கொரோனா வைரஸ் பரவல் வருவதால் தமிழக்தில் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் மளிகை கடை, காய்கறி கடை, இறைச்சி கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகளை மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும். ஆட்டோ,பேருந்து, வாடகை டாக்சி போன்றவை செயல்பட தடை என்றும், ஊரடங்கு காலத்தில் மக்கள் 100% முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

அமைச்சரவை கூட்டத்தில் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மருத்துவமனை பணியாளர்களுக்கும், நோயாளிகளுக்கும் தூய்மை நிறைத்த தரமான ஊட்டச்சத்து நிறைத்த உணவுகளை 24 மணி நேரமும் கிடைக்க செய்வதை உறுதி படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்..

இந்த சேவையின் மூலம் ஊரடங்கு காலத்தில் நோயாளிகளுக்கும், நோயாளிகளை பார்க்கவருபவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கும் உண்பதற்கு உணவின்றி கஷ்டப்படுவதை தவிர்க்க முடியும். இந்த சேவையானது அனைவரும் வரவேற்கும் விதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் இலவச உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர் பாபு இன்று தொடங்கி வைக்கிறார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட சென்னை மாவட்டத்திற்கு அமைச்சர்கள் சேகர் பாபு மற்றும் மா.சுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

See also  தயிர் உடன் சில உணவுப்பொருட்களை சேர்த்து சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்