Close Menu
TamilGuruTamilGuru
    Facebook X (Twitter) Instagram
    • Calculator
    • Live Tamil News
    Facebook X (Twitter) Instagram
    TamilGuruTamilGuru
    • அறிந்துகொள்வோம்
    • ஆன்மிகம்
    • Wishes
      • Wishes in Tamil
      • கவிதை
      • கட்டுரை
    • சினிமா
      • Tamil song Lyrics
      • மூவிஸ்
      • Vijay Television Promo
    • லைவ் டிவி
    • வீடியோ
    TamilGuruTamilGuru
    Home»அறிந்துகொள்வோம்»மூட்டுவலிக்கு நிரந்தர தீர்வு தரும் முடக்கத்தான் கீரை.!!
    அறிந்துகொள்வோம்

    மூட்டுவலிக்கு நிரந்தர தீர்வு தரும் முடக்கத்தான் கீரை.!!

    gpkumarBy gpkumarAugust 25, 2021No Comments2 Mins Read2 Views
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email
    Mudakathan keerai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link
    Summarize this blog post with:
    ChatGPTClaudeGeminiPerplexity

    இன்றைய காலகட்டத்தில் இளைய தலைமுறையினர் மூட்டுவலியால் அதிகம் அவதிப்படுகின்றனர். வயதான காலத்துக்கு பிறகு வரவேண்டிய மூட்டு வலி இப்போது இளவயதிலேயே வந்து நம்மை பயமுறுத்துகிறது.

    நம் உடலில் எலும்புகளின் வளர்ச்சி மற்றும் வலிமையும் உறுதியாக இருந்தால் மூட்டுகளில் தேய்மானம் ஏற்படாது. முன்பெல்லாம் 90 வயதுவரை மூட்டுவலி உபாதையை அனுபவிக்காத தலைமுறையினர் எலும்பை பலப்படுத்தும் வகையில் உணவுகளை எடுத்துகொண்டார்கள். அந்த உணவு வகையில் முடக்கத்தான் கீரையும் ஒன்று. முடக்கத்தான் கீரையின் நன்மைகளை பற்றி தெரிந்துகொள்வோம்.

    முடக்கு + அறுத்தான் என்று பெயரிலையே முடக்கை விரட்டும் தன்மையை கொண்டுள்ளது முடக்கறுத்தான் கீரை. இது உடலில் ஏற்படும் வாதக்கோளாறுகளை சரி செய்கிறது. அதனால் தான் இதை முடக்கத்தான் என்கிறோம். இதில் வைட்டமின்களும், தாதுப்புகளும் அதிகளவு உள்ளது.

    மூட்டுவலிக்கு முடக்கத்தான்

    பொதுவாக உடலில் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் சமநிலையில் இருக்க வேண்டும். இதில் வாதத்தை கட்டுப்படுத்தி வைக்க முடக்கத்தான் கீரை மிகவும் உதவுகிறது. நம் உடலில் உள்ள மூட்டுகள்,எலும்பு, தசைகளின் வலிமையை வாதமே நிர்ணயிக்கிறது. முடக்கத்தான் வாத நோய்க்கு நிரந்தர தீர்வை தரும் என்பது முன்னோர்கள் கருத்து . அதன்படி இன்றும் முடக்கத்தான் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் மூட்டுவலிக்கு நிரந்தர தீர்வை நாம் பெறலாம்.

    ​மூட்டுகளில் இருக்கும் அதிகப்படியான யூரிக் அமிலம், பாஸ்பரஸ், சுண்ணாம்பு போன்றவை தான் மூட்டுகளில் வலியை ஏற்படுத்துகிறது. இதனை கரைத்து சிறுநீரக வெளியேற்றினால் மூட்டுகளில் வலி குறையும். மூட்டுகளில் வலியை குறைக்க முடக்கத்தான் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

    முடக்கத்தான் கீரையின் இலையை மைய அரைத்து கால் முட்டியில் வீக்கம் இருக்கும் இடத்தில் தேய்த்து வந்தால் வீக்கம் குறையும். ​மூட்டுகளில் இருக்கும் யூரிக் அமிலமும் படிப்படியாக குறைய தொடங்கும். மூட்டுகளில் வலி உணர்வு ஏற்பட்டால் தினமும் அருந்தும் டீ, காபி பானங்களை தவிர்த்து, ஒரு கப் முடக்கத்தான் சூப் குடிக்கலாம்.

    முடக்கத்தான் இலையை நிழலில் காய வைத்து பொடி செய்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்நீரிலோ அல்லது தேனிலோ அரை டீஸ்பூன் இதை கலந்து குழைத்து, தொடர்ந்து ஒரு மண்டலம் அளவு இதை சாப்பிட்டு வந்தால் மூட்டுகளில் வலி குறையும். மேலும் இது மூட்டுகளில் அதிகளவில் தங்கியிருக்கும் யூரிக் அமிலத்தை கரைத்து சிறுநீராக வெளியேற்றும். மூட்டுகளுக்கு நடுவில் உருவாகும் ஜெல்லின் உற்பத்தியை அதிகரித்து எலும்புகளை வலிமையாக்கும்.

    ருமட்டாய்டு பிரச்சனை

    காலையில் எழுந்ததும் சிலருக்கு பாதம், கை, இடுப்பு, கால் மூட்டுகளில் வலி அதிகமாக இருக்கும். மூட்டுகளில் வலி தொடர்ந்து இருந்தால் அவை தீவிரமாகி ருமட்டாய்டு ஆக மாறிவிடுகிறது. இந்த ருமட்டாய்டு ஆர்த்ரைட்டீஸ் இருப்பவர்கள் உணவில் அடிக்கடி முடக்கத்தான் கீரையை சேர்த்து கொண்டால் நல்ல தீர்வு கிடைக்கும்.

