மூன்று மாதங்களுக்கு பிறகு விலை உயர்வு

மூன்று மாதங்களுக்குப் பிறகு சமையல் எரிவாயு விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதாக இல்லதரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி மற்றும் 16ஆம் தேதி என இருமுறை மாற்றியமைக்கப்படுகிறது.

கடந்த டிசம்பர் 1ஆம் தேதியன்று 610 ரூபாயாக இருந்த சமையல் எரிவாயு விலை அடுத்தடுத்த உயர்த்தப்பட்டது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் சமையல் எரிவாயு விலை 100 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தியதை அடுத்து மார்ச் 16 ஆம் தேதி வீட்டில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயுவின் விலையை 10 ரூபாய் குறைத்து 825 ரூபாய்க்கு விற்கப்படும் என எண்ணை நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டனர்.

இதனை தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களாக சமையல் எரிவாயு விலை உயர்ந்த படாமலேயே இருந்தது. இந்த நிலையில் தற்போது வர்த்தகம் மற்றும் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையை உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் அதிகரித்து 850 ரூபாய் 50 காசுகள் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வர்த்தக சிலிண்டருக்கான விலை 84 ரூபாய் 50 காசுகள் அதிகரித்து ஆயிரத்து 687 ரூபாய் 50 காசுகள் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

0 Shares:
You May Also Like
TVS Scooty Pep+
Read More

“முதல் காதல்” – புதிய டி.வி.எஸ் ஸ்கூட்டி பெப் + தமிழில் புதிய லோகோவைப் பெறுகிறது

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் சிறப்பு ஸ்கூட்டி பெப் ப்ளஸ் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. தமிழகத்தை சார்த்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனம்…
Read More

ராயல் என்ஃபீல்டு பைக் புதிய நிறங்களில் அறிமுகம்

ஐந்து நிறங்களில் இரண்டு வகையான புதிய பைக்குகளை மார்க்கெட்டில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது பிரபலமாக இருக்கும் இருசக்கரம் வாகனம் தயாரிக்கும் நிறுவனமான…
petrol-deisel
Read More

இன்று பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்துள்ளது

கடந்த 24 நாட்களாக மாற்றமில்லாமல் நீடித்து வந்த பெட்ரோல், டீசல் விலை இன்று சற்று குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப…
gold rate
Read More

இன்று தங்கம் விலை சற்று உயர்வு

இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.24 உயர்ந்து ரூ.33,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 4,235 க்கு விற்கப்படுகிறது உலகம்…
Read More

ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு

இன்று தங்கம் விலை மீ்ண்டும் உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு பவுன் மீண்டும் 34 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தற்போது உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான…