தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவளின் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் சுமார் 9 மாத இடைவெளிக்கு பிறகு மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதியுடன் இன்று 13 ஆயிரம் பள்ளிகள் திறக்கப்பட்டன.
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வெழுதும் மாணவர்கள் முகக்கவசம் அணிந்தவாறு பள்ளிக்கு வருகை தந்தனர். பள்ளிக்கு வந்த மாணவர்கள் மகிச்சியுடன் இருந்தாலும் மனதில் சிறு அச்சத்துடனும் இருக்கின்றனர்.
பள்ளியின் வாயில்களிளே மாணாவர்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டும், உடலின் வெப்பநிலை கண்டறியப்படும் பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.  மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பெற்றோற்களின் இரண்டாம் கட்ட கலந்தாய்வின் பின்னர் அனுமதி கடிதத்துடன் பள்ளிக்கு அனுமதிக்கபட்டனர்.
பள்ளியின் வகுப்பறைகளில் மற்றும் இருக்கைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டும், இருக்கையில் இடைவெளி விட்டும் அமரவைக்க வேண்டும் என்ற மாணவர்களின் பாதுகாப்பை பற்றி பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.  பின்னர் போட்டி தேர்வில் எந்த பாதிப்பும் இல்லை என்பதையும் ஆசிரியர்கள் அறிவித்தனர்.  பாடங்களில்  கடினமான பாடத்தை குறைத்தது குறித்த விவரத்தையும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளதனர்.

See also  கொரோனா தடுப்பூசி குறித்து எழும் சந்தேகங்களும், குழப்பங்களும் - நிபுணரின் விளக்கம்..!