ஒலிம்பிக் போட்டியில் அதிக பதக்கங்களைக் வென்ற அமெரிக்காவின் மைக்கேல் பெலப்ஸ், அதி சிறந்த ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட், ஜிம்னாஸ்ட்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ் போன்ற உலகின் தலை சிறந்த வீரர்கள் பலரும் தங்கள் பதக்கங்களை வாயில் வைத்து கடிப்பது போன்ற புகைப்படத்தை நாம் பார்த்திருக்கிறோம். ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்பதைப் பற்றி பார்ப்போம்.

அந்த காலங்களில், பணப்பறிமாற்றத்திற்கு பதிலாக தங்கத்தை பறிமாற்றம் செய்வது வழக்கமாக வைத்து கொண்டு உள்ளார்கள். இதனால் தங்கக் காசின் உண்மைத்தன்மையை அறிய வியாபாரிகள் அதை கடித்துப் பார்த்து சோதிப்பார்கலாம். தங்கம் ஒரு மிருதுவான உலோகம் என்பதால் அதனை லேசாக கடித்தால் கூட தடம் பதிந்துவிடும்.

அதற்காக, ஒலிம்பிக் சாம்பியன்களும் தங்களுக்கு அளித்த பதக்கத்தின் உண்மைத்தன்மையை அறிய இப்படி கடிக்கிறார்கள் என்று நினைத்து விடாதீர்கள். அவர்கள் புகைப்படத்திற்காகத்தான் அவ்வாறு செய்கிறார்கள் என்பது தான் உண்மை. 1912-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் வெல்லும் வீரர்களுக்கு சுத்தமான தங்கத்தில் செய்யப்பட்ட பதக்கங்கள் வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.

புகைப்பட கலைஞர்களின் தொல்லை தாங்க முடியாமல் தான், அவர்கள் கேட்டு கொண்டதற்காகவே தங்கள் வென்ற பதக்கங்களை வாயில் வைத்து கடிப்பது போன்ற போஸ் கொடுக்கிறார்கள். இந்த மாதிரியான புகைப்படங்கள் பத்திரிகைகளின் முதல் பக்கத்தில் வெளிவரும்போது அதன் வீச்சே தனி தான்.

மேலும் பதக்கத்தை கடிப்பது போன்ற வீரரின் புகைப்படங்களே மக்களின் கவனத்தை அதிகமாக ஈர்க்கிறது. அதோடு இல்லாமல், இது போன்ற புகைப்படங்கள் அதிக விற்பனையும் ஆகிறது.

2010 குளிர்கால ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜெர்மானிய வீரர் டேவிட் மோய்லர், பதக்கத்தைக் வாயில் கடிப்பது போன்று புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருக்கிறார். புகைப்பட நிருபர் கேட்டுக் கொண்டதற்காக அவர் பதக்கத்தை கடித்தபடி கொஞ்ச நேரம் போஸ் கொடுத்திருக்கிறார். பின்னர் அவர் இரவு சாப்பிடும்போது என்னுடைய ஒரு பல்லை காணவில்லை என்று சிரித்திருக்கிறார்.

ஆனால் தற்போது ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்கள் தங்களது பதக்கத்தை வாயில் வைத்து கடிப்பது ஒரு வழக்கமாக கொண்டு, அதை கடைபிடித்து வருகிறார்கள். பிரபல டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் கூட, கோப்பை வென்றதும் அதைக் கடித்தபடி புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

See also  மளிகை பொருட்கள் பட்டியல் | Maligai Saman list Tamil