விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘விக்ரம் 60’ இதைப்பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து சிம்ரன் நடிக்கவுள்ளார். மேலும் வாணிபோஜன் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்ரன் ஏற்கனவே ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. முதலில் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்று இருந்த நிலையில் தற்போது சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்து. இந்நிலையில் பாபி சிம்ஹா இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் எல்லா படங்களிலும் பாபி சிம்ஹா தொடர்ந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வருட இறுதியில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.…
Author: gpkumar
மத்திய அரசு தற்போது ரேஷன் பயனாளிகளுக்காக புதிய மொபைல் ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த ஆப்பின் பெயர் ‘மேரா ரேஷன் ஆப் ‘என்பதாகும். தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் மற்றும் இதர நலத் திட்டங்களின் கீழ் ரேஷன்பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை தேசம் முழுவதும் வழங்குவதே ‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டத்தின் நோக்கமாகும். இந்தியாவில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் , புலம்பெயர் தொழிலாளர்கள் ரேஷன் பொருட்களை வாங்க ‘ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் ‘ உதவுகிறது. தற்போது ‘மேரா ரேஷன் ஆப்’ ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் அறிமுகப்படுத்தி உள்ளார்கள். கூடிய விரைவில் 14 மொழிகளும் பல்வேறு வசதிகளுடன் அறிமுகப்படுத்த உள்ளார்கள். ‘மேரா ரேஷன் ஆப்’பின் சிறப்பு அம்சங்கள்: அருகில் உள்ள நியாய விலைக் கடை எங்கு இருக்கு என்பதை தெரிந்துகொள்ளலாம் ரேஷன் கார்டுகளுக்கு உணவு தானியங்கள் எவ்வளவு…
தேனீகள், குளவிகள் மற்றும் சிலந்திகள் போன்ற சிறிய பூச்சிகள் நம்மை கடித்தால் கூட நச்சுக்கள் உண்டாக வாய்ப்புள்ளது. இந்த நச்சுக்கள் மனிதர்களின் சருமத்தில் அழற்சியை உண்டாக்கும். அதனால் இந்த மாதிரியான பூச்சிக் கடிக்கு ஆரம்ப வைத்தியமாக சில வீட்டு வைத்திய முறைகள் பின்பற்றுவது மிகவும் நல்லது. வீட்டு வைத்திய முறைகள் நம் சரும அழற்சியை குறைக்க உதவும். பொதுவாக சின்னச் சின்ன பூச்சிக் கடியை நாம் சாதாரணமாக விட்டு விடுகிறோம். ஆனால் அதுவே பின்னாளில் நமக்கு எரிச்சல், சரும அழற்சி போன்றவற்றை உருவாக்க கூடும். ஒரு சில சிறிய பூச்சிகள் கூட நிறைய நச்சுத்தன்மை கொண்டதாக இருக்கும். எனவே பூச்சிக் கடியை நீங்கள் சாதாரணமாக எடுத்து கொள்ளவேண்டாம். கொசு, தேனீ, குளவிகள் மற்றும் சிலந்திகள் போன்றவை நாம் வாழும் இடங்களைச் சுற்றி அதிகமாகவே இருக்கும். இந்த பூச்சிகள் நம்மை அதிகமாக கடிக்க வாய்ப்பு உள்ளது. இந்த சிறு பூச்சிகள் மழைக்காலத்திலும் வெயில்…
வரும் தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி இன்று காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கும் நிலையில், நாளை, நாளை மறுநாளும் விடுமுறை நாட்கள் அதனால் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது. ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் ஒரேகட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து நாளை, நாளை மறுநாள் (சனி, ஞாயிறு) விடுமுறை நாட்களாகும், அதனால் இந்த நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது. இதை அடுத்து வரும் 16ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவித்துள்ளது. அரசியல் கட்சியினர் மொத்தம் 6 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். இந்த நாட்களில் காலை 11 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். தமிழக தலைமை…
அகமதாபாத்தில் இன்று இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தொடங்கவுள்ள டி20 போட்டியில் இடம்பெறப்போகும் வீரர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் அதிகரித்துள்ளது. இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 5 போட்டிகள் கொண்ட இருபது ஓவர் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட திட்டமிட்டிருந்தது. இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி மூன்றில் ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இன்று 5 போட்டிகள் கொண்ட 20வது ஓவர் தொடர் தொடங்குகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் 20வது ஓவர் தொடர் கொண்ட ஐந்து போட்டிகளும் நடைபெறவுள்ளது. இன்று இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி தொடங்கயுள்ளது. இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், ராகுல் சாஹர், ராகுல், இஷான் கிஷன், திவேதியா ஆகிய புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய…
திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் இன்று உறுதியாகி உள்ளது. திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி(மமக) இரு தொகுதிகளிலும் அதிமுகவுடன் நேரடியாக மோதுகிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தநிலையில் திமுக கூட்டணியில் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாவின் மனிதநேய மக்கள் கட்சி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில், ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும், மற்றொரு தொகுதியில் தனிச்சின்னத்தில் போட்டியிடுவதாக இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்நிலையில், மனிதநேய மக்கள் கட்சி, தஞ்சை மாவட்டம் பாபநாசம், திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதிகளில் போட்டியிடுவதென இரு கட்சிகளும் ஆலோசனை செய்து முடிவு செய்துள்ளது. தொகுதி ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாவும் இன்று அண்ணா அறிவாலயத்தில் கையெழுத்திட்டுக்கொண்டனர். இதற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, ”தலைமை நிர்வாக குழு மிக விரைவில் கூடி வேட்பாளர்கள் யார்…
நம்மில் பலருக்கு தலைவலியினால் சங்கடமான மற்றும் கவனத்தை சிதறடிக்கும் வலி தெரிந்திருக்கும். தலைவலியில் வெவ்வேறு வகையான தலைவலி உள்ளது. இதைப்பற்றி பார்ப்போம். உலக சுகாதார அமைப்பு, அனைவருக்கும் கிட்டத்தட்ட ஒரு முறையாவது தலைவலி ஏற்படுகிறது என்று சுட்டிக்காட்டுகிறது. தலையின் எந்தப் பகுதியில் வலி என்று நம்மால் வரையறுக்க முடியும் என்றாலும், இந்த வலியின் காரணம், காலம் மற்றும் தீவிரம் தலைவலியின் வகையைப் பொறுத்து மாறுபடும். சில நேரங்களில் தலைவலிவுடன் பிடிப்பான கழுத்து,சொறி, தலைவலி,வாந்தி,குழப்பம்,தெளிவற்ற பேச்சு,100.4 ° F (38 ° C) அல்லது அதற்கு மேற்பட்ட காய்ச்சல் ஆகியவை தோன்றினால் இவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவை.மேலும் இவர்கள் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும். பத்து வகையான தலைவலிகளை பார்ப்போம்: 1.பதற்றம் தலைவலி நீங்கள் பதற்றமாக இருக்கும்போது, உங்கள் தலை முழுவதும் மந்தமாக, வலிக்கும் உணர்வை நீங்கள் உணர்வீர்கள். இது போன்ற உணர்வை பதற்றம் தலைவலி என்பார்கள். உங்கள் கழுத்து, நெற்றி,உச்சந்தலையில்…
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் நமது வாழ்வின் அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டன. சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணிக்கப்படுகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை ஒரு மாததிற்கு இரு முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்ப்பட்டது. இந்த விலை நிர்ணயம் முறை சுமார் 15 வருடமாக அமலில் இருந்தது. மத்திய அரசு சர்வதேச எண்ணெய் நிறுவனங்களிடம் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பை ஒப்படைத்துள்ளது. இதைத்தொடர்ந்து தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை மாற்றி அமைக்கப்படுகிறது. இதில் பெட்ரோல், டீசல் விலை அதிரடியான மாற்றங்களை கண்டு வருகிறது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையானது சிறிதளவில் இறக்கம் ஏற்பட்டு அதிகபடியான ஏற்றம் உண்டாகுவதை காண முடிந்தது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த…
புதுச்சேரி மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, என்ஆர் காங்கிரஸ், அதிமுக ஆகிய முக்கிய கட்சிகள் பங்கு வகிக்கிறது. கூட்டணி ஒப்பந்தப்படி என்ஆர் காங்கிரசுக்கு 16 தொகுதியும், பாஜக-அதிமுகவிற்கு 14 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதலமைச்சர் வேட்பாளராக யார் முன்னிறுத்தப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்து வந்தது. இதையடுத்து என்ஆர் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகிய முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரை மீண்டும் முதல்வர் வேட்பாளராக அக்கட்சி நடத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது. இந்த செயற்குழு கூட்டத்தில் புதுச்சேரியில் மிக சுமுகமாக ராஜதந்திரத்தோடு பாஜகவுடன் கூட்டணி அமைத்ததாக ரங்கசாமிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. என்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி புதுச்சேரி…
