புதினா (மிளகுக்கீரை) ஒரு மருத்துவம் நிறைந்த மூலிகை தாவரமாகும். கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லியைப் போலவே புதினாவையும் நம்முடைய அன்றாட உணவில் மணமூட்டுவதற்காகப் பயன்படுத்துகிறோம். இதன் வாசனைக்காக பிரியாணி போன்ற சமையலில் பயன்படுத்துகிறோம்.

இது மட்டுமல்லாமல் வாயில் இருக்கும் துர்நாற்றத்தை போக்க இதை வாயில் போட்டு மென்றால், வாயிற்கு நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும். இதற்காக தான் சுவீங்கம், மெந்தோ ஃபிரஸ், மவுத் வாஷ் போன்றவற்றில் கூட புதினா பயன்படுத்த படுகின்றனர். மேலும் இதிலுள்ள மருத்துவ குணங்களை நீங்கள் தெரிந்துகொண்டால், அன்றாட உணவில் இதை தொடர்ந்து பயன்படுத்துவீர்கள்.

புதினாவின் மருத்துவ குணங்களை பற்றிப் பார்ப்போம்.

புதினாவில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ச்சத்துக்கள், இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்கள் நிறைந்து இருக்கும். புதினாக் கீரையில் சட்னி செய்து சாப்பிடலாம் அல்லது ஜூஸ் போட்டு அருந்தலாம். புதினாவை எப்படி பயன்படுத்தினாலும் அதன் மருத்துவ குணம் மாறாது.

கொழுப்பு பொருட்களையும், அசைவ உணவுகளையும் எளிதில் ஜீரணமாக்க புதினா உதவுகிறது. புதினா இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. மேலும் பசியை தூண்டும். மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும். பெண்களின் மாதவிடாப் பிரச்னைகள் தீர புதினா பயன்படுத்தப்படுகிறது.

புதினா இலையை நிழலில் காயவைத்துப் பொடித்து செய்து பற்பொடியாகப் பயன்படுத்தினால், ஈரில் ரத்தம் வடிதல், வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகள் வராது.

புதினா கீரையை தண்ணீர் விடாமல் அரைத்து தலைவலி, தசைவலி, நரம்புவலி, கீல்வாத வலி ஆகியவற்றிக்கு பற்றுப் போட்டால் வலி குறையும். உள்நாக்கு வளர்தல், மூட்டு வலி, ஆஸ்துமா போன்றவற்றையும் புதினா குணப்படுத்துகிறது.

நரம்புத் தளர்ச்சி, வறட்டு இருமல், இரத்த சோகை, மஞ்சள் காமாலை, வாதம் ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. முகப்பரு மற்றும் வறண்ட சருமம் உள்ளவர்கள் புதினா இலையில் சாரு எடுத்து முகத்திற்கு உபயோகிக்கலாம்.

நிழலில் காய வைத்த புதினாவை ஒரு கைப்பிடி எடுத்து, ஒன்றரை லிட்டர் நீர் சேர்த்து, கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி, நான்கு மணி நேர இடைவேளையில் 30 மில்லி முதல் 60 மில்லி வரை குடித்துவந்தால், காய்ச்சல் தணியும். காய்ச்சலின் போது ஏற்படும் வாய் கசப்பைப் போக்க, வாய்க்கு ருசியை உணர வைக்க புதினா உதவுகிறது.

பாலில் நிழலில் காய வைத்த புதினா கீரையை போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்துவந்தால் நோய் எதிர்ப்புச் சத்து அதிகரிக்கும். வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் புதினாக்கீரையை துவையலாக செய்து சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும்.

See also  சிறந்த தமிழ் பைபிள் வசனங்கள் மற்றும் quotes

புதினா இலையில் கிடைக்கும் எண்ணெய், பெப்பர்மிண்ட் தைலத்தை போலவே இருக்கும். இதில் காரத்தன்மை குறைவாக இருக்கும். இந்த எண்ணெய்யைத் தலைவலி, மூட்டு வலி, தசைப்பிடிப்பு ஆகியவற்றுக்கு தடவலாம். இந்த எண்ணெய்யை தண்ணீரில் கலந்து பருகினால் வயிற்றுவலி, வயிறு மந்தம் நீங்கி நன்றாகப் பசி உண்டாகும்.

புதினாவின் வாசனை கொசுக்களை விரட்டும் தன்மை கொண்டது. இதனால் வீட்டில் புதினா செடிகளை வளர்க்கலாம். இந்த கீரை உடலுக்கு வெப்பத்தை தரும். அதனால் மூல நோய் உள்ளவர்கள் இக்கீரையை தவிர்ப்பது நல்லது.