தமிழக அரசு ஏப்ரல் மாதம் 4,5 மற்றும் 6 -ஆம் தேதி மற்றும் மே 2-ஆம் தேதி ஆகிய தினங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், ஒருபுறம் அனைத்து கட்சியினரும் தற்போது தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். மறுபுறம் அரசு சட்டமன்ற தேர்தலை பாதுகாப்பாகவும், அமைதியான முறையில் நடத்துவதற்கு தேவையான வழிகளை செய்து வருகிறது.

இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் ஏப்ரல் 4, 5 மற்றும் 6 ஆகிய மூன்று தினங்களும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை எனவும், மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மே 2-ஆம் தேதி அன்றும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என அரசு அறிவித்துள்ளது.

அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி படுத்தும் வகையில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

See also  ஆறு தல சாமி இல்லடா.. "பத்து தல சிம்பு"....