Author: gpkumar

இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

புதுச்சேரி மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, என்ஆர் காங்கிரஸ், அதிமுக ஆகிய முக்கிய கட்சிகள் பங்கு வகிக்கிறது. கூட்டணி ஒப்பந்தப்படி என்ஆர் காங்கிரசுக்கு 16 தொகுதியும், பாஜக-அதிமுகவிற்கு 14 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதலமைச்சர் வேட்பாளராக யார் முன்னிறுத்தப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்து வந்தது. இதையடுத்து என்ஆர் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகிய முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரை மீண்டும் முதல்வர் வேட்பாளராக அக்கட்சி நடத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது. இந்த செயற்குழு கூட்டத்தில் புதுச்சேரியில் மிக சுமுகமாக ராஜதந்திரத்தோடு பாஜகவுடன் கூட்டணி அமைத்ததாக ரங்கசாமிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. என்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி புதுச்சேரி…

Read More

இந்திய ஜனாதிபதி ஸ்ரீ ராம்நாத் கோவிந்த், தனது மூன்று நாள் பயணத்தை தமிழகத்தில் இன்று மாலை தொடங்கவுள்ளார். மார்ச் 9 ம் தேதி மாலை சென்னைக்கு ஜனாதிபதி புறப்படுவார். திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 16 வது ஆண்டு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மார்ச் 10 ம் தேதி ஜனாதிபதி ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வேலூருக்கு வருகை தருவார். மார்ச் 11 ம் தேதி, சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் 41 வது ஆண்டு மாநாட்டில் ஜனாதிபதி கலந்து கொள்வார். முன்னதாக, ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் மத்திய பிரதேசத்திற்கு இரண்டு நாட்கள் விஜயம் செய்தார். மார்ச் 6, 2021 அன்று, அகில இந்திய மாநில நீதித்துறை அகாடமிகளின் இயக்குநர்கள் பின்வாங்குவதை ஜபல்பூரில் ஜனாதிபதி திறந்து வைத்தார். பின்னர் மார்ச் 7 ஆம் தேதி மத்திய பிரதேச அரசின் பழங்குடியினர் நலத்துறை ஏற்பாடு செய்திருந்த தஞ்சோ மாவட்டத்தில் உள்ள சிங்ராம்பூர் கிராமத்தில் ஏற்பாடு செய்திருந்த…

Read More

கடந்த ஒரு வருடமாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பள்ளி, கல்லூரிகளின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் பாதிக்கப்பட்டது. ஆன்லைன் மூலமாக கல்வி கற்கும் சூழலுக்கு மாணவர்கள் தள்ளப்பட்டார்கள். கொரோனா காலத்தில் பள்ளிகள் திறப்பதை பற்றி பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்திய பிறகே பள்ளிகளை திறக்க திட்டமிட்டார்கள். மேலும் பொதுதேர்வை நினைவில் கொண்டு கடந்த ஜனவரி மாதம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. தமிழக அரசு பொதுத்தேர்வு நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் ஆசிரியர்களிடம் மாணவர்கள் நேரடியாக கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பிப்ரவரி மாதம் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் சுமையை குறைக்க அவர்களின் பாடத்திட்டத்தில் 40 சதவீத அளவிற்கு குறைத்து கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 9, 10, 11ஆம் வகுப்பிற்கான…

Read More

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில நாட்களுக்கு மழை என்று வானிலை ஆய்வு மையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. தென் தமிழக மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் சென்னை உட்பட வட மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்படும். இன்று தென் தமிழக மாவட்டங்களில் ஓரு சில இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 7ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 8 முதல் மார்ச் 10ஆம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்களில் ஓரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே…

Read More

சாம்சங் நிறுவனம் அடுத்த ரக்டு (முரட்டுத்தனமான) ஸ்மார்ட்போன் அறிமுகபடுத்தி உள்ளது. சாம்சங் தனது அடுத்த ரக்டு ஸ்மார்ட்போனுக்கு கேலக்ஸி எக்ஸ்கவர் 5 என்று பெயரிட்டுள்ளது. இது கேலக்ஸி எக்ஸ்கவர் 4 ஸ்மார்ட்போனின் வாரிசு ஆகும். இந்த ஸ்மார்ட்போன் கடந்த 2017 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. சாம்சங் கேலக்ஸி Xcover 5 ஸ்மார்ட்போன் 1.5 மீட்டர் ஆழம் தண்ணீருக்குள் விழுந்தாலும் ஒன்னும் ஆகாதாம்.இதனுடைய விலை மற்றும் அம்சங்களை பார்ப்போம். சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 5 ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.33,300-க்கு விற்பனையாக உள்ளதாம். மேலும் இது கருப்பு நிறத்தில் மட்டும் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மார்ச் 2021 முதல் புதிய கேலக்ஸி எக்ஸ்கவர் 5 ஸ்மார்ட்போன் விற்பனையாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆசியா, ஐரோப்பா மற்றும் லத்தீன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் மட்டுமே விற்பனையாக உள்ளது. இது பிற நாடுகளுக்கு எப்போது வரும் என்கிற தகவல் எதுவும்…