இந்திய ஜனாதிபதி ஸ்ரீ ராம்நாத் கோவிந்த், தனது மூன்று நாள் பயணத்தை தமிழகத்தில் இன்று மாலை தொடங்கவுள்ளார். மார்ச் 9 ம் தேதி மாலை சென்னைக்கு ஜனாதிபதி புறப்படுவார். திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 16 வது ஆண்டு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மார்ச் 10 ம் தேதி ஜனாதிபதி ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வேலூருக்கு வருகை தருவார். மார்ச் 11 ம் தேதி, சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் 41 வது ஆண்டு மாநாட்டில் ஜனாதிபதி கலந்து கொள்வார். முன்னதாக, ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் மத்திய பிரதேசத்திற்கு இரண்டு நாட்கள் விஜயம் செய்தார். மார்ச் 6, 2021 அன்று, அகில இந்திய மாநில நீதித்துறை அகாடமிகளின் இயக்குநர்கள் பின்வாங்குவதை ஜபல்பூரில் ஜனாதிபதி திறந்து வைத்தார். பின்னர் மார்ச் 7 ஆம் தேதி மத்திய பிரதேச அரசின் பழங்குடியினர் நலத்துறை ஏற்பாடு செய்திருந்த தஞ்சோ மாவட்டத்தில் உள்ள சிங்ராம்பூர் கிராமத்தில் ஏற்பாடு செய்திருந்த…
கடந்த ஒரு வருடமாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பள்ளி, கல்லூரிகளின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் பாதிக்கப்பட்டது. ஆன்லைன் மூலமாக கல்வி கற்கும் சூழலுக்கு மாணவர்கள் தள்ளப்பட்டார்கள். கொரோனா காலத்தில் பள்ளிகள் திறப்பதை பற்றி பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்திய பிறகே பள்ளிகளை திறக்க திட்டமிட்டார்கள். மேலும் பொதுதேர்வை நினைவில் கொண்டு கடந்த ஜனவரி மாதம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. தமிழக அரசு பொதுத்தேர்வு நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் ஆசிரியர்களிடம் மாணவர்கள் நேரடியாக கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பிப்ரவரி மாதம் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் சுமையை குறைக்க அவர்களின் பாடத்திட்டத்தில் 40 சதவீத அளவிற்கு குறைத்து கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 9, 10, 11ஆம் வகுப்பிற்கான…
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில நாட்களுக்கு மழை என்று வானிலை ஆய்வு மையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. தென் தமிழக மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் சென்னை உட்பட வட மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்படும். இன்று தென் தமிழக மாவட்டங்களில் ஓரு சில இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 7ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 8 முதல் மார்ச் 10ஆம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்களில் ஓரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே…
சாம்சங் நிறுவனம் அடுத்த ரக்டு (முரட்டுத்தனமான) ஸ்மார்ட்போன் அறிமுகபடுத்தி உள்ளது. சாம்சங் தனது அடுத்த ரக்டு ஸ்மார்ட்போனுக்கு கேலக்ஸி எக்ஸ்கவர் 5 என்று பெயரிட்டுள்ளது. இது கேலக்ஸி எக்ஸ்கவர் 4 ஸ்மார்ட்போனின் வாரிசு ஆகும். இந்த ஸ்மார்ட்போன் கடந்த 2017 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. சாம்சங் கேலக்ஸி Xcover 5 ஸ்மார்ட்போன் 1.5 மீட்டர் ஆழம் தண்ணீருக்குள் விழுந்தாலும் ஒன்னும் ஆகாதாம்.இதனுடைய விலை மற்றும் அம்சங்களை பார்ப்போம். சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 5 ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.33,300-க்கு விற்பனையாக உள்ளதாம். மேலும் இது கருப்பு நிறத்தில் மட்டும் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மார்ச் 2021 முதல் புதிய கேலக்ஸி எக்ஸ்கவர் 5 ஸ்மார்ட்போன் விற்பனையாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆசியா, ஐரோப்பா மற்றும் லத்தீன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் மட்டுமே விற்பனையாக உள்ளது. இது பிற நாடுகளுக்கு எப்போது வரும் என்கிற தகவல் எதுவும்…
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்து, ஒரு சவரன் ரூ.33,448-க்கு விற்கப்படுகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக நாளுக்குநாள் குறைந்து வருகிறது. ஒரு வாரத்திற்கு முன் 8 கிராம் தங்கம் ரூ.35 ஆயிரத்துக்கு கீழ் விற்கப்பட்டது. நேற்று 8 கிராம் தங்கம் ரூ.34 ஆயிரத்துக்கும் கீழ் விற்கப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி 8 கிராம் தங்கம் ரூ.33,736-க்கு விற்கப்பட்டது . ஒரு கிராம் தங்கம் ரூ.4,217 ஆக இருந்தது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்றும் குறைந்துள்ளது . சென்னையில் இன்று காலை ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.33,448-ஆக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து ரூ.288 குறைந்து குறிப்பிடத்தக்கது. இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.36 குறைந்து ரூ.4,181-க்கு விற்கப்படுகிறது. தங்கத்தின் விலை குறைந்துள்ளது போலவே வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ.600 குறைந்துள்ளது. தற்போது ஒரு கிலோ வெள்ளி ரூ.69,800-க்கு விற்கப்படுகிறது.…