    முடக்கத்தான் கீரையை மிக்ஸியில் மைய அரைத்து தோசை மாவில் கலந்து தோசையாக செய்து சாப்பிட்டால் சிறிதும் கசப்பு தெரியாது. மாத்திரைகளால் மூட்டுவலியின் வீரியம் தற்காலிகமாக குறையும். ஆனால் முடக்கத்தான் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் வலியை நிரந்தரமாக குறைக்கலாம். ​மூட்டு வலி, எலும்பு தேய்மானம் இருப்பவர்கள் வாரத்துக்கு மூன்று முறை முடக்கத்தான் கீரையை உணவில் சேர்த்து கொண்டால் மூட்டுவலி படிப்படியாக குறையும்.

    முடக்கத்தான் கீரையின் துவையலை தொடர்ந்து உணவில் எடுத்து கொண்டால் மலச்சிக்கல், மூல நோய், பாதவாதம், கரப்பான், கிரந்தி போன்ற நோய்கள் குணமாகின்றன.

    இந்த கீரையை ஆரம்பத்தில் சாப்பிடும்போது, ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு சிலருக்கு பேதியாகும். இவர்கள் பயப்படத் தேவையில்லை. தொடர்ந்து சாப்பிடலாம். மூளைக்கு பலம் தரும்.

    amazing health benefits of mudakathan cinema news tamil healthy bone tips latest news in tamil latest tamil news live news tamil mudakathan keerai benefits Mudakathan keerai Payangal Tamil Mudakathan keerai Tamil Mudakathan keerai to relieve joint pain Mudakathan keerai uses Tamil news in tamil news live tamil news tamil news tamil live news tamil today tamil cinema news tamil news Tamil news live tamil news paper tamil news today tamil video today news in tamil today news tamil today tamil news todays news in tamil எலும்புகளின் உறுதிக்கு முடக்கத்தான் முடக்கத்தான் கீரை நன்மைகள் முடக்கத்தான் கீரை மருத்துவ குணங்கள் மூட்டுவலிக்கு வீட்டு வைத்தியம்
    Follow on Pinterest Follow on WhatsApp
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    gpkumar
    • Website
    • Facebook
    • Instagram

    இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

    Related Posts

    புத்தம் புதிய மீனை எப்படி எளிதில் கண்டுபிடிப்பது? கெட்டுப்போன மீனைத் தவிர்க்க 5 அற்புதமான குறிப்புகள்!

    July 20, 2026

    Rajasthan Board 10th Result 2026 – DigiLocker ல் மார்க்ஷீட் பார்க்கும் முழு வழிகாட்டி

    March 24, 2026

    மகளிர் உரிமைத் தொகை Toll Free Number 2026 – புகார் எண், Helpline, Status Check முழு வழிகாட்டி

    March 4, 2026

    Comments are closed.




    Trending
    Updated:September 18, 2026

    செல்வமகள் சேமிப்பு திட்டம் கால்குலேட்டர்: உங்கள் மகளின் எதிர்காலத்தை திட்டமிடுங்கள்

    By gpkumarSeptember 18, 20260

    20 எளிய திருக்குறள்கள் – 20 easy thirukkural in tamil

    July 5, 2025

    பிறந்த தேதி நேரம் வைத்து ராசி நட்சத்திரம் கண்டுபிடிப்பது

    July 9, 2026

    என் காதலே என் காதலே – En Kadhale En Kadhale Song Lyrics

    September 30, 2024

    வயது கால்குலேட்டர்: உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் துல்லியமாக அறியும் கருவி

    July 23, 2026




    Live Tv

    tv9 kannada news live

    August 28, 2021

    NTV Telugu News live

    August 28, 2021

    NDTV 24×7 News live

    August 28, 2021

    🚨 Polimer News Live Today

    June 27, 2025

    Zee Tamil News Live

    June 9, 2022
    Wishes in Tamil

    உள்ளத்திலே நீ இருக்க பாடல் வரிகள் | Ullathile nee irukka song lyrics

    December 24, 2025

    சுற்றுசூழல் பாதுகாப்பு கட்டுரை-Sutru Sulal Pathukappu Katturai In Tamil

    July 1, 2022

    தமிழ் ஒரு வரி கவிதைகள் – Tamil One Line Quotes

    August 14, 2024

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் 2025 | Birthday wishes Tamil Language

    November 19, 2023

    காமராஜரை பற்றி 10 கட்டுரை வரிகள் : 10 Points About Kamarajar in Tamil

    June 27, 2025
    Tamil Songs Lyrics

    என் காதலே என் காதலே – En Kadhale En Kadhale Song Lyrics

    September 30, 2024

    உள்ளத்திலே நீ இருக்க பாடல் வரிகள் | Ullathile nee irukka song lyrics

    December 24, 2025

    இன்னும் கொஞ்சம் நேரம் – Inum konjam neram song lyrics

    September 7, 2024

    மயிலிறகே – Mayiliragae Tamil Song Lyrics

    December 30, 2024

    மன்மதனே நீ – Manmadhane Nee Tamil Song Lyrics

    December 28, 2024
    • தந்தி டிவி
    • சன் நியூஸ்
    • பாலிமர் செய்திகள்
    • Gold Rate
    • Privacy Policy
    • Terms and Conditions
    • About Us
    • Our Team
    • Contact Us
    © 2026 TamilGuru.in InavitStudio.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.
    pixel