பொதுவாகவே அனைவருக்கும் ஜோக் என்றால் பிடிக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவருக்க நகைச்சுவை பிடிக்காமல் எவருமில்லை.. வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்ற சொல்வார்கள்..

அதன் வகையில் இந்த மொக்கை ஜோக்கை தினமும் படித்து மகிழ்வோம்… 😊

கணவன்: வெளியே ரெண்டு கண்ணும் தெரியாத ஆசாமி ஒருவன் சோறு கேட்குறான். போட்டுட்டு வா!!

மனைவி: அவனுக்கு ரெண்டு கண்ணும் தெரியாதுன்னு எதை வச்சு சொல்றீங்க நீங்க..

கணவன்: உன்ன மகாலட்சுமி, மகாராசின்னு சொல்றானே அதான்..

********************************

அமைச்சர்: மன்னா நீங்கள் பதவியேற்ற பின்னர் மக்களுக்கு பக்தி அதிகமாகி விட்டது

மன்னன்: எதனால் அப்படி?

அமைச்சர்: ஆம் மன்னா, இனி கடவுள் தான் தங்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத் தான்

********************************
கணவன்: என்ன இருந்தாலும் சமையலில் எங்க அம்மாவின் கை மணமே தனி தான்

மனைவி: ஆமா!! உங்க அம்மா வருஷத்திற்கு ஒருமுறை தானே கையை நல்லா கழுவுவாங்க

********************************

பல்லு : நாக்க பார்த்து சொல்லுச்சா நாங்க 32 பேரும் சேர்ந்தா ஒரு தடவை இருக்கி அழுத்தினாள் நீ காலி….

நாக்கு: சிரிச்சிட்டே சொல்லுச்சா நாக்கு நான் தனி ஆளுதான் ஆனால் நான் ஒரு வார்த்தையை மாற்றி பேசினா நீங்க 32 பேரும் காலி….

********************************

மனைவி : ஏங்க நான் வரும்போது மட்டும் நீங்க எதுக்கு கண்ணாடி போடுறீங்க

கணவன் : டாக்டர் தான் தலைவலி வரும்போது மட்டும் போடுங்க ன்னு சொன்னாரு..!🤣

********************************

இந்த உலகத்தில் 2 பேரை மட்டும் தான் முறைச்சு பார்க்க முடியாது.. என்ன தெரியுமா அது?

முதலாவது சூரியனும் இரண்டாவது மனைவி..

********************************

கல்யாண வீட்டுக்கு மாட்டையும் கன்று குட்டியை ஏன் கூட்டிட்டு வரமாட்றாங்க..

ஏன்னா கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிறு அத மாடும் கன்றுக்குட்டியும் அத மேஞ்சிடும்🤣🤣🤣

********************************

ரெண்டு பேரு ஒரு ஓட்டலுக்கு போறாங்க ஆளுக்கு நாலு நாலு இட்லி ஆர்டர் பண்றாங்க இந்த இட்லி சாப்பிட்டு தான் புட் பாய்சன் ஆயிடுச்சு ஏன்?

ஏன்னா அது நாலு நாள் இட்லி 🤣🤣

********************************

ஒரு பையன் 200 ரூபாய் நோட்டையும் 500 ரூபாய் நோட்டையும் சாக்கடையில போட்டுட்டான் first அவன் எதை எடுப்பான்?

அவன் first வாந்தி எடுப்பான்.😂

********************************

ரோட்ல போற நிறைய பேரு ஒருத்தர் கிட்ட மட்டும் அடிக்கடி time கேக்குறாங்க ஏன்?

ஏன்னா அவர் தான் watchman

********************************

புயல் அடிக்கும் போது ஒருத்தன் மட்டும் அழுக்கு சட்டையை கையில் வெச்சுகிட்டு நின்னானா… ஏன்?

அப்பத்தான் புயல் கரையை கடக்கும்…. 🤣

********************************

நோயாளி: டாக்டர் எனக்கும் 4 மாதமாக கடுமையான இருமல்…!

மருத்துவர்: அப்படியா..? சும்மாவா இருந்தீங்க..

நோயாளி: இல்ல டாக்டர் இருமிக்கிட்டு தான் இருந்தேன்..😇

********************************

ஆசிரியர் : நான் இன்னும் ஒரு வருஷத்துல ரீடைர் ஆக போறேன் ‘ பையன் அழுகிறான் ‘

ஆசிரியர்: அழுகாத அப்பா நான் இன்னும் ஒரு வருஷம் இருப்பேன்..

பையன் : நான் அழுகிறது அதுக்கு தான் சார்.. 😇