ஐந்து நிறங்களில் இரண்டு வகையான புதிய பைக்குகளை மார்க்கெட்டில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போது பிரபலமாக இருக்கும் இருசக்கரம் வாகனம் தயாரிக்கும் நிறுவனமான ராயல் என்ஃபீல்டு நிறுவனம், இன்டர்செப்டார் 650 (Interceptor 650) என்ற பெயரிலும் , கான்டினென்டல் ஜிடி 650 (Continental GT 650)என்ற பெயரிலும் ஐந்து நிறங்களில் புதிய ராயல் என்ஃபீல்டு பைக்குககளை அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த புது வகையான ராய் என்ஃபீல்டு வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு வடிவமைப்பை மாற்றிக்கொள்ளும் அளவிற்கு பல புதிய சிறப்பு அம்சங்களை இந்த புதிய பைக்குள் அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.

ஆனால் இந்த புதிய பைக்கிள் இஞ்சின் போன்ற அடிப்படை அமைப்புகளை மாற்றி அமைக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்டர்செப்டார் 650 என்ற புதிய பைக்கின் விலை ரூ.2,75,000 என நிர்ணித்துள்ளது. இரண்டாவது கான்டினென்டல் ஜிடி 650 என்ற பைக்கின் விலை ரூ.2,91,000 என்றும் நிர்ணித்துள்ளது.இந்த இரண்டு வகையான வாகனங்கள் 649 சிசி கொண்டவை ஆகும்.

புதிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ராயல் என்ஃபீல்டு வண்டியின் எடை பெட்ரோல் இல்லாமல் 202 கிலோ கொண்டு உள்ளது. இந்த புது நிறங்களில் அறிமுகப்படுத்தியுள்ள ராயல் என்ஃபீல்டு பைக் காதலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

See also  இன்று தங்கம் விலை சற்று உயர்வு