மின்சார வாரியத்தில் 5000 கேங்மேன் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரிய துறையில் களப்பணிக்காக உருவாக்கப்பட்ட 5000 கேங்மேன் பணிகளுக்கு 2019ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. இதை எதிர்த்து மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், தங்களை நிரந்தரமாக்க வேண்டும் என்றும், புதிய பணியாளர்கள் தேர்வு செய்யக் கூடாது என்றும் உத்தரவிட்டு இருந்தார்கள். பிப்ரவரி 22 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தங்கள் நியமனத்தை உறுதி செய்த பிறகுதான் புதிதாக கேங்மேன் இடங்களை நிரப்ப வேண்டும் என்று கூறினார்கள். மேலும் 2019ஆம் ஆண்டு வெளியான உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என ஒப்பந்த ஊழியர்கள் சங்கங்கள் சார்பில் கூறப்பட்டது. இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் அனைத்து விதிகளும் பின்பற்றபட்டதாக கூறினார்.…
Author: gpkumar
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விக்ரம் நடிப்பில் வெளியாகி, வெற்றி பெற்ற படங்களை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் ஆகியோர் நடித்து ஆனந்த் சங்கர் இயக்கத்தில் 2016-ல் திரைக்கு வந்த ‘இருமுகன்’ படத்தை இந்தியில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தைகள் நடைப்பெற்று வருகின்றன . ‘இருமுகன்’ படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர், இந்தி பதிப்பையும் இயக்குவதாக என்று கூறப்படுகிறது. இதில் நடிப்பவர்கள் பற்றிய தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல ஆண்டுகளாக இந்தியில் வெற்றி பெற்ற படங்களை தமிழில் ரீமேக் செய்வது வழக்கமாக இருந்தது. ஆனால் சமீப காலமாக தமிழ் படங்களை இந்தியில் ரீமேக் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம், கைதி, விஜய்யின் மாஸ்டர், சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’ போன்ற படங்கள் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு…
சென்னையில் ஒரு சில பகுதிகளில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வளிமண்டல மேலடுக்கில்,மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாகவும், கீழடுக்கில் கிழக்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாகவும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்பு. இன்று முதல் தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும். பிப்ரவரி 21ஆம் தேதி தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிவுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பிப்ரவரி 22ஆம் தேதி தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பிப்ரவரி 23, 24ஆம் தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையாகவே…
ரேஷன் கடை ஊழியர்களுக்கு தமிழக உணவு வழங்கல் துறை பிறப்பித்துள்ள உத்தரவை பார்ப்போம். தமிழகத்தில் ஒரு கோடியே 96 லட்சத்து 16 ஆயிரம் குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. அரிசி அட்டை, சர்க்கரை அட்டை, அத்தியாவசியப் பொருட்கள் எதுவும் இல்லாத அட்டை என மொத்தம் ஐந்து வகையான ரேஷன் கார்டுகள் இருக்கின்றன. ரேஷன் பொருட்களை வழங்குவதற்கு ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் விற்பனையாளர், எடையாளர் என இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பல கடைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை காரணத்தால் ஒருவரே, இரண்டு பேரின் வேலையை பார்க்கும் கட்டாயத்தில் இருக்கிறார்கள். இதற்கிடையில் ஆயிரம் ரேஷன் கார்டுகளுக்கு மேலுள்ள கடைகளில் பொருட்களை விரைவாக வழங்க கூடுதலாக ஒரு ஊழியரை நியமிக்குமாறு உணவு வழங்கல் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கூட்டுறவுத் துறைக்கும், நுகர்பொருள் வாணிபத்திற்கும் ரேஷன் கடைகளில் கூடுதலாக ஊழியரை நியமிக்குமாறு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை ஊழியர்கள் நியமனம் செய்யப்படவில்லை.ரேஷன் கடை ஊழியர்கள் நியமனத்தில்…
சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவர்கள் எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். இன்றைய வரைக்கும் உயிர்க்கொல்லி நோய்கள் என்ற பட்டியலில் மக்கள் மனதில் முதலிடம் பிடித்திருக்கும் நோய் எய்ட்ஸ் தான். எந்த மருந்தாலும் குணப்படுத்த முடியாத அபாயகரமான நோய் எய்ட்ஸ் தான். இந்த நோய் விழிப்புணர்வின் மூலம் தான் கட்டுப்படுத்த முடியும் என்று அரசும், தன்னார்வாளர் அமைப்புகளும் செயல்பட்டு வந்தன. இந்த நோய் எளிதில் குணப்படுத்தமுடியாத நோயாக கருதப்பட்டது. இந்நிலையில் சென்னை ஐஐடி-யில் உயிரி தொழில்நுட்பத் துறை பேராசிரியர் சந்தீப் சேனாபதி தலைமையில் ஆராய்ச்சியாளர்கள் எம்.முகமது ஹாசன், சின்மய் பிந்தி ஆகியோர் அடங்கிய ஆய்வுக் குழு எய்ட்ஸ் நோயைக் குணப்படுத்தும் புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளார்கள். அமெரிக்கன் கெமிக்கல்சொசைட்டி ஆய்விதழில் இந்தக் குழுவினரின் ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டு இருந்தது. இதை தொடர்ந்து “மருந்துகளை செயல்படாமல் செய்யும் திறனுள்ள எய்ட்ஸ் நோய்க்கு, அதன் பலவீனமான பகுதியை மட்டும் கண்டறிந்து,நோய்க்கான மூலக்கூறு அமைப்பை சிதைக்கக் கூடிய…
கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக நியமிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் வேலைபார்க்கும் தற்காலிக ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்று வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தார். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழங்கி உள்ளார். இதில் தற்காலிக ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக நியமிக்க உத்தரவிட்டு இருந்தார். இந்த உத்தரவு வழக்கு தொடர்ந்த ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் தற்காலிக ஊழியர்களுக்கும் பொருந்தும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தனது தீர்ப்பில் கூறியுள்ளார். தற்காலிக…
கர்ணன் – கண்டா வர சொல்லுங்க பாடல் வீடியோ பாடல் | தனுஷ் | மாரி செல்வராஜ் | சந்தோஷ் நாராயணன்
தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளதாம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. இப்படத்தை ஏற்கனவே ஓ.டி.டி.யில் வெளியிட முயற்சிகள் செய்தார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தனுஷ், “தியேட்டர் உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள், சினிமா ஆர்வலர்கள் மற்றும் எனது ரசிகர்களைப் போல நானும் ‘ இப்படம் திரையரங்கில் தான் வெளியாகும் என்று நம்பிக்கையுடன் உள்ளேன்’’ என்று டுவிட்டரில் பதிவு செய்திருந்தார். தமிழகம் முழுவதும் உள்ள தனுஷ் ரசிகர்கள் ‘ஜகமே தந்திரம்’ படத்தை ஓ.டி.டி.யில் வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்களை ஒட்டினர். இதையடுத்து ‘ஜகமே தந்திரம்’ படத்தை தியேட்டர்களில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருந்தது. ஆனால் ‘ஜகமே தந்திரம்’ படத்தை தயாரித்த நிறுவனம் தான் ‘ஏலே’ பட த்தையும் தயாரித்தது. இந்த படம் ஓ.டி.டி.யில் வெளியாகிவிட்டது. அதனால் தியேட்டர் அதிபர்கள் ‘ஜகமே தந்திரம்’ படத்தை திரையரங்கில் வெளியிட…
புதுச்சேரியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும், துணை நிலை ஆளுநராக இருந்த கிரண் பெடிக்கும் இடையே கடுமையான மோதல் உருவாகி வந்தது. துணை நிலை ஆளுநரை மாற்றவேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி போர்க்கொடி எழுப்பி வந்தார். இதை தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிப்ரவரி 16 ஆம் தேதி கிரண் பெடியை திரும்பப்பெறுவதாக கூறினார். இதற்கிடையே, தெலுங்கானாவில் 2- வது ஆளுநராக இருக்கும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி மாநில ஆளுநர் பொறுப்பையும் கவனித்துக்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், இன்று காலை 9 மணிக்கு, புதுச்சேரி துணை நிலை ஆளுநராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பேற்றுக்கொண்டார். புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடி நீக்கப்பட்டதை தொடர்ந்து, பொறுப்பு ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் இன்று பொறுப்பு ஏற்றார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி தமிழிசை சவுந்தரராஜனுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். புதுச்சேரியில் 5-வது பெண் துணை நிலை…
சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்து ரவிகுமார் இயக்கத்தில் முடித்துள்ள படம் அயலான். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு அயலானில் வரும் ‘வேற லெவல் சகோ’ பாடல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இன்று காலை வெளியிட்டனர். பாடலை கேட்ட சிவகார்த்திகேயன் மற்றும் ரசிகர்கள் ஆஹா, ஓஹோ, பேஷ் பேஷ், ரொம்ப நல்லா இருக்கு என்றெல்லாம் தெரிவித்துள்ளனர். சிவகார்த்திகேயன் பர்த்டே ட்ரீட் ஆக வெளியான ‘வேற லெவல் சகோ’ பாடல் நெஜமாவே வேற லெவல் தான் என்று கொண்டாடி கொண்டிருக்கும் நேரத்தில் ஏ.ஆர். ரஹ்மான் தற்போது தான் ட்வீட் போட்டுயிருக்கிறார் ரஹ்மானின் ட்வீட்டைரை பார்த்து சிவகார்த்திகேயன் மற்றும் ரசிகர்கள் கூறுவது ரொம்ப நன்றி சார். பாட்டு அருமையாக உள்ளது. உங்களின் வாய்ஸை கேட்டு மெய் சிலுக்கிறது. ரிப்பீட் மோடில் கேட்டுக் கொண்டிருக்கிறோம். நீங்கள் ஜீனியஸ் தான் என்று கூறுகிறார்கள்.
ராஜஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சதம் இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலை சதம் அடித்துள்ளது. தொடர்ந்து 9-வது நாளாக இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாடு முழுக்க உயர்ந்த நிலையில், ராஜஸ்தானில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ கங்காநகர் பகுதியில் ஹைய் ஆக்டேன் கொண்ட ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 102.34க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் சாதாரணப் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 99.56 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் ரூ.92.13 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பெட்ரோல் விலை சதம் கடந்த நகர் என்ற நிலைமைக்கு அந்த ஊர் தள்ளப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் மீதான தொடர் விலை உயர்வு மற்றும் மத்திய அரசு கூடுதல் வருமானத்திற்காகப் பெட்ரோல் மற்றும் டீசல் மீது…
மாஸ்டர் – பொலக்கட்டும் பரா பரா வீடியோ | தலபதி விஜய் | விஜயசேதுபதி | அனிருத் ரவிச்சந்தர் பாடல் தலைப்பு: பொலக்கட்டும் பரா பரா ஆல்பம் / திரைப்படம்: மாஸ்டர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார் பாடல் – விஷ்ணு எடவன் குரல் – சந்தோஷ் நாராயணன் நட்சத்திரம் விஜய், விஜய் சேதுபதி மாலவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, சாந்தனு லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கியுள்ளார் டாப் – சத்யன் சூரியன் ஆசிரியர் – பிலோமின் ராஜ் தயாரிப்பாளர் – சேவியர் பிரிட்டோ இணை தயாரிப்பாளர்கள் – லலித் குமார், ஜெகதீஷ் பழனிசாமி
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா தோல்வியடைந்த நிலையில் 50 விழுக்காடு ரசிகர்களுடன் மிகவும் எதிர்பார்ப்புடன் 2ஆவது போட்டி நடந்துபெற்று வருகிறது. டாஸ்யில் வென்ற இந்திய அணி உலக சாம்பியன்ஷிப்யில் தகுதி பெற இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற சூழ்நிலையில் இந்திய அணி இருக்கிறது. டாஸ்யில் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்ந்தெடுத்தார். இந்தப் போட்டியில் இந்திய அணியில் 3 மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி முதல் டெஸ்ட்டில் விளையாடிய பும்ரா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷபாஸ் நதீம் ஆகியோர் நீக்கப்பட்டு, இவர்களுக்கு பதிலாக அக்ஸர் படேல், குல்தீப் யாதவ் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இதனையடுத்து டாஸ்யில் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்து தொடர்ந்தது விளையாடிவருகிறது. தொடக்க வீரர்களாக சுப்மன் கில், ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினர்கள். இதில்…
டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தராகண்ட், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் நேற்று இரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பல இடங்களில் கட்டிடங்கள் குலுங்கியதால், மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு அவசரமாக வெளியேறினர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. தஜிகிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பஞ்சாப் அமிர்தசரஸ் பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக பல இடங்களில் கட்டிடங்கள் குலுங்கின. வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த மக்கள், அச்சத்தில் வீடுகளை விட்டு அவசரமாக வீதிகளை நோக்கி ஓடிவந்தனர். இந்த நிலநடுக்கத்தில் நள்ளிரவு வரை எவ்வித உயிர்ச்சேதமும் இல்லை என பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங் தெரிவித்தார். தலைநகர் டெல்லி பஞ்சாப்பை போல் தலைநகர் டெல்லியிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அனைத்து மக்களின் பாதுகாப்பிற்காக கடவுளிடம் பிரார்த்திப்பதாக கூறியுள்ளார். மேலும்…