Read More

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்து, ஒரு சவரன் ரூ.33,448-க்கு விற்கப்படுகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக நாளுக்குநாள் குறைந்து வருகிறது. ஒரு வாரத்திற்கு முன்  8 கிராம் தங்கம் ரூ.35 ஆயிரத்துக்கு கீழ் விற்கப்பட்டது.  நேற்று 8 கிராம் தங்கம்  ரூ.34 ஆயிரத்துக்கும்  கீழ் விற்கப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி 8 கிராம் தங்கம் ரூ.33,736-க்கு விற்கப்பட்டது . ஒரு கிராம் தங்கம் ரூ.4,217 ஆக இருந்தது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்றும் குறைந்துள்ளது . சென்னையில் இன்று காலை ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.33,448-ஆக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து ரூ.288 குறைந்து குறிப்பிடத்தக்கது. இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.36 குறைந்து ரூ.4,181-க்கு விற்கப்படுகிறது. தங்கத்தின் விலை குறைந்துள்ளது போலவே வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ.600 குறைந்துள்ளது. தற்போது ஒரு  கிலோ வெள்ளி  ரூ.69,800-க்கு விற்கப்படுகிறது.…

Read More

இந்தியாவில் பட்டாசு உற்பத்திக்கு ‘சிவகாசி’ பெயர்போன இடமாக விளங்குகிறது. சிவகாசியை இந்தியாவின் ‘குட்டி ஜப்பான்’ என்று அழைப்பார்கள். இங்கு தயாரிக்கும் பட்டாசுகள் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் சிவகாசி உலகளவில் பிரபலமாக விளங்குகிறது. ஆனால் சிவகாசியில் இருக்கும் பட்டாசு ஆலைகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை சிவகாசி அருகே காளையர்குறிச்சி பகுதியில் ஏற்பட்ட பட்டாசு அலை வெடிவிபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த இரு வாரங்களுக்கு முன்பு விருநகர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் தீவிபத்து ஏற்பட்டு 10 க்கு மேற்பட்டோர் பலியானார்கள். இதைத்தொடர்ந்து நேற்று மாலை சிவகாசி அருகே காளையர்குறிச்சி பகுதியில் பட்டாசு உற்பத்தியின்போது ஏற்பட்ட உராய்வின் காரணமாக திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்கள். மேலும் 14 பேர் படுகாயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read More

சுறுசுறுப்பான, நீண்ட மற்றும் அழகான கூந்தல் அனைவரின் கனவு. நாம் பெறும் கூந்தல் பெரும்பாலும் நம் மரபியலைப் பொறுத்தது என்பதை நாம் அறிவோம், ஆனால் நாம் சரியான அக்கறை எடுத்துக் கொண்டால், நம் கனவுகளின் முடியைப் பெறலாம். எண்ணற்ற ஓவர்-தி-கவுண்டர் மருந்துகள், களிம்புகள், எண்ணெய்கள் போன்றவை நம் தலைமுடியின் தரத்தை மேம்படுத்துவதாகவும் அவை வளர உதவுவதாகவும் கூறுகின்றன, ஆனால் அந்த வேதிப்பொருட்களால் நம் தலைமுடியை ஏன் சித்திரவதை செய்கின்றன. அவை என்ன பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று எங்களுக்குத் தெரியாது. இயற்கை வைத்தியம் மூலம் வீட்டிலேயே இலக்கை எளிதாக அடைய முடியும். உங்கள் சமையலறையில் சுற்றிப் பாருங்கள், உங்கள் தலைமுடியை இயற்கையாக வளர்க்க உதவும் உணவுகள் உங்கள் வீட்டில் உள்ளன. இயற்கை முடி வளர்ச்சிக்கு நீங்கள் முயற்சிக்க வேண்டிய வீட்டு வைத்தியம்: 1. கற்றாழை சாறு கற்றாழை ஒரு நல்ல அளவு புரோட்டியோலிடிக் என்சைம்களைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது, இது இறந்த சரும…

Read More

நடிகர் விஜய் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு  நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தனது 65வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கஉள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நண்பன், விண்ணைத்தாண்டி வருவாயா, எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம், ராதே ஷ்யாம் உள்ளிட்ட படங்களுக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மனோஜ் பரமஹம்சா தனது டிவிட்டர் பக்கத்தில் நண்பன் படத்திற்கு பிறகு தளபதி விஜய்வுடன் இன்னொரு பயணத்தைத் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். தளபதி விஜய் ஒரு அற்புதமான மனிதர். ‘தளபதி 65’ இந்தியாவே விரும்பும் ஏன் முழுதேசமும்  நேசிக்கு ஒரு படமாக இருக்கும்’ என பதிவிட்டுள்ளார்.

