கடத்த வாரம் 67-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. தனுஷ் நடித்த அசுரன் படத்திற்கு தேசிய விருது வழங்க அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று மதியம் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களுக்கு தாதா சாகேப் பால்கே விருது அளிப்பதாக தெரிவித்தார்.

இந்திய சினிமாவில் வழங்கப்படும் உயரிய விருதான இதனை ரஜினி பெறுவது குறித்து அவரது ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் தங்களின் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியுள்ளனர்.

மத்திய தகவல்(ம)ஒளிப்பரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்அறிவித்துள்ள 67-வது தேசிய விருது வழங்கும் விழா அடுத்த மாதம் மே-3 தேதி நடைபெறும் என்றும் அதே நாளில் தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்ட ரஜினிக்கும் விருது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒரே நாளில் ரஜினி, தனுஷ் இருவருக்கும் விருது வழங்குவது உறுதியாகியுள்ளது. உயரிய இரண்டு விருதுகளையும் ஒரே குடும்பத்தை சேர்த்த இருவர் வாங்குவது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வானது ரசிகர்களுக்கிடையியே ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது.