• சென்னை சௌகார்பேட்டை நகைக்கடையில் வருமானவரித் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்கள் சிக்கியிருக்கிறது.
  • கணக்கில் வராத மொத்தப்பணம் ரூ.1.50 கோடியை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளார்கள்.
  • தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் அரசியல் பிரபலங்களின் வீடுகளிலும், அவர்களுக்கு சொந்தமான இடங்கள், ஜவுளி, நகை கடைகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
  • அந்தவகையில் மார்ச் 24 ஆம் தேதி அன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் ரூ.3 கோடி மதிப்பிலான 8 கிலோ தங்கம் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளார்கள்.
  • இது குறித்து வருமானவரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  • இந்த விசாரணையின் மூலம் சென்னை சௌகார்பேட்டை என்.எஸ்.சி போஸ் சாலையில் உள்ள தனியார் நகை கடையில், நேற்று நள்ளிரவில் முதல் சோதனை நடத்தி வந்தார்கள்.
  • இந்த சோதனையின் முடிவில் வருமானவரித்துறை அதிகாரிகள் கணக்கில் வராத ரூ.1 கோடியே 46 லட்சம் பணத்தையும் , முக்கிய ஆவணங்களையும் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்து இருக்கிறார்கள்.
  • மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறது.