Author: gpkumar

ஜனவரி 16 அன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 36,864க்கு விற்க்கப்பட்டது. வாரத்தின் முதல் நாளான இன்று இந்த விலையில் ஒரு சவரனுக்கு ரூ. 48 குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு சவரன் ரூ. 36,816 க்கு விற்கப்படுகிறது. இந்த விலை குறைவு தங்கம் வாங்குபவரிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு  கிராம் வெள்ளி ரூ. 69.70 விற்கப்படுகிறது.

Read More

வரலாற்றில்  முதல் வெற்றியாக இந்திய அணி சாதனை படைக்க வாய்ப்பு உள்ளன. பார்டர் – கவாஸ்கர்  தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸின் 294 ரன்களை குவித்த ஆஸ்திரேலியா அணியானது இந்தியாவிற்கு 324 ரன்களை இலக்காக நிர்ணயித்து உள்ளது.  எனவே அதிகபட்சமாக சிராஜ் -5 மற்றும் ஷர்துள்-4 விக்கெட்டுகளை எடுத்து வீழ்த்தினார்கள்.  இதனை தொடர்ந்து இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் “பிரிஸ்பேன்” மைதானத்தில் நடக்க இருக்கும்  போட்டியில் இந்திய அணி வரலாற்று சாதனையான தனது முதல் வெற்றியை பதித்து வைக்கலாம்.

Read More

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் ஜனவரி 16 ம் தேதி தொடங்கப்பட்டது.  தொடங்கிய முதல் நாளிலே  2,07,229 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது .  இது பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா  போன்ற நாடுகளில் போடப்பட்ட தடுப்பூசியை விட அதிகம் என்று மத்திய சுகாதார துறை கூடுதல் செயலாளர் மனோகர் அக்னானி  கூறுகிறார். நாடுமுழுவதும் ஜனவரி 17ம் தேதி மாலை வரை 2,24,301 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  இதில் 447 பேருக்கு லேசான காய்ச்சல், தலைவலி, மயக்கம்  போன்ற அறிகுறிகள் இருந்ததாக கூறப்படுகிறது.  ஆனால் மூன்று பேர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  இரண்டு பேர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பி இருக்கிறாரகள்.  இவர்கள் டெல்லியை சேர்ந்தவர்கள்.  ஒருவர் மட்டும் மருத்துவமனையில் தொடர் கண்காணிப்பில்   உ ள்ளனர் என்று மத்திய சுகாதார துறை சார்பாக கூறப்படுகிறது.

Read More

மானாடு அதிகாரப்பூர்வ மோஷன் போஸ்டர் | STR | கல்யாணி | எஸ்.ஜே.சூர்யா | வெங்கட் பிரபு | ஒய்.எஸ்.ஆர் | வி ஹவுஸ் #STR #vp09 #maanaadu #MaanaaduMotionPoster #abdulkhaaliq #aVPpolitics #SilambarasanTR V House Productions present the official motion poster of #Maanaadu (மாநாடு)

Read More

ஆதியூர் முதல் கோடியூர் வரை 8 திசைகளில் 10 திருத்தலங்கள் இருந்ததால் திருப்பத்தூர் என பெயர் வந்தது என ஒரு சாரார் கூறுகின்றனர். ஆனால் திருப்பத்தூரை பல மன்னர்களும் ஆண்ட காலத்தில் பிரம்மபுரம், மாதவதுர்வேதி மங்களம், திருப்பேரூர், திருவனபுரம் என அவரவர் நம்பிக்கை ஏற்றவாறு பெயர் மாற்றம் செய்துள்ளனர். இந்நிலையில், 14ம் நூற்றாண்டில் விஜய நகர மன்னர்கள் திருவனபுரம் என்ற பெயரை திருபத்தூர் என மாற்றி உள்ளதாக ஒரு ஆராய்ச்சி தகவல் கூறுகிறது. இதற்கு அடிப்படையாக திருபத்தூர் பகுதியில் விளங்கிய காலவராணியம், மாலவராணியம், அனங்கவராணியம், சுவேதராணியம், வாணிராணியம், வசிட்டராணியம், விருஸராணியம், ஜதுகராணியம் என்பது உள்ளிட்ட 10 திருத்தலங்களை அடிப்படையாக கொண்டே, விஜய நகர மன்னர்சுள் திருபுவனத்னத திருப்பத்தூர் என மாற்றி உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனரல், காலப்போக்கில் மேற்கண்ட பெயர்களில் விளங்கிய திருத்தலங்கள் அனனத்தும் பெயர் மாறிவிட்டன எனபது குறிப்பிடத்தக்கது. வரலாறு ஒரு நீண்ட நேரம் முன்பு திருப்பத்தூர் தசாரண்யம் என அறியப்பட்டது,…

