ஜதி ரத்னலு

வசூல் சாதனை படைத்திருக்கும் ஜதி ரத்னலு திரைப்படம்

நடிகையர் திலகம் திரைப்படத்தை இயக்கிய நாக் அஸ்வின் தயாரிப்பில் வெளியான தெலுங்கு திரைப்படம் ஜதி ரத்னலு. இந்த படத்தை புதுமுக இயக்குனர் அனுதிப் இயக்கி உள்ளார். நவீன் போலிஷெட்டி, பிரியதர்ஷினி, ராகுல் ராமகிருஷ்ணா உள்ளிட்ட பலர் ஜதி ரத்னலு திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

மார்ச் 11 ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் மிக பெரிய வெற்றி பெற்றுள்ளது. சுமார் 6 கோடி ரூபாய் செலவில் தயாரான இந்த திரைப்படம் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் 70 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

தற்போது இந்த திரைப்படத்தை அமெரிக்காவில் திரையிடப்பட்டுள்ளது. இதுவரை 1 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. கொரோனா லாக்டவுனுக்கு பிறகு அமெரிக்காவில் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படமாக
ஜதி ரத்னலு கொண்டாடப்படுகிறது.

இந்த திரைப்படம் முழு நில காமெடி படம் ஆகும். கொரோனா லாக்டவுனுக்கு பிறகு தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் தியேட்டர்களில் வெளியான ஜதி ரத்னலு, உப்பென்னா திரைப்படங்கள் மிக பெரிய வெற்றிபெற்று இருப்பது தெலுங்கு திரையுலகை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.

இந்த படங்களை பிறமொழியில் ரீமேக் செய்வதற்கு கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.

See also  கொரோனா தடுப்பூசி போடுவதை விரிவுபடுத்த தமிழக அரசு முடிவு