முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா நோய் தொற்று, உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக சில தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்த பின்னர் வரும் உடல்நலப் பிரச்சனைகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

கொரோனா நோய் தொற்று குறித்து உலக சுகாதார அமைப்பு தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறியதாவது, உலகம் முழுவதும் 20 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா நோய் தொற்றில் இருந்து மீண்டவர்கள் தற்போது பல உடல்நலப் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். கொரோனா நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்த பிறகு வரும் உடல்நலப் பிரச்சனைகளால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறித்த விவரங்கள் எங்களிடம் இல்லை.

ஆனால் இந்நோய் தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு வரும் உடல்நல பிரச்சனைகள் கவலை அளிக்கும் விதமாக உள்ளது. நீண்ட நாள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தொற்றிலிருந்து மீண்ட பிறகும் அவர்களுக்கு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால் அவர்கள் மருத்துவ உதவி பெற்றுக் கொள்ள வேண்டும். கொரோனா நோய் தொற்று பாதிப்பு பிரச்சனை எவ்வளவு நாட்கள் வரை நீடிக்கும் என்பது எங்களுக்கு தெரியாது. இதுகுறித்து மேலும் புரிந்து கொள்ள, ஆராய்ச்சிகளை நாங்கள் தீவிரப்படுத்தி உள்ளோம் என்று தெரிவித்து உள்ளார்.

See also  நா பிறழ் சொற்கள் | Tongue twisters in tamil