கொரோனா பரவலானது உலகம் முழுவதும் அதிக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மாநிலங்கள் முழுவதிலும் மக்கள் இறந்து வருகின்றனர். கொரோனா வைரசால் பதித்த நபருக்கு மூச்சி திணறல் ஏற்பட்டு உயிரிழந்து விடுகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆக்சிஜன் தேவைப்படும் நிலை உருவாகியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையில் தான் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்வதற்கான பணிகளில் மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர். தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் புதிதாக 15,830 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் 77 பேர் பலியாகியுள்ளனர். இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் போன்ற கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து சனிக்கிழமைகளில் இறைச்சி கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பேருந்து, ரயில் பயணம் செய்யும் பொதுமக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. வைரஸ் தொற்றின் பயத்தால் வெளியூர் பயணங்களை மக்கள் தவிர்த்து வருகின்றனர். இதனால் தெற்கு ரயில்வே பல்வேறு ரயில்களை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது.

  • வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும் சிறப்பு ரயிலானது ராமேஸ்வரம் – கன்னியாகுமரி இடையில் மே 1 மற்றும் மே 2 தேதி ரத்து செய்யப்படுகிறது.
  • வாரம் இரண்டு நாட்கள் இயக்கப்படும் உதய் விரைவு ரயிலானது ஏப்ரல் 29ஆம் தேதி முதல் கோயம்புத்தூர் – பெங்களூரு கிருஷ்ணராஜபுரம் இடையே, இருவழிகளிலும் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • வாரத்தில் புதன்கிழமை தவிர மற்ற எல்லா நாட்களிலும் இயக்கப்படும் சதாப்தி ரயிலானது சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரலில் இருந்து மைசூருக்கு ஏப்ரல் 29ஆம் தேதி முதல் இருவழிகளிலும் பயணம் ரத்து என அறிவித்துள்ளனர்.
  • சதாப்தி ரயிலானது சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரலில் இருந்து கோயம்புத்தூருக்கு ஏப்ரல் 29ஆம் தேதி முதல் இருவழிகளிலும் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே 12 ரயில்களின் சேவையை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இவ்வாறு படிப்படியாக பொதுப் போக்குவரத்து ரத்து செய்யப்படுவது அடுத்ததாக ஒரு முழு ஊரடங்கிற்கு தமிழகம் தயாராகிக் கொண்டிருக்கிறோமோ என்ற என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

See also  ஏப்ரல் 21 ஆம் தேதி 140-வது நாளாகத் தொடரும் விவசாயிகள் போராட்டம்