சந்திராஷ்டமம் என்பது ஒரு ராசிக்கு எட்டாவது இடத்தில் சந்திரன் அமர்வதால் அந்த ராசிக்கு சந்திராஷ்டமம் என்று பொருளாகும். இதனால் எப்படிப்பட்ட சிக்கல் சந்திக்கக் கூடும், அதற்கு பயப்பட வேண்டுமா, அதற்கான பரிகாரங்கள் என்ன என்பதை விர்வாக பார்ப்போம்…

சந்திர பெயர்ச்சி:

பொதுவாக ஒரு கிரகம் நகர்வு நிகழ்ச்சிக்கு பெயர்ச்சி என்று பெயர்.

  • சந்திரன் – 2 1/4 நாட்கள் (சராசரியாக 54 மணி நேரம்)
  • சூரியன் – ஒரு நாள்
  • புதன் கிரகம் – 27 நாட்கள்
  • செவ்வாய் – 45 நாட்கள்
  • குரு பகவான் (வியாழன்) – சுமார் ஒரு ஆண்டு
  • ராகு – கேது கிரகங்கள் – ஒன்றரை ஆண்டுகள்
  • சனி கிரகம் – சுமார் 2 1/2 (இரண்டரை ஆண்டு)

இதில் ஒரு ராசியில் மிக நீண்ட காலம் இருப்பது சனி பகவான்.

சந்திராஷ்டமம்:-

  • நாம் தினமும் நாள் காட்டியைப் பார்க்கும் போது ராசி பலன், சந்திராஷ்டமம் என்பதைப் பார்த்திருப்போம். அது என்ன சந்திராஷ்டமம், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நட்சத்திர பெயர் போட்டுள்ளதே என நினைத்திருப்போம்.
  • அஷ்டம் என்றால் எட்டு. சந்திரன் உங்கள் ராசியிலிருந்து 8வது ராசியில் சஞ்சரிப்பதற்கு சந்திராஷ்டமம் என்று பெயர்.
  • அப்படி உங்கள் ராசிக்கு 8வது இடத்தில் சந்திரன் அமைந்திருந்தால், அது உங்களுக்கான சந்திராஷ்டம காலமாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக 27 நட்சத்திரங்கள் என்பதால், 25 நாட்களுக்கு ஒருமுறை இந்த சந்திராஷ்ட நிகழ்வு உங்களின் ஜென்ம நட்சத்திரத்திற்கு ஏற்படும்

சந்திராஷ்டத்திற்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம்?

  • சந்திரன் மனோகாரகன் என்பார்கள். அதாவது நம்முடைய மன நிலையை நிர்வகிப்பவர். அவர் சந்திராஷ்டமமான 8வது இடத்தில் அசுப பலன்களை உண்டாக்கக் கூடியவர் என்பதால் அந்த 2 1/4 நாட்கள் உங்களுக்கு சற்று மன இறுக்கம் ஏற்படும் அவ்வளவு தான். ஆனால் இதற்காக ஏன் அந்தளவுக்கு கவலைப் பட வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது…
  • மனதை கட்டுப்படுத்த தெரிந்தவர்களுக்கும், எதையும் தாங்கும் பலமான இதயம் கொண்டவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் மற்றவர்களுக்கு சற்று பிரச்னை தான். அவர்கள் அவர்களை சுற்றி நடக்கும் மன குழப்பத்தை உருவாக்கும் நிகழ்வுகளிலிருந்து எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
  • இந்த நாட்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் காலண்டரில் தனியாக குறிப்பிடுகின்றனர். சந்திராஷ்டம நேரத்தில் நம் மனது பதற்றமாக இருப்பதால் செயல்கள் வெற்றி அடைவதில் சிக்கல் ஏற்படும். இதை உணர்ந்து நாம் அந்த நாளில் திட்டமிட்டு செயல்படுதல் நல்லது.

​சுப நிகழ்ச்சிகள் இல்லை:

  • மனித உடலில் மிக முக்கியமாக இருப்பது ரத்தம். சந்திரன் அவரைப் போன்றவர். இந்த நாளில் ரத்தம் சூடேறும், பதற்றம் அதிகரிக்கும் என்பாதால், ரத்த கொதிப்பு, ரத்தம் சார்ந்த உடல் பிரச்னை உள்லவர்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  • இது போன்ற காரணங்களால் தான் இந்த நாளில் நாம் ஒருவருடைய சுப நிகழ்ச்சி வைக்கும் போது அந்த நபருக்கு சந்திராஷ்டமம் இருக்கின்றதா என்பதைப் பார்த்து சுப நிகழ்ச்சிகளை வைக்கின்றனர்.

