தமிழகத்தில் வங்கிகளுக்கு மார்ச் மாதத்தில் 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. வங்கிகள் தனியார்மயக்கமாக்கப்பட உள்ளதாக அரசு வெளியிட்ட அறிவிப்பிற்கு வங்கி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது.

தற்போது மீண்டும் மார்ச் 27 ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி வரை உள்ள 9 நாட்களில் 7 நாட்கள் விடுமுறை என்ற தவறான செய்தி மக்களிடையே பரவி வருகிறது. இந்த செய்துக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளார்.

மார்ச் 27,28 ஆம் தேதி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை, 29 ஆம் தேதி ஹோலி பண்டிகை, 31 ஆம் தேதி கணக்கு முடிக்கும் இறுதி நாள், ஏப்ரல் 1 ஆம் தேதி நிதியாண்டில் தொடக்க நாள், ஏப்ரல் 2 ஆம் தேதி புனித வெள்ளி, ஏப்ரல் 3 ஆம் தேதி சனிக்கிழமை, ஏப்ரல் 4 ஆம் தேதி ஞாயிறுக்கிழமை எனவே 7 நாட்கள் விடுமுறை என செய்தி வந்துள்ளது.

எத்தனை நாட்கள் விடுமுறை என்பதை தெரிந்து கொள்ள வங்கி அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது வங்கிகள் 7 நாட்கள் விடுமுறை என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வந்துள்ளது. இந்த செய்தி தவறானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி அதிகாரி “மார்ச் 27, 28 ஆம் தேதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறை. ஆனால் மார்ச் 29 ஆம் தேதி ஹோலி பண்டிகை என்பதால் வட மாநிலங்களுக்கு மட்டுமே விடுமுறை தமிழகத்திற்கு விடுமுறை இல்லை.

மார்ச் 31 ஆம் தேதி இந்த ஆண்டு முடிவு அன்று விடுமுறை இல்லை. ஏப்ரல் 1 மற்றும் 2 ஆம் தேதி நிதியாண்டு தொடக்கம் மற்றும் புனித வெள்ளிக்கு விடுமுறை விடப்படும். ஆனால் அதற்கு மறுநாள் ஏப்ரல் 3 ஆம் தேதி சனிக்கிழமை என்பதால் வங்கிகள் வழக்கம் போல் செயல்படும். இவ்வாறு வங்கி அதிகாரி விளக்கம் அளித்து வங்கிகள் 7 நாட்கள் விடுமுறை என்ற செய்தி பரவி வருவது தவறானது என்று கூறினார்.

See also  யோக் குரு ராம்தேவ் பதஞ்சலியின் விஞ்ஞான ஆய்வுக் கட்டுரையை வெளியிடுகிறார்.