• ரேஷன் அட்டைகளில் திருத்தங்களை செய்வதற்கும், ரேஷன் அட்டைகளை தொலைத்தவர்களும் குறைவான கட்டணத்தில் எளிய வழிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • இந்த எளிய வழிமுறைகளில் 20 ரூபாய் கட்டணத்தில் புதிய ரேஷன் கார்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
  • தற்போது ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தமிழக அரசு பல சலுகைகளை அறிவித்து வருகிறது. ஏற்கெனவே பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக பொங்கல் பரிசுகளையும் வழங்கி வருகிறது.
  • மேலும் ரேஷன் அட்டைகளை தொலைத்தவர்கள், ரேஷன் அட்டையில் இணைத்துள்ள கைப்பேசி எண்ணை வைத்து பொங்கல் பரிசுகளை வாங்கிக்கொள்ளலாம் என தமிழக அரசு கூறியிருந்தது.
  • அதேபோல் ரேஷன் அட்டைகளை தொலைத்தவர்கள் புதிய ரேஷன் அட்டைகள் பெறுவதற்கு பல குழப்பங்களில் இருந்து வருகிறார்கள்.
  • மேலும் புதிய ரேஷன் அட்டை வாங்குவதற்கு அதிக அளவில் பணத்தை செலவு செய்து ஏமாறியதாகவும் புகார்கள் எழுந்து வந்தது.
  • இவை அனைத்திற்கும் தீர்வு காணும் வகையில் 20 ரூபாய் செலவில் புதிய ரேஷன் அட்டைகளை வாங்கி கொள்ளலாம் என்ற வசதி தற்போது அறிமுகமாகி உள்ளது.
  • அதன்படி புதிய ரேஷன் அட்டைகளை வாங்க விரும்புபவர்கள், மேலும் ரேஷன் அட்டைகளில் ஏதாவது திருத்தம் செய்ய விரும்புபவர்கள் www.tnpds.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.
  • ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்ட கைபேசி எண்ணை இந்த இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும். பிறகு அந்த போனிற்கு வரும் ஓடிபி எண்ணை வைத்து புதிய ரேஷன் அட்டைக்கு பதிவு செய்து கொள்ளலாம்.
  • இந்த இணைய தளத்தில் தேவையான தகவல்களை பதிவு செய்ய வேண்டும். பிறகு 20 ரூபாய் கட்டணம் செலுத்துவதன் மூலம் புதிய ரேஷன் கார்டு பெற்றுக்கொள்ளலாம்.
See also  எதுவரை பாடல் மியூசிக் வீடியோ