Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add tamilguru.in to your ad blocking whitelist or disable your adblocking software.

×
gold rate

ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு

  • இன்று தங்கம் விலை மீ்ண்டும் உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு பவுன் மீண்டும் 34 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
  • தற்போது உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்புகிறார்கள் . பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் ஆகியவற்றில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் அனைவரும் தற்போது தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கி உள்ளார்கள்.
  • இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலையும் உயர்ந்து வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் பற்றி பீதி நிலவி வருகிறது.
  • இந்நிலையில் தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கதத்துடன் காணப்படுகிறது.
  • ஏற்கனவே 2021-22ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டு இருந்தது.
  • இதனால் கடந்த சில வாரங்களாகத் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. இந்தநிலையில் தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது .
  • இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.21 உயர்ந்து ரூ.4258-க்கு விற்பனை செய்யப்படுகிறது . மேலும் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.168 உயர்ந்து ரூ.34,064-க்கு விற்பனை செய்யப்படுகிறது .
  • இதேபோல் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.37,192-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • 1 கிராம் வெள்ளி 90 காசுகள் உயர்ந்து ரூ.72.50க்கு விற்பனையாகிறது. அதேபோல இன்று 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.72,500 ஆக இருக்கிறது.