முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறும் திட்ட பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தினசரி கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டு உள்ளன.

குறைந்து வரும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தினசரி கட்டணம் என்ற முறையில் இருந்து தொகுப்பு கட்டணமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

  • அதன்படி தீவிரம் இல்லாத கொரோனா சிகிச்சை கட்டணம் நாள் ஒன்றுக்கு ரூ.5000 தில் இருந்து ரூ.3000 ஆககுறைக்கப்பட்டுள்ளது.
  • ஆக்ஸிஜன் உடன் கூடிய தீவிரமில்லாத சிகிச்சைக்கான கட்டணம் 15000 ரூபாயில் இருந்து 7500 ரூபாயாக குறைக்கப்பட்டு உள்ளது.
  • வெண்டிலேட்டர் உதவியுடன் கடுமையான சுவாச செயலிழப்க்கான கட்டணம் 35 ஆயிரம் ரூபாயிலிருந்து 56 ஆயிரத்து 200 ரூபாயாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
  • சுவாச கோளாறு உணர்வு இழந்த முழு மயக்க நிலை பல உறுப்புகள் செயலிழப்பு செப்டிக் வாஷ் ஆகிய வெண்டிலேட்டர் உடன் கூடிய தீவிர சிகிச்சை பராமரிப்க்கான கட்டணம் 31,500 என்று மாற்றப்பட்டுள்ளது.
  • வெண்டிலேட்டர் அல்லாத தீவிர சிகிச்சைக்கான கட்டணம் 27,100 ரூபாயாகவும், செப்டிக் ஷாக் தீவிர சிகிச்சைக்கான கட்டணம் 43,050 ஆக மாற்றப்பட்டுள்ளது.
  • வெண்டிலேட்டர் இல்லாமல் கடுமையான சுவாச செயலிழப்பு சிகிச்சைக்கு 27,100 ரூபாயாக கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
  • இவைகளை தவிர்த்து தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் பொதுமக்களுக்கான தினசரி கட்டணமும் மாற்றப்பட்டுள்ளது.
  • தீவிரம் இல்லாத ஆக்ஸிஜன் இல்லாத படுக்கை வசதிக்கு 3000 ரூபாயும், ஆக்ஸிஜன் உடன் கூடிய தீவிரமில்லாத தினசரி சிகிச்சைக்கு 7000 ரூபாயாகயும் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
  • ஆக்ஸிஜன் உடன் கூடிய படிப்படியாக குறைப்பதற்கான தீவிர சிகிச்சைக்கு 7,000 ரூபாயும், வெண்டிலேட்டர் உடன் கூடிய தீவிர சிகிச்சைக்கு நாளொன்றுக்கு 15,000 ரூபாயும், ஊடுருவாத வெண்டிலேட்டர் வசதிக்கு 15,000 ரூபாயும் புதிய கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
See also  புதினாவின் அற்புதமான மருத்துவ பயன்கள்..!