அறுவைசிகிச்சை:

  • திருமணம், கிரகப்பிரவேசம், உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுக்கும் ஜோதிடர்கள் இந்த தினத்தை தவிர்த்து விடுகின்றனர். அதுமட்டுமல்லாமல் சுப நிகழ்வை நடந்துபவர் மட்டுமல்லாமல் அவரின் பெற்றோருக்கும் சந்திராஷ்டமம் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
  • மருத்துவ அறுவை சிகிச்சை செய்ய இருக்கும் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்யும் முன் சந்திராஷ்டமம் உள்ளதா என்பதை பார்த்து அப்படி இருந்தால், அந்த நாளை தவிர்த்து விடுவார்கள். அந்த நாளில் பதற்றம் அதிகரிக்கும் என்பதால் சிகிச்சை தோல்வியில் முடியலாம் எனப்தற்காக இப்படி செய்கின்றனர்.

​பரிகாரம்:

  • அதற்காக சந்திராஷ்டம நாளில் எந்த வேலையும் செய்யாமல், வெளியில் போகாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்க வேண்டுமா என கேப்டது புரிகிறது…
  • மிக முக்கிய அறுவை சிகிச்சை என்றால் தள்ளிப் போட முடியாது. அதற்குரிய பரிகாரம் உண்டு என்பதை தெரிந்துகொள்ளுங்கள்..
  • சந்திரனுக்கு உரிய திரவமான பாலை குடித்துவிட்டு உங்களின் அன்றாட பணியை துவங்கலாம். குளிர்ச்சியான பாதாம் பால் குடித்து உங்களின் பதற்றத்தினை குறைத்துக் கொள்ளுங்கள்.

முதலிரவு:

  • முதலிரவில் மணமக்கள் பால் அருந்த வேண்டும் என்ற சம்பிரதாயம் வைத்தனர். பதற்றம் இல்லாமல் அவர்களின் வாழ்க்கையை துவங்க வேண்டும் என்பதற்காக தான் பால், பழங்கள், பூ ஆகியவைகளுடன் சிறப்பு எற்பாடு செய்து மணமக்களை அனுப்புகின்றனர்.
  • நாம் அன்றாட பணிகளை சாரியாக, திட்டமிட்டு செய்ய வேண்டும் என்பதற்கு தான் ஜோதிடர்கள் முன்கூட்டியே சந்திராஷ்டம தினத்தை குறித்து வைத்து கவனமாக இருக்க வலியுறுத்தியுள்ளனர்.

 

ஜோதிடத்தில் ராசிபலன் பார்க்கும்போது பலரும் கவனிக்கும் அம்சங்களில் ஒன்று சந்திராஷ்டமம் ஆகும். சந்திராஷ்டமம் என்றால், அன்றைக்கு எதிலும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். புதிய முயற்சிகளிலும் ஈடுபடக்கூடாது என்று கூறுவார்கள். அதற்குக் காரணம், ஒருவருடைய மனதுக்கு அதிபதி சந்திரன். அவர் ஒரு ராசிக்கு எட்டாவது வீட்டில் மறைவு பெற்றிருக்கும்போது, மனதில் தேவையற்ற சஞ்சலங்கள் ஏற்படக்கூடும். மனம் அமைதியின்றி தவிக்கவும் நேரிடும். தெளிவான முடிவுகளை எடுக்க முடியாமல் போகும். எனவேதான் பெரும்பாலானோர் சந்திராஷ்டம தினங்களில் எந்த ஒரு புது முயற்சியிலும் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டும் என்று முடிவு செய்வர். உண்மையில் சந்திராஷ்டமம் என்பது எல்லோருக்கும் கெடுதல் செய்யுமா என்றால் அதுதான் இல்லை என்கிறார் ஜோதிட நிபுணர் பெருங்குளம் ராமகிருஷ்ணன். நம்மிடம் சந்திராஷ்டமம் பற்றிப் பேசும்போது

