பச்சா பச்சிகே வீடியோ பாடல் | பாரிஸ் ஜெயராஜ் | சந்தனம் | சந்தோஷ் நாராயணன் | ஜான்சன் கே லார்க் ஸ்டுடியோஸ் பிரசண்ட்ஸ் சந்தனம் இல் & என “பாரிஸ் ஜெயராஜ்” பாடல் பெயர்: பச்சா பச்சிகே இசை: சந்தோஷ் நாராயணன் பாடல்: ரோகேஷ், மெட்ராஸ் மீரன் பாடகர்: சந்தோஷ் நாராயணன் பாஸ் தோல் – ஆறுமுகம் பக்க டிரம் – சரத் பாஸ் டிரம் – தனிகவேல், தேவங்கு சத்தி – சரத் கட்டே மொல்லோம் – க out தம், புவனேஷ், வல்லரசு டேப்ஸ், ஜே.எஸ்.ஜெயராம், யுவராஜ், கமல், தினேஷ் டோலக், டோல்கி: கணபதி, வெங்கட் கோரஸ்: பிரிட்டோ, சின்னா, யோகி சேகர், சுகுமார் சந்தோஷ் நாராயணன் @ ஃபியூச்சர் டென்ஸ் ஸ்டுடியோஸ் இசையமைத்தார், ஏற்பாடு செய்தார் கூடுதல் புரோகிராமிங்: ஆர் கே சுந்தர் பதிவுசெய்தவர்: சாய் ஷ்ரவனம், சுகுமார், ஆர்.கே.சுந்தர், சந்தோஷ் நாராயணன் @ எதிர்கால…
Author: gpkumar
நடிகை ஷாலினி முதலில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். இவர் கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இதையடுத்து நடிகை ஷாலினி மலையாளத்தில் வெளியாகிய ‘அனியாத பிறவு’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். மலையாளத்தில் வெளியாகிய ‘அனியாத பிறவு’ என்ற படம் தமிழில் ‘காதலுக்கு மரியாதை’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்தப்படத்தை இயக்குநர் ஃபாசில் இயக்கினார். இதிலும் கதாநாயகியாக ஷாலினியே நடித்தார். இதன் மூலம் ஷாலினி தமிழிலும் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படம் வெற்றி பெற்றதால் ஷாலினிக்கு வாய்ப்புகள் குவிந்தன. அஜித்குமார் ஜோடியாக அமர்க்களம் படத்தில் நடித்தார். இதற்கிடையே 1999-ம் ஆண்டு இப்படப்பிடிப்பின் போது, படத்தின் ஹீரோ அஜித்துக்கும் ஷாலினிக்கும் காதல் ஏற்பட்டது. மணிரத்னம் இயக்கத்தில் நடித்த ‘அலைபாயுதே’ படம் ஷாலினிக்கு இன்னொரு திருப்பு முனை படமாக அமைந்தது. கண்ணுக்குள் நிலவு, பிரியாத வரம் வேண்டும் ஆகிய படங்களை நடித்து முடித்த கையோடு 2000-ம் ஆண்டில்…
நாடு முழுதும், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, கடந்த மார்ச் மாதம் இறுதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மே மாதம் வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. ஆனால் ஜூன் மாதம் முதல் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன. நாட்டின் பல நகரங்களில் பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது . தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 22 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.90.18 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் டீசல் விலை நேற்றைய விலையிலிருந்து 28 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் டீசல் ரூ.83.18 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை மாற்றி …
சம்பத்ராமின் 200 வது படம் ”கசகசா” நாளை எம்.எக்ஸ் பிளேயர், ஹங்காமா ஆகிய ஒடிடி தளங்களில் வெளியாகிறது. வெளியாகியுள்ளது. சம்பத்ராம் ரஜினிகாந்த், கமல்ஹாசன்,அஜித், விஜய், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் வில்லன், குணச்சித்திர வேடம் என்று பல படங்களில் கலக்கி வருகிறார். தமிழ் மட்டும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார். டாக்டர். தமிழ் சுடர் அறிமுக இயக்குநராக ‘கசகசா’படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலரை நேற்று இயக்குநர் பா.இரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இயக்குநர் பா.இரஞ்சித் இத்திரைப்படத்தின் டிரைலரை பார்த்து படக்குழுவினரை அதிகமாக பாராட்டியுள்ளார். இத்திரைப்படத்தில் சம்பத்ராம் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். சம்பத்ராம், ஹீரோயிசம் மற்றும் வில்லத்தனம் கலந்த வித்தியாசமான வேடத்தில் மிகவும் கலக்கலாக நடித்துள்ளார்