Read More

நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் சமூகவலைத்தள செயலியில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏற்கனவே ரிலீசுக்கு முன்பே படத்தின் முக்கிய காட்சிகள் லீக் ஆன நிலையில் முழு படமும் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இணையதளத்தில் வெளியிட சென்னை ஐகோர்ட் தடை விதித்திருந்த நிலையிலும் வெளியாகியுள்ளது இதனால் விஜய் மற்றும் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Read More

நீண்ட காலத்திற்கு பிறகு கொரோனா  காலத்திலும் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல தடைகளை மீறி இன்று உலகெங்கும் பல திரையருங்களில் வெளியாகி மிக சிறப்பாக ஓடி கொண்டு இருக்கிறது.இளைய தளபதி விஜயும் விஜய் சேதுபதியும் சேர்ந்து நடித்த இத்திரைப்படமானது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் உள்ள ஒவ்வொரு காட்சியும் மாஸ் ஹிட் என்று சொல்லக்கூடிய அளவிற்கு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விஜய் சேதுபதியின் அனல் பறக்கும் வில்லத்தனமும் பல வசனங்களும் விஜய் ரசிகர்களை  ஈர்க்கும்  வகையில் உள்ளது.  அதே நேரத்தில் தளபதிக்கு ஈடுக்கொடுக்கும் வகையில் தனது நடிப்பையும் வெளிப்படுத்தி உள்ளார். படத்தின் முதல் பகுதியில் நடிக்கும் ஆண்ட்ரியாவின் நடிப்பு ரசிகர்களின் மனதில் பதியும்  அளவிற்கு சிறப்பு மிக்கதாக இருந்தது. மேலும் மாளவிகா தளபதியுடன் இணைத்து நடித்த காட்சிகள் குறைவாக  இருந்தாலும்  கலக்கலாகவும் சிறப்பாகவும் இருந்தது. இத்திரைப்படம் மாபெரும் வெற்றியை தேடித்தரும் என்று ரசிகர்கள்…

Read More

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. ஜனவரி 13 அன்று கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், கடலூர் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய  கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் தஞ்சாவூர், திருவருர், நாகப்பட்டினம் , சிவகங்கை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களிலும்  மற்றும் புதுவையில் பெரும்பான்மையான இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜனவரி 14,15,16 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்.  ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு   வாய்ப்பு  உள்ளது.…

Read More

ஜெயம் ரவி பூமி ஸ்னீக் பீக் | ஜனவரி 14 முதல் ஸ்ட்ரீமிங் . ஒரு விஞ்ஞானி, ஒரு விவசாயி மற்றும் ஒரு போராளியின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு பார்வை.

Read More

படம்: கபடதரி தயாரிப்பாளர்: டாக்டர்.ஜி.தனஞ்சயன் & லலிதா தனஞ்சயன் இயக்குனர்: பிரதீப் கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு: ரசமதி இசை இயக்குனர்: சைமன் கே கிங் ஆசிரியர்: கே.எல். பிரவீன் கலை இயக்குனர்: விதேஷ் அதிரடி நடனம்: ஸ்டண்ட் சில்வா நடிகர்கள் மற்றும் குழு: சிபி சத்யராஜ், ஸ்வேதா நந்திதா, நாசர், ஜெயபிரகாஷ், சுமன் ரங்கநாத், ஜே.எஸ்.கே சதீஷ்குமார், சம்பத்ka

Read More

இந்தாண்டு ஜனவரி 19 ஆம் தேதி முதல் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஜனவரி 6 முதல் 8ஆம் தேதி வரை பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. பெரும்பான்மையான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க விருப்பம் தெரிவித்ததாக 95% பள்ளிகள் தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. இந்த அறிக்கையை ஏற்று மாணவர்களின் நலனை கருதி தமிழக அரசு பள்ளிகளை திறக்க முடிவு எடுத்துள்ளது.

Read More