  • ”சந்திராஷ்டமம் என்றாலே, இன்றைக்கு எல்லோர் மனதிலும் ஒருவித அச்ச உணர்வு ஏற்படுகிறது. ஆனால், அப்படிப் பயப்படத் தேவையில்லை. சந்திராஷ்டமம் எல்லா நட்சத்திரக்காரர்களுக்கும் தொல்லை தராது. மேலும் ரிஷபம் மற்றும் கடக ராசியில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் நல்லது மட்டுமே செய்யும்” என்று கூறினார். தொடர்ந்து சந்திராஷ்டமம் என்றால் என்ன அதற்கு உரிய பரிகாரங்கள் எவை என்பது பற்றி விவரிக்கிறார் …
    சந்திராஷ்டமம் என்பது ஒரு ராசியில் இருந்து எட்டாவது ராசியில் சந்திரன் சஞ்சரிக்கக்கூடிய காலமாகும். இதை
  • மிகச் சரியாகக் குறிப்பிட்டுச் சொல்வதென்றால் ஒரு நட்சத்திரத்துக்குப் பதினேழாவது நட்சத்திரத்தின் பாதத்தில் சந்திரன் சஞ்சரிக்கும்போது அந்த நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம்.
  • உதாரணமாக விருச்சிகராசியில் சந்திரன் சஞ்சரிக்கும்போது, அந்த ராசி மேஷ ராசிக்கு எட்டாவது ராசியாக அமைகிறது. எனவே விருச்சிக ராசியில் சந்திரன் இருக்கக்கூடிய இரண்டே கால் நாள்கள் மேஷ ராசிக்கு சந்திராஷ்டம நாள்களாகும். ஆனால், மேஷராசியில் பிறந்தவர்கள் அனைவருக்கும் இரண்டே கால் நாள்கள் சந்திராஷ்டமம் என்று சொல்லிவிட முடியாது.

துல்லியமாகச் சொல்வதென்றால், மேஷராசியில் அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் என்று இரண்டு நட்சத்திரங்கள் இடம் பெற்றிருக்கின்றன. அதேபோல் விருச்சிக ராசியில் விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

  1. அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் விருச்சிக ராசியில் அனுஷ நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும்போது சந்திராஷ்டம நாளாகும். மேஷ ராசி பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் அதே விருச்சிக ராசியில் கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் நாள் சந்திராஷ்டம நாளாகும்.
  2. மேஷ ராசி கிருத்திகை நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் விருச்சிக ராசியில் கேட்டை நட்சத்திரம் 4-ம் பாதத்தில் சஞ்சரிக்கும் வேளை சந்திராஷ்டம காலமாகும். கிருத்திகை 2, 3, 4 ஆகிய பாதங்களில் பிறந்தவர்களுக்கு சந்திரன் மூலம் நட்சத்திரம் தனுசு ராசியில் சந்திரன் சஞ்சரிக்கும் வேளை சந்திராஷ்டம நாளாகும்.
  3. சந்திரனைப் பற்றி மற்றுமொரு விஷயத்தையும் குறிப்பிடவேண்டும். சந்திரன் மாத்ருகாரகன். எனவே ஒருவருக்கு சந்திராஷ்டம நாளில் தாயுடன் கருத்துவேறுபாடு, தாய்வழி உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் போன்ற பலன்களும் ஏற்படும்.
  4. ஜோதிட ரீதியாக பொதுவாக ஒரு நாளுக்கு பலன் பார்க்கும் போது சந்திரனை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்.

அதனால்தான் ஜனன கால சந்திரனுக்கு கோசார சந்திரன் எந்த நிலையில் இருக்கிறாரோ அதை வைத்து முடிவு செய்கிறோம். கடகம் மற்றும் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டம நாள் கெடுதல் செய்யாது. காரணம் கடகம் சந்திரன் ஆட்சி பெறும் ராசி என்பதாலும், ரிஷபம் சந்திரன் உச்சம் பெறும் ராசி என்பதாலும் அந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு சந்திரன் நன்மையே செய்வார்.

  • அதேபோல் தன்னுடைய நட்சத்திரங்களான ரோகிணி – அஸ்தம் – திருவோணம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டம தினத்தில் நல்லது மட்டுமே நடக்கும். வளர்பிறையில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டம தினத்தில் நன்மை நடக்கும். அதனால் சந்திராஷ்டமம் என்றால் எல்லோருக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என்று சொல்லக் கூடாது.

