ராஜஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சதம்

  • இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலை சதம் அடித்துள்ளது.
  • தொடர்ந்து 9-வது நாளாக இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாடு முழுக்க உயர்ந்த நிலையில், ராஜஸ்தானில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது.
  • ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ கங்காநகர் பகுதியில் ஹைய் ஆக்டேன் கொண்ட ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 102.34க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • இதேபோல் சாதாரணப் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 99.56 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • ஒரு லிட்டர் டீசல் ரூ.92.13 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பெட்ரோல் விலை சதம் கடந்த நகர் என்ற நிலைமைக்கு அந்த ஊர் தள்ளப்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

  • சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் மீதான தொடர் விலை உயர்வு மற்றும் மத்திய அரசு கூடுதல் வருமானத்திற்காகப் பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதித்து வரும் வரி ஆகியவற்றின் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
  • கச்சா எண்ணெய் விலை உயரும் போது இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைய மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைக்கும்.
  • அல்லது சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு அதிக மானியம் கொடுத்து விலையைக் கட்டுப்படுத்தும்.
  • ஆனால் மத்திய அரசு தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை உயர்த்தி வருவதால் பெட்ரோல்,டீசல் விலை உயர்ந்து வருகிறது.
  • அத்தியாவசிய பொருட்களான பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
  • டீசல் விலை உயர்வால் மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்ற அபாயம் நிலவுகிறது. கொரோனா-வால் ஏற்கனவே கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் மக்களுக்கு இது பெரும் சுமையாக உள்ளது.

சென்னை, மும்பை பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

  • சென்னை, மும்பை, கொல்கத்தா மற்றும் டெல்லி ஆகிய முக்கியமான நகரங்களிலும் பெட்ரோல் விலை உயர்ந்து வருகிறது. இந்த பெட்ரோல் விலை உயர்வு அங்குள்ள மக்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • ஜெய்ப்பூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.96.01க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.88.34 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
  • சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 23 காசுகள் உயர்ந்து ரூ 91.68 க்கும், டீசல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 24 காசுகள் அதிகரித்து ரூ 85.01க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
  • மும்பையில் இன்று ஒரு லீட்டர் பெட்ரோல் விலை 95.46 ரூபாயாகவும், டீசல் 86.34 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
See also  ஜெயலலிதாவின் 73 வது பிறந்த நாள் விழாவில் சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்தினர்

பாகிஸ்தானில் பெட்ரோல் விலை நிலவரம்

  • இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 95 ரூபாயை தாண்டியுள்ள நிலையில், இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் 51 ரூபாய்க்கும், பங்களாதேஷ்-ல் 76.7 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
  • இலங்கையில் 60.33 ரூபாய்க்கும் மற்றும் நேபாளத்தில் 68.99 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிலவரம் அனைத்தும் இந்தியா ரூபாய் மதிப்பில் கணக்கிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி

  • இந்தியா தனது பெட்ரோல் மற்றும் டீசல் தேவையைச் சுமார் 85% வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மூலமாகத் தீர்த்து வருகிறது.
  • இந்நிலையில் இந்தியா தற்போது ஓமன், துபாய் மற்றும் பிரிட்டன் சந்தையில் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது.
  • இந்த மூன்று சந்தைகளின் சராசரி விலை தான் இந்திய வாங்கும் கச்சா எண்ணெய் விலையாக நிர்ணிக்கப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலை நிலவரம்

  • ஜனவரி மாத இறுதியில் இந்திய சந்தையில் வாங்கும் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 54.76 டாலராக இருந்தது. தற்போது இது 61 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

விலை குறைய வாய்ப்பு உள்ளதா ?

  • சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அடுத்த சில மாதங்களுக்குக் குறைய வாய்ப்பு இல்லை.
  • அதனால், மத்திய அரசும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியையும் குறைக்காது. இதன் காரணத்தால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைய வாய்ப்பு இல்லை.