- கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1.68 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகி இருக்கிறது.
- இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் கட்ட அலைவீச தொடங்கி தற்போது இது அதிவேகமாக பரவி வருகிறது.
- இதற்கு முன் ஒரு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரு லட்சத்துக்கும் குறைவாகவே இருந்தது. இது கடந்த சில நாட்களாக 1.5 லட்சத்திற்கும் மேல் பதிவாகி வருகிறது.
- கொரோனா வைரஸ் முதல் அலையை விட இரண்டாம் அலை அசுர வேகத்தில் பரவிவருகிறது. தற்போது மக்கள் மத்தியில் கொரோனா வைரஸ் பீதியை கிளப்பிவருகிறது.
- மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு அறிவுறுத்தி உள்ளது.
- இதனால் அந்தந்த மாநில அரசுகள் அதிரடியாக கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
- இருந்தாலும் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் நாளுக்கு நாள் அதிகரித்த கொண்டே இருக்கிறது .
- கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1.68 லட்சம் பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிர்ச்சி தரும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
- இதில் ஒரு நாளில் 904 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்திருப்பதாகவும் 75,086 பேர் டிஸ்சார்ஜ் ஆகி இருப்பதாகவும் 12,01,009 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- இரண்டு நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு 1.45 லட்சம் பேருக்கு உறுதியாகி இருந்தது. இது நேற்று 1.52 லட்சமாக பதிவாகி இருந்தது. இன்று கொரோனா பாதிப்பு 1.68 லட்சமாக உயர்ந்து இருக்கிறது.
- தற்போது இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 1.35 கோடியாக அதிகரித்துள்ளது. இதனால் உலக அளவில் கொரோனா பாதிப்பில் 3ஆவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 2ஆம் இடத்துக்கு சென்றுள்ளது.
- கொரோனா பாதிப்பில் அமெரிக்கா 3.18 கோடி பாதிப்புடன் முதல் இடத்தில் இருக்கிறது. பிரேசில் 1.34 கோடி பாதிப்புடன் 3ஆம் இடத்திலும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
2nd place india in corona america corona virus cinema news tamil corona corona updates corona virus india corona latest news in tamil latest tamil news live news tamil news in tamil news live tamil news tamil news tamil live news tamil today tamil cinema news tamil news Tamil news live tamil news paper tamil news today tamil video today news in tamil today news tamil today tamil news todays news in tamil அமெரிக்கா இந்தியா கொரோனா பாதிப்பு பிரேசில் மொத்த கொரோனா பாதிப்பு