பரிகாரம்:

  • சந்திராஷ்டம நாளில் எந்த ஒரு செயலையும் ஆரம்பிக்கும் முன் குலதெய்வத்தையும், முன்னோர்களையும், இஷ்டதெய்வத்தையும் வணங்கிவிட்டு ஆரம்பிப்பது நன்மை தரும். இப்படிச் செய்தால் காரியத்துக்கு எந்தத் தடையும் வராது.

சந்திராஷ்டமம் எப்படி கணக்கிட வேண்டும்,

  • ஜோதிடத்தில் கிரக பெயர்ச்சி மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. குரு, சனி, ராகு – கேது பெயர்ச்சி பெரியளவில் கவனிக்கும் நாம், தினமும் பெயர்ச்சி ஆகக்கூடிய சந்திரனை பெரியளவில் கண்டுகொள்வதில்லை. சந்திரனின் பெயர்ச்சியை வைத்து தான் அன்றைய நாளில் நட்சத்திரம், திதி, சந்திராஷ்டமம் ஆகியவை கணக்கிடப்படுகிறது.
  • நவகிரகங்களில் மிக வேகமாக நகரக்கூடிய சந்திரன் ஒரு ராசியிலிருந்து எட்டாவது ராசிக்கு சந்திராஷ்டமம் தினமாக கருதப்படுகிறது. எளிமையாக கூறவேண்டுமானால் ஒரு ராசியில் சந்திரன் அமர்ந்திருந்தால், அதற்கு எட்டாவதாக இருக்கும் ராசிக்கு சந்திராஷ்டம தினம் என்று எடுத்துக் கொள்ளவும்.

ஏன் சந்திராஷ்டமம் முக்கியமானதாக கருதப்படுகிறது?

  • சந்திரனை மட்டும் கணக்கில் கொண்டு சந்திராஷ்டமம் தினமாக எடுத்துக் கொள்ளும் நாம், மற்ற கிரகங்களை ஏன் கண்டுகொள்வதில்லை என்ற கேள்வி மனதில் எழும்.
  • ஏனென்றால் சந்திர கிரகம் மனோகாரகன். இவர் மனதை ஆளக்கூடிய கிரகம் என்பதாலும், அவருக்கு 3-6-8-12 ஆகிய ஸ்தானங்கள் மறைவு ஸ்தானங்கள்.
  • அதிலும் குறிப்பாக சந்திரனுக்கு 8ம் இடம் ஆயுள் ஸ்தானம். இந்த நாட்களில் நம் மனம் ஒரு நிலையில் இருப்பது சிரமமானதாக இருக்கும். அதனால் தான் சந்திராஷ்டம தினத்தில் முக்கிய முடிவுகளைத் தவிக்க வேண்டும் என ஜோதிடர்களும், நம் முன்னோர்களும் சொல்லி வைத்துள்ளனர்.
  • ஒரு நட்சத்திரத்திற்கு நான்கு பாதங்கள், ஒரு ராசிக்கு 9 பாதங்கள். இதில் இரண்டே கால் நட்சத்திரங்கள் அடங்கியது தான் ஒரு ராசி.

நட்சத்திரத்தை வைத்து எப்படி சந்திராஷ்டமம் கணக்கிடுவது :

  • இங்கு தினமும் வரக்கூடிய நட்சத்திரத்தை வைத்து எந்த நட்சத்திரங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதை எளிதாக கணக்கிடலாம். அதைப் பார்ப்போம்.

அசுபதி – விசாகம் 4;அனுஷம் 1, 2, 3
பரணி – அனுஷம் 4;கேட்டை 1, 2, 3
கிருத்திகை – கேட்டை 4;மூலம் 1, 2, 3
ரோஹிணி – மூலம் 4;பூராடம் 1, 2, 3

மிருகசீரிஷம் – பூராடம் 4;உத்தராடம் 1, 2, 3
திருவாதிரை – உத்தராடம் 4;திருவோணம் 1, 2, 3
புனர்பூசம் – திருவோணம் 4;அவிட்டம் 1, 2, 3
பூசம் – அவிட்டம் 4;சதயம் 1, 2, 3

 

 

Tagged in:

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,