விஜய் ஹசாரே போட்டிக்கான தமிழக அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் விடுவிக்கப்பட்டுள்ளார். பிசிசிஐயின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டியுள்ளது. இடது கை வேகப்பந்து வீச்சாளர் நடராஜன், சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியை சேர்ந்தவர். இவர் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டித்தொடரில் பங்கேற்று ,டெஸ்ட் ,ஒரு நாள் ,டி20 போட்டிகளில் அறிமுகமானவர். விஜய் ஹசாரே ஒரு நாள் போட்டிக்கான தமிழக அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் நடராஜன், தினேஷ் கார்த்திக் தலைமையில் இடம்பிடித்துள்ளார். பிப்ரவரி 20 முதல் மார்ச் 14 வரை, விஜய் ஹசாரே ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது. டி 20 தொடரிகளில் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் நிச்சயம் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் கலந்து கொள்ள இருப்பதால் தற்போது ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. விஜய் ஹசாரே ஒரு நாள் போட்டியில் தமிழக அணி சார்பாக நடராஜன் விளையாடினால்…
அம்மா பாடல் – சக்ரா (தமிழ்) | விஷால் | யுவன் சங்கர் ராஜா | ஷ்ரத்தா ஸ்ரீநாத் | சின்மாயி
தனுஷ் கட்டும் புதிய வீட்டின் பூமி பூஜையில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். தனுஷ் நடித்த கர்ணன் படப்பிடிப்பு முடிந்தநிலையில், அடுத்து கார்த்திக் நரேன் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகன் தனுஷ்யும் கதாநாயகி மாளவிகா மோகனனும் நடிப்பதாகவும், முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த புதிய படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்ததாக அந்தப்படத்தின் கதாநாயகி மாளவிகா மோகனன் அவரது ட்விட்டர் பக்கத்தில் அப்டேட் செய்திருந்தார். இதனைத்தொடர்ந்து ரூஸோ சகோதரர்கள் இயக்கும் ‘தி க்ரே மேன்’ படப்பிடிப்பில் தனுஷ் கலந்து கொள்ள நேற்று இரவு அமெரிக்கா செல்ல இருந்ததாகச் சொல்லப்பட்டது. அவெஞ்சர்ஸின் ஃபினிடி வார், எண்ட்கேம் உள்ளிட்டப் படங்களை இயக்கியதும் ரூஸோ சகோதரர்கள் தான். இந்நிலையில் தனுஷ் இன்று போயஸ்கார்டனில் தான் கட்டும் புதிய வீட்டுக்கான பூமி பூஜையில் ஈடுபட்டுள்ளார். அந்த பூஜையில் நடிகர் ரஜினிகாந்த், தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், லதா ரஜினிகாந்த் ஆகியோர் கலந்துகொண்டனர். தனுஷ் புதிய வீடு பூமி…
மியான்மரில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்வதாக கூறப்படுகிறது. ” யாங்கோன் ” என்ற நகரத்தில் மட்டும் மூன்று லட்சத்திற்கும் அதிகமாக தமிழர்கள் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. பக்கோ, மூன், கரீன், ஏராவடி உள்ளிட்ட மாநிலங்களிலும் தமிழர்கள் பெருமளவில் வாழ்ந்து வருகிறார்கள். அங்கு இப்பொழுதும் தமிழ் மொழி பேசப்பட்டு, கலாசாரமும், பாரம்பரியமும் பாதுகாக்கப்பட்டு வருகிறதாம் . 1962 முதல் 2011 வரை என சுமார் 49 ஆண்டுகளுக்கு மியான்மரை ராணுவம்தான் ஆட்சி செய்தது. ராணுவத்தின் ஆட்சியில் உரிமைகளை இழந்து, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு , மக்கள் 2015-ஆம் ஆண்டு முதல் சுவாசிக்க தொடங்கிய சுதந்திர காற்று இப்பொழுது மீண்டும் பறிக்கப்பட்டுவிட்டது என்று மியான்மரின் யாங்கோன் நகரை சேர்ந்த பர்மிய திரைப்பட இயக்குநரும், தமிழருமான சுந்தர்ராஜ் கூறுகிறார் . தமிழர்களின் பிரச்சனைகள் மியான்மர் வாழ் தமிழர்களான இயக்குநர் சுந்தர்ராஜ் மற்றும் வழக்குரைஞரான அகத்தியன் ஆகிய இருவரும் வெளிப்படுத்திய பிரச்சனைகள். பல்வேறு காரணங்களுக்காக தமிழர்கள் பல…