Read More

கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிருந்து தமிழகத்திற்கு வரும் பயணிகள் தங்களைத் தாங்களே கட்டாயம் 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சுமார் ஓராண்டு காலமாக நாடு முழுவதும் கொரோனா பரவலைக் கட்டப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் காரணமாக ஏறக்குறைய பல மாநிலங்களில் கொரோனா பரவல் கட்டுபாட்டுக்குள் வந்தது.தற்போது இயல்பு நிலைக்கும் மாறி வருகிறது. இந்நிலையில் கேரளா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், காஷ்மீர் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த ஒரு வரமாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் கேரளா மற்றும் மகாராஷ்ரா மாநிலங்களில் அதிகளவு கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 74 சதவிகிதத்திற்கும் மேல் உள்ளது.மேலும் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம்,பஞ்சாப், ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. வார சராசரியாக கொரோனா…

Read More

நம் அன்றாட உணவில் அதிக அளவு காய்கள் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. நம் உடலுக்கு தேவையான சத்துகள் காய்களில் தான் அதிகம் உள்ளது. தினமும் ஒவ்வொரு வகையான காய்கறிகளை நாம் சாப்பிடுவது மிகவும் அவசியம். அந்த வகையில் “வெண்டைக்காய்” நம் அன்றாட உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. வெண்டைக்காயின் நன்மைகள் பல காலமாகவே வெண்டைக்காய் சாப்பிடுவதால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும் என்று இந்த காயினை அளவுக்கு அதிகமாக உணவில் சேர்த்து கொள்கிறார்கள். மேலும் கல்வி பயிலும் குழந்தைகள் வெண்டைக்காய் அதிகம் சாப்பிடுவதால் அவர்களின் மூளைவளர்ச்சி, மூளை செயல் திறன் ஆகியவை அதிகரித்து கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள். மூளை சுறுசுறுப்பாக இயங்கினால் அனைத்து செயல்களையும் சிறப்பாக செய்ய முடியும். இதனால் வெண்டைக்காயை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. ஞாபகசக்தி அதிகரிக்கும் ஞாபக மறதி ஏற்படுவது இயற்கை தான். குறிப்பாக முதியவர்களுக்கு அதிக ஞாபக மறதி இருக்க கூடும்.…

Read More

பிரபு சாலமன் தமிழகத் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற இயக்குனராவார். இவர் காதல் கோட்டை  படத்தின் இயக்குநரான அகத்தியன் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.தற்போது இவர் நடிகர் ஆகிறார். பிரபு சாலமன் இயக்கிய முதல் திரைப்படம் கண்ணோடு காண்பதெல்லாம். மேலும் இவர் கும்கி,மைனா,கயல் ,தொடரி போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். இயக்குனர்கள் நடிகர்களாவது சினிமா தொடங்கிய காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. சமீபத்தில் கவுதம் மேனன், மோகன் ராஜா, சுசீந்திரன், பாலாஜி சக்திவேல் ஆகிய இயக்குனர்கள் நடிகர் ஆனார்கள். மாஸ்டர் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் படம் “அழகிய கண்ணே” இந்த படத்தில் பிரபு சாலமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் .இந்த  படத்தை   விஜயகுமார் இயக்குகிறார். இந்த படத்தின்  கதையும் , கதாபாத்திரமும் பிரபுசாலமனுக்கு மிகவும் பிடித்துப்போய் விட்டது.  இந்த படத்தில் பிரபு சாலமன் நடிகராக முதன் முதலாக நடிக்கிறார். பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன், லியோ சிவக்குமார் இந்த படத்தில் கதாநாயகனாக…

Read More

அகமதாபாத்தில் 63 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள மிக பிரமாண்டமான சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில், பகலிரவு ஆட்டமாக 3 ஆவது டெஸ்ட் போட்டி இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கயுள்ளது. 4 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி, கடைசி இரு டெஸ்ட் போட்டிகளுக்காக சில முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அகமதாபாத் கிரிக்கெட் மைதானம் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக உருவாகியுள்ளது. இந்த கிரிக்கெட் மைதானத்தில் 4 நுழைவு வாயில்களும் , 11 ஆடுகளங்களும் உள்ளன. 8 செ.மீ. வரை மழை பெய்தாலும் போட்டி ரத்தாகாமல், உடனடியாக மழை நீரை உறிஞ்சி வெளியேற்றும் அளவிற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் நிழல் விழாத அளவுக்கு பிரத்யேக எல்இடி விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகிலேயே உள்ளரங்கு கிரிக்கெட் பயிற்சி அகாடமி, பிரம்மாண்ட உணவகம், மினி 3டி…

Read More

6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் பாடம் கட்டாயம் என இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் மாணவர்களுக்கு இது ஒரு அசத்தலான அறிவிப்பாக கருதப்படுகிறது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை கணிப்பொறி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறினார். இன்று துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கலை அறிவித்து வருகிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் அறிவிப்பில் இன்று, 2021-22 ஆம் நிதியாண்டில் உயர்கல்வித் துறைக்காக ரூ.5,478.19 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாகக் கூறினார். மேலும் அனைத்து அரசு பள்ளிகளிலும் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறினார். மேலும் மதிய உணவுத் திட்டத்திற்காக 1,953 கோடி…

Read More