேதியை சட்டப்படி ஜி.எஸ்.டி. கவுன்சில்தான் பரிந்துரைக்க முடியும். ஆனால், இப்போதுவரை, ஜி.எஸ்.டி. கவுன்சில், பெட்ரோலியப் பொருட்களை ஜி.எஸ்.டி. வரிக்குள் கொண்டுவரும் தேதி குறித்து ஏதும் பரிந்துரைக்கவில்லை என்று அதில் தெரிவித்து இருந்தார். மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் ”…

Read More

யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் மண்டேலா படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக யோகி பாபு இருக்கிறார். யோகி பாபு நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு மட்டும் 30 படங்கள் வெளியாகி உள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், யோகி பாபு நடிப்பில் 9 படங்கள் மட்டுமே வெளியாகின. அண்மையில், யோகி பாபு நடிப்பில் டிரிப் என்ற படம் மட்டுமே வெளியாகி இருக்கிறது. தற்போது யோகி பாபு கிட்டத்தட்ட 20 படங்கள் வரை கைவசம் வைத்திருக்கிறார். இதில், மண்டேலா படமும் உள்ளது. புதுமுக இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மண்டேலா படத்தை ஒய்நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் பாலாஜி மோகன் தயாரித்து உள்ளார். தற்போது வெளியான மண்டேலா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…

Read More

இந்தியாவில் ரியல்மி 8 சீரிஸ் ரக ஸ்மார்ட்போனை வரும் மார்ச் 24 ஆம் தேதியன்று ரியல்மி ஸ்மார்ட்போன் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. ரியல்மியின் தலைமை செயல் அதிகாரி மாதவ் ஷெத் இதனை தெரிவித்துள்ளார். இருப்பினும் எந்த மாதிரியான மாடல் ரியல்மி 8 சீரிஸில் வெளியாக உள்ளது என்பது மறைமுகமாகவே உள்ளது. அதே நேரத்தில், 108 மெகாபிக்சல் கொண்ட கேமரா மார்ச் 24 அன்று வெளியாகவுள்ள போனில் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். யூடியூபில் இது தொடர்பான வீடியோவை ரியல்மி நிறுவனம் வெளிட்டுயுள்ளது.இந்நிறுவனம் ரியல்மி 8 மற்றும் 8 புரோ என இரண்டு வேரியண்ட்டுகளில் போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதில் 8 புரோ போனில் மட்டும் 108 மெகாபிக்சல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக டீஸ் செய்யப்பட்ட 8 மாடல் ஸ்மார்ட் போனில் 64 மெகாபிக்சல் தான் கேமரா என்பதை ரியல்மி உறுதி செய்திருந்தது.

Read More

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் 3000 ரன்களை கடந்து புதிய மைல்கல்லை எட்டிய முதல் வீரராக விளங்குகிறார். தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில், அஹமதாபாத்தில் நேற்று இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியில் சூர்ய குமார் யாதவ், இஷான் கிஷண் ஆகியோர் புதுமுக வீரர்களாக களமிறங்கினார்கள். இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் ஜேசன் ராய் அதிகபட்சமாக 46 ரன்கள் எடுத்தார். மேலும் வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகுர் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தார்கள். தொடக்க வீரர் இஷான் கிஷன், கேப்டன் விராட் கோலி ஆகியோரின் அதிரடி…

Read More

தேர்தல் அறிக்கைகள் என பரபரத்து வரும் சூழலில் தமிழக அரசியல் களத்தின் முக்கிய தலைவர்கள் இன்று பரப்புரையை தொடங்கவுள்ளதால் இன்னும் அனல் பறக்க உள்ளது. இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்து, பரப்புரை பயணத்தை தொடங்க உள்ளார்கள். முதல்வர் பழனிசாமி எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். முதல்வர் பழனிசாமி எடப்பாடியில் உள்ள தாலுகா அலுவலகத்தில் இன்று மதியம் ஒரு மணி அளவில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய இருக்கிறார். அதனை தொடர்ந்து, நங்கவள்ளி, ஜலகண்டபுரம், கொங்கணாபுரம் ஆகிய இடங்களில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். 3 ஆவது முறையாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அயனாவரம் மாநகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார்.அதன் தொடர்ச்சியாக, அதே தொகுதியில் பரப்புரையில் ஈடுபடுகிறார். கோவில்பட்டியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய இருக்கிறார். நாம் தமிழர் கட்சி சீமான் திருவொற்றியூர்…

Read More