நோயின்றி வாழும் மனிதர்கள் தான் பணக்காரர்களாக கருதப்படுகிறார்கள். எவ்வளவு வசதியாக இருந்தாலும் நாம் நோயில்லாமல் வாழ்ந்தால் தான் நல்லது. இதற்கு இயற்கையான மருத்துவ முறையில் என்ன செய்யலாம் என்று சிலவற்றைப் பார்ப்போம் . கொத்தமல்லி விதையை (தனியா) தண்ணீரில் கொதிக்கவைத்து ஆறியபின் அந்த தண்ணீரில் கண்களை கழுவி வந்தால் கண்கள் குளிர்ச்சியாக இருக்கும். கணினியில் அதிக நேரம் வேலை பார்ப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் இவை அனைத்தையும் சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து வடிக்கட்டி இரவில் ஒரு டம்ப்ளர் குடித்து வந்தால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம். வெங்காயத்தை நெருப்பில் சுட்டு சாப்பிட்டு வந்தால் பித்தநோய்கள் தீரும். தயிரை உடம்பில் தேய்த்தது குளித்து வந்தால் வேர்க்குரு வராது. வேர்க்குரு வந்தாலும் குணமாகிவிடும்.உலர் திராட்சைப் பழத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் இதய நோய் குணமாகும். மாதவிடாய்…
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான “பரியேறும் பெருமாள்” படத்தில் நடிகர் கதிரிக்கு அப்பாவாக நடித்த தங்கராசுவின் நிலைமையை பார்ப்போம். நாட்டுப்புற கலைஞரான தங்கராசுவின் திறமையை அறிந்த மாரி செல்வராஜ், இவருடைய முதல் படத்திலே தங்கராசுக்கு நடிக்க வாய்ப்பளித்தார். இந்த படம் தமிழகத்தில் பட்டி தொட்டியெல்லாம் பெரும் வெற்றியை தேடித்தந்தது,இருந்தாலும் தங்கராசுவின் நிலைமை மாறவில்லை. இவர் வசிக்க ஒரு நல்ல வீடு கூட இல்லாத நிலைமையில், அவதிபடுக்கிறார் . இதை அறிந்த தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நெல்லை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்க்கு கொண்டு சென்று இருக்கிறார்கள். தங்கராசு சுமார் 40 ஆண்டுகளாக பெண்வேடம் அணிந்து நாட்டுப்புற கலைஞராக நடித்தவர். இவர் தன் மனைவி பேச்சிக்கனியுடன் மிகவும் சேதமடைந்த கூரை வீட்டில் வசித்து வருகிறார்.இந்த வீடு நெல்லை வண்ணாரப்பேட்டையில் இளங்கோ நகரில் உள்ளது. இவருடைய வீட்டுக்கு கதவு, மின்விளக்கு எதுயும் இல்லாதால் டீச்சர் டிரைனிங் முடித்த தனது மகளை…
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக யாங்கூன் நகரில் 2வது நாளாக மக்கள் பெரும்திரலாக கூடி போராட்டம் நடத்திவருகின்றார்கள். தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 642 இடங்களில் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி உள்ளிட்ட 90-க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கொரோனா பெருந்தொற்றுக்கு இடையே நடைபெற்ற இந்த தேர்தலில் எதிர்பார்த்ததைவிட மிக அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கட்சி மீண்டும் ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தலில் பெரிய அளவில் ஆளும் ஜனநாயக கட்சியரினால் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அந்நாட்டு ராணுவம் சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது…
