தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக சற்று அதிகரித்து வரும் நிலையில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டு இருக்கிறார்.

தமிழகத்தில் ஏற்கனவே அரசு விதித்து இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிக்கலாமா அல்லது கூடுதல் கட்டுப்பாடு விதிக்கலாமா என்பது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் துவங்கி இருக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர், டிஜிபி உள்ளிட்டோர் கலந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக இந்த ஊரடங்கு வரும் 9-ஆம் தேதி காலை 6 மணி உடன் முடிவடைய இருக்கிறது.

அதன் பின்பாக வரக்கூடிய வாரங்களில் எந்த அளவிற்கு கொரோனா வைரஸ் பரவல் இருக்கும் என்பது தொடர்பாக மருத்துவ குழுவினர் தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்கின்றனர். குறிப்பாக தற்போது ஆடி மாதம் என்பதால் பல இடங்களில் கோவில் திருவிழாக்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றது எனவே கோவில்கள் திறப்பது குறித்து பல கோரிக்கைகள் வைக்கப்பட்டாலும் தற்போது மக்களுடைய உயிர் முக்கியம் என்பதை பல இடங்களில் சுகாதாரத்துறை கூறியுள்ளது.

மக்களின் உயிரை காப்பாற்றும் விதமாக கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பதற்க்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

See also  பிரதமரின் உஜ்வாலா இரண்டாம் கட்ட திட்டம்