வெங்காயம் மற்றும் பூண்டின் பயன்பாடு சமையலறையில் இன்றியமையாதது. நம் அன்றாட உணவில் வெங்காயம், பூண்டு ஆகிய இரண்டு உணவு பொருட்களை சேர்த்து சமைத்து சாப்பிடுவது மிகவும் சிறந்தது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் நிறைத்து உள்ளது. இவை நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தருகிறது. மேலும் பூண்டு, ஆற்றல் வாய்ந்த பல வகையான சல்பர் கலவைகளை கொண்டுள்ளது. பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, ஈஸ்ட் போன்ற தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதில் பூண்டு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் நாம் அன்றாட உணவில் வெங்காயம் மற்றும் பூண்டை சேர்த்து கொள்ள வேண்டும். இப்போது பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தில் குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் – 20
பூண்டு – 20 (பல் பூண்டு)
புளி – ஒரு எலுமிச்சை பழம் அளவு
நல்லெண்ணெய் – 1 குழிகரண்டி அளவு
தக்காளி – 1
மல்லி தூள் – 3 ஸ்பூன்
மிளகாய்தூள் – 1 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கடுகு வெந்தயம் – தாளிப்பதற்கு
கருவேப்பிலை – 1 இணுக்கு

செய்முறை :

பூண்டு மற்றும் வெங்காயத்தை தோல் நீக்கி தயாராக வைத்து கொண்டு, கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடானவுடன் கடுகு மற்றும் வெந்தயம் போட்டு அதனுடன் கருவேப்பிலையையும் போட்டு தாளிக்க வேண்டும். பின் அதில் முழு சின்ன வெங்காயம் போட்டு இரண்டு நிமிடம் வதக்கி , பிறகு பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பூண்டு, வெங்காயம் வதங்கியதும் அதனுடன் மஞ்சள் தூள், மல்லி தூள் மிளகாய்தூள், மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். பிறகு அதில் கட் பண்ண தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி நன்கு மசியும்படி வதக்க வேண்டும். பின் அதனுடன் கரைத்த புளித்தண்ணீர் சேர்த்து அதனுடன் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து உப்பும் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். கொதித்து கெட்டியான பதம் வரும்போது இறக்கி வைக்க வேண்டும். இதனை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் நாவில் எச்சில் ஊறும் அவ்வளவு சுவையாக இருக்கும்.

 

See also  கொரோனா வைரஸ் காரணமாக அமலுக்கு வந்த கட்டுப்பாடுகள்