IPL 2021 SRH vs KKR: கொல்கத்தா 10 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை தோற்கடித்தது !

  • 14-வது ஐ.பி.எல்,T-20 நேற்று சென்னை சேப்பாக்கத்தில் அரங்கேறிய 3-வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்கள் ஐதராபாத் சன்ரைசர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ஐதராபாத் கேப்டன் வார்னர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
  • இதையடுத்து கொல்கத்தா அணியின் இன்னிங்சை நிதிஷ் ராணாவும், சுப்மான் கில்லும் பவுண்டரியுடன் அதிரடிவுடன் ஆரபித்தனர் சந்தீப் ஷர்மாவின் ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி பறக்க விட்ட நிதிஷ் ராணா தொடர்ந்து தனது ஆட்டத்தை காட்டினார்.
  • பவர்-பிளேயான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் குவித்தனர். சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் வந்ததும் இந்த ஜோடி பிரிந்தது. அவரது பந்து வீச்சில் சுப்மான் கில் (15 ரன்) போல்டு ஆனார்.
  • ரஷித்கான் ஒரு பக்கம் ரன்களை ஓரளவு கட்டுப்படுத்தினாலும் மற்ற பவுலர்களின் பந்து வீச்சை ராணா தெறிக்காவிட்டார் .
  • 2-வது விக்கெட்டுக்கு சென்ற ராகுல் திரிபாதியின் மட்டையும் பந்துகளை நான்கு புறமும் பறக்கவிட்டார். புவனேஷ்வர்குமாரின் ஒரே ஓவரில் இருவரும் சேர்ந்து 3 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 19 ரன்கள் சேகரித்தனர்.இடதுகை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் தனது முதல் 2 ஓவர்களில் 21 ரன்களை வாரிவழங்கிய நிலையில் தனது 3-வது ஓவரில் இந்த கூட்டணியை பிரித்தார்.
  • ஸ்கோர் 146 ரன்களாக (15.2 ஓவர்) உயர்ந்த போது திரிபாதி 53 ரன்களில் (29 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார்.
  • சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிதிஷ் ராணா தனது பங்குக்கு 80 ரன்கள் (56 பந்து, 9 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
  • இதற்கிடையே ஆந்த்ரே ரஸ்செல் (5 ரன்) ரஷித்தின் சுழலில் சிக்கினார். கடைசி கட்டத்தில் கேப்டன் இயான் மோர்கன் 2 ரன்னிலும், ஷகிப் அல்-ஹசன் 3 ரன்னிலும் விக்கெட் ஆனார்கள்.
  • 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுக்கு 187 ரன்கள் குவித்தது. விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் 22 ரன்களுடன் (9 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார். ஐதராபாத் தரப்பில் ரஷித்கான், முகமது நபி தலா 2 விக்கெட்டுகளும், புவனேஷ்வர்குமார், டி.நடராஜன் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
  • அடுத்து 188 ரன்கள் இலக்கை நோக்கி ஐதராபாத் அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான வார்னர், மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் வீசிய முதல் ஓவரில் வழங்கிய கேட்ச் வாய்ப்பை கம்மின்ஸ் வீணடித்தார். ஆனாலும் வார்னர் (3 ரன்) நிலைக்கவில்லை.
  • அவர் பிரசித் கிருஷ்ணாவின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் விருத்திமான் சஹாவும் (7 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை.
  • இதன் பின் ஜானி பேர்ஸ்டோவும் மனிஷ் பாண்டேவும், கைகோர்த்து அணியின் சரிவை தடுத்து நிறுத்தினர். இவர்கள் 3-வது விக்கெட்டுக்கு 92 ரன்கள் குவித்தனர். பேர்ஸ்டோ 55 ரன்களில் (40 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) வெளியேறினார். ரன்
  • தேவை அதிகரித்து கொண்டே போனதால் ஐதராபாத் தொடர்ந்து நெருக்கடிக்கு உள்ளாகினர்.
  • முகமது நபி (14 ரன்), விஜய் சங்கர் (11 ரன்)எடுத்து வெளியேறினார். ஐதராபபாத் அணிக்கு கடைசி ஓவரில் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது.
  • கடைசி ஓவரை வீசிய ஆந்த்ரே ரஸ்செல் 11 ரன் மட்டுமே வழங்கி தங்கள் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 177 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் கொல்கத்தா 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
  • அப்துல் சமாத் 19 ரன்னுடனும், மனிஷ் பாண்டே 61 ரன்களுடனும் (44 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), அவுட் ஆகாமல் இருந்தனர்.
  • கொல்கத்தா தரப்பில் ஷகிப்அல்-ஹசன், கம்மின்ஸ், ரஸ்செல் தலா ஒரு விக்கெட்டும் , பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டும்,வீழ்த்தினர்.
0 Shares:
You May Also Like
Read More

தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் இந்தியா சார்பாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளனர்

ஒலிம்பிக் தொடரை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் ஒலிம்பிக் தொடர்பான முக்கிய நிகழ்வுகளை பற்றி பார்ப்போம். அந்த வகையில் இந்தியாவின் மிகப்பெரிய நம்பிக்கையாக உள்ள…
Read More 1

எளிதான தமிழ் விடுகதைகள்

பழங்கால நாட்டுப்புறக் கதைகள் மற்றும் சூப்பர் ஹீரோ சாகாக்களின் அடித்தளமாக புதிர்கள் இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் புராணக் கதாநாயகர்களிடம்…
GG vs DC WPL 2025 Match 17
Read More

GG vs DC WPL 2025 Match 17 Result: நேற்றைய WPL போட்டியில் யார் வென்றார்கள்? ஸ்கோர்கள், முக்கிய நிகழ்வுகள் & விருது பெற்றவர்கள்

ஹார்லின் டியோல் அபாரமாக ஆடி, அரைசதத்துடன் அபார இன்னிங்ஸ் வெளிப்படுத்தியதால், குஜராத் ஜயன்ட்ஸ் (GG) டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில்…
Read More

இன்று அகமதாபாத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கான 3 ஆவது டெஸ்ட் போட்டி தொடக்கம்

அகமதாபாத்தில் 63 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள மிக பிரமாண்டமான சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில், பகலிரவு ஆட்டமாக 3 ஆவது டெஸ்ட் போட்டி இன்று இந்திய…
MkAATYTYAsAAAAASUVORK5CYII=
Read More

கிரிக்கெட் வீரர்களின் மனநலம் பற்றிப் பேசிய சச்சின் டெண்டுல்கர்

ஹைலைட்ஸ்: பயோ- பபுளில் இருப்பது மன அழுத்தம் தருவதாக சில வீரர்கள் கூறியிருக்கிறார்கள். கிரிக்கெட் வாழ்க்கையில், சச்சின் பெரும்பாலான சமயங்களில் தான் பதற்றமாக இருந்ததாக…