“சூது கவ்வும்” படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் அசோக் செல்வனின் தீனி படத்தின் ட்டெய்லர் இன்று வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு இவர் நடித்த ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் மக்களுக்கிடையே பெரும்வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து ‘தீனி’ திரைபட ட்டெய்லர் வெளியாகியுள்ளது . இப்படத்தில் அசோக் செல்வனுடன் நடிகைகள் ரீத்து வர்மா, நித்யா மேனன்,நாசர் ஆகியோர் நடித்துள்ளார்கள். இப்படத்தை அனி.ஐ.வி.சசி இயக்கி உள்ளார். இப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார். இவர் மலையாளத்தில் ‘ பிரேமம்’ படத்திற்கும் இசையமைத்துள்ளார். திவாகர் மணி ஒளிப்பதிவில் இப்படத்தின் ட்ரெய்லர் இன்று (05.02.2021) வெளியாகியுள்ளது.இப்படத்தின் ட்ரெய்லரை தனுஷ் தனது ட்விட்டரில் வெளியிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் காமெடியும் , ஆழமான காதலும் இருப்பதாக கூறப்படுகிறது .அசோக் செல்வன் உடல் பருமனான, வித்தியாசமான கதாபாத்திரத்திலும் ,சமையலை ஒட்டிய காட்சிகளிலும் பின்னிப்பிணைந்து இருக்கிறார் என எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.
9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்குச் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக தமிழக அரசு இந்த முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்குக்கு பிறகு ஜனவரி 19-ம் தேதியன்று10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன. பொதுத் தேர்வு எழுதும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தற்போது வகுப்புகள் நடந்து வருகின்றன.இதனை தொடர்ந்து மாணவர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் உடல் வெப்பப் பரிசோதனை செய்த பிறகு பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் கிருமிநாசினியால் கைகளைச் சுத்தம் செய்த பிறகே பள்ளி வளாகத்துக்குள் அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். வகுப்பறையில் தனிமனித இடைவெளி,முகக்கவசம் அணிதல் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் பள்ளி மாணவர்கள் பின்பற்றி வருகின்றனர். வகுப்பறையில் ஒரு மேஜைக்கு இருவர் என்ற விதத்தில் 20 அல்லது 25 பேர் மட்டுமே உட்கார அனுமதிக்கப்பட்டுகிறார்கள். பள்ளிகள் வாரத்தில் 6 நாட்கள் செயல்படும் என்று…
சிவகார்த்திகேயனின் ” டாக்டர் ” திரைபடத்தின் பணிகள் முடிவடைந்து வரும் மார்ச் மாதம் 26-ம் தேதி திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் சிவகார்த்திகேயன் – நெல்சன் திலீப் குமார் கூட்டணியில் தயாரிக்கபட்டுள்ளது. அடுத்து சிவகார்த்திகேயன் ” டான் ” படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் திரைபடக்குழு “டான்” படத்தில் நடிக்கும் நடிகர்களின் பெயரை வெளியிட்டுயுள்ளது. டாக்டர் படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக ப்ரியங்கா அருள் மோகன், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இணைந்து நடிக்கிறார். லைகா தயாரிக்கும் ‘டான்’ திரைப்படத்தை அறிமுக இயக்குநராக சிபி சக்கரவர்த்தி இயக்குவார் என்று படக்குழு தெரிவித்துள்ளது. முதல்முறையாக இயக்குநர் மற்றும் நடிகரும்மான எஸ்.ஜே.சூர்யா சிவகார்த்திகேயன் உடன் இணைந்து “டான்” திரைப்படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. டாக்டரைத் தொடர்ந்து டானுக்கும் அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சூரி – சிவகார்த்திகேயன் உடன் நகைச்சுவை கூட்டணி அமைத்திருக்கிறார். ‘டான்’ படத்தில் தான்…
