இன்று டாக்டர் ஜெ. ஜெயலலிதா நினைவிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், சபா நாயகர் தனபால் அஞ்சலி செலுத்தினார்.
இதில் அமைச்சர்கள் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் ,மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஜெ. நினைவிடம் மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ளது. இது மிக பெரிய பீனிக்ஸ் பறவை வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நினைவிடம் 15 மீட்டர் உயரமும் 30.5 மீட்டர் நீளமும் 43 மீட்டர் அகலமும் கொண்டுள்ளது. நடைபாதை கருங்கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. கிரானைட் கற்கள் தரை பகுதியில் பாதிக்கப்பட்டுள்ளது. புல்வெளி, நிர்த்தடாகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நினைவிடத்தில் ஜெயலலிதா வாசகமான ‘மக்களால் நான்…. மகளுக்காக நான்….’ என்ற பொன்மொழி பொறிக்கப்பட்டுள்ளது. இந்நினைவிடம் பார்ப்பதற்கு மிகவும் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா வசித்து வந்த “வேதா நிலையம்” ஜெ.நினைவு இல்லமாக தமிழக அரசு சார்பில் மாற்றப்பட்டுள்ளது. இது நாளை 10:30 மணிக்கு முதல்வர் பழனிசாமி அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ளது.

See also  தமிழ்நாடு மின்சார வாரிய வேலை வாய்ப்பு - 59,900 வரை சம்பளம்