தேர்தல் பிரசாரத்திற்காக திமுக தலைவர் ஸ்டாலின் திருவண்ணாமலை சென்றிருந்தார். திருவண்ணாமலையில் இன்று நடந்த பிரசாரத்திற்காக கல்லூரியில் தங்கியிருந்தார். தற்போது அவர் தங்கிருந்த கல்லூரியில் சோதனை நடக்கிறது.

சோதனை நடக்கும் இடங்களில், வெளி நபர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அதேபோல் உள்ளே இருப்பவர்கள் யாரையும் வெளியே அனுமதிக்கப்படவில்லை.

இந்த சோதனை அரசியல் உள்நோக்கத்துடன் நடத்தப்படுகிறது என்றும், பேட்டி தேர்தலை எதிர்கொள்ள தைரியம் இல்லாமால் இந்த சோதனை நடத்தப்படுவதாகவும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறுகிறார்.

இந்த செயல் கண்டிக்கத்தக்க செயல் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டித்து வருகிறார்.

திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் எ.வ.வேலு அவர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இவர் திமுகவின் முன்னாள் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலையில் போட்டியிடும் எ.வ.வேலு அவரின் வீடு, அவரது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் வீடுகள், அவருக்கு சொந்தமான கல்லூரி, அறக்கட்டளை அலுவலகம் என 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

See also  வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் 7 பேர் உயிரிழப்பு