ஹைலைட்ஸ் : 3.42 இருந்து 26.6 விழுக்காடாக அதிகரித்த கொரோனா பரவல் ஒரு நாளைக்கு சென்னையில் சராசரியாக 7000 பேருக்கு தொற்று உறுதியாகி வருகிறது ஒரு நாளைக்கு சுமார் 50,000 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் மார்ச் முதல் வாரத்தில் 3.42 விழுக்காடாக சென்னையிள் கொரோனா பரவல் இருந்தது. தற்போது தொற்றுப் பரவல் 26.6 விழுக்காடாக அதிகரித்து உள்ளது ஒரு நாளிக்கு எத்தனை பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறதோ,அதில் எத்தனை பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது என்பதை அறிந்து அதன் மூலம் தொற்று விகிதம் கணக்கிடப்படுகிறது. கடந்த மார்ச் 11 ஆம் தேதி 11,523 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 395 பேருக்கு தொற்று உறுதியானது. அன்று தொற்று பரவல் விகிதம் 3.42 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை ஏப்ரல் மாதம் தொடர்ந்து அதிகரித்து தற்போது 26.6 விழுக்காடாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு நாளைக்கு 100 பேருக்கு பரிசோதனை செய்தல்…
Author: Vijaykumar
ஹைலைட்ஸ்: பஞ்சாப் அணியின் ராக்கெட் வேக பந்து வீச்சு. பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்து வீழ்ச்சி. பஞ்சாப் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தரமான வெற்றி. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 26 வது லீக் ஆட்டமானது ஆகமதாபாத்தில் நேற்று நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.அதில் பெங்களூரு – பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி, பௌலிங்கை தேர்வு செய்தது. இதனை தொடராது, பஞ்சாப் அணியின் தொடக்க வீரராக பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர் அதில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். பிறகு களம் இறங்கிய கிறிஸ் கெய்லும் ராகுலும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதில் 24 பந்துகளில் 46 ரன் குவித்து வெளியேறினார் அடுத்ததாக வந்த ராகுல் 51 பந்துகளில் 91 ரன்கள் விளாசினார். ஹர்பிரீத் அடுத்ததாக களமிறக்க 17 பந்துகளில் 25 ரன்கள்…
ஹைலைட்ஸ்: ராணிப்பேட்டை அருகே மணல் கடத்தப்படுவதாக வெளியான புகாரில் ஜேசிபி வாகன ஓட்டுநர் கைது. மண் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த புகாரில் ஈரோடு மாவட்ட ஆவின் பொதுமேலாளர் முருகேசன் கைதுசெய்யப்பட்டார். 19 பேர் மீது லஞ்ச ஒழிப்புப் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். துணை ஆட்சியர் இளம் பகவத் தலைமையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ராணிப்பேட்டை அருகே மணல் கடத்தப்படுவதாக வெளியான புகாரில் அப்போதைய அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பலரும் தப்பிசென்ற நிலையில் மணல் கடத்தும் பணியில் ஈடுபட்ட ஜேசிபி வாகனத்தின் ஓட்டுநர் மட்டும் கைது செய்யப்பட்டார். தப்பி சென்ற சரவணன் என்பவர் செல்போனை விட்டுச் சென்றுவிட்டார். அந்தவகையில் அவர் மொபைலின் அழைப்புகள் மற்றும் வாட்சப் தகவல்களை பரிசோதித்ததில் அவருடன் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் காவல் துறையினருக்கும் நேரடியாக பல தொடர்புகள் இருப்பது தெரியவந்தது. இந்த வழக்கை மேலும் விசாரித்ததில், ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியராக இருந்து ஈரோடு மாவட்ட ஆவின்…
ஹைலைட்ஸ்: இன்று கிரிக்கெட் வீரர் தங்கராசு நடராஜனுக்கு மூட்டு பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் எனக்காக பிராத்தனை செய்த அனைவர்க்கும் நன்றி என்ன தெரிவித்துள்ளார். அவர் அறுவை சிகிச்சை பெற்று நலமாக உள்ளதை ரசிகர்களுக்கு தெரிவித்தார். ஐபிஎல் 2021 சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடிய இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும், தமிழகத்தை சேர்ந்த வீரருமான தங்கராசு நடராஜனுக்கு மூட்டு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு ஆண்டில் விளையாட முடியாமல் போனது. மருத்துவமனையில் அறுவை சிகிச்சையை மேற்கொண்டால் மட்டுமே தான் அவரது காயத்திற்கு தீர்வு காணமுடியும் என்று மருத்துவர்கள் கூறிய காரணத்தினால் ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். இந்நிலையில், இன்று அவருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் “இன்று எனக்கு மூட்டு பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்றும், சரியான முறையில் மிகவும் எளிமையாக…
கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லச்சத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. நேற்று ஒரேநாளில் 15,684 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் 94பேர் இந்த வைரசால் உயிரிழந்தனர். இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,651ஆக உயர்ந்துள்ளது. இதனால் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள், மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேசிய சித்த நிறுவனத்தின் இணை பேராசிரியர் மருத்துவர் ச.சிவகுமார்.கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து தப்பிக்க ஊறவைத்த கடுக்காய் நீர், சீந்தில் பால், ஆயுஷ் குடிநீர், தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் , இஞ்சி கற்பம், துளசி நீர் ஆகிய 6 சித்த மருந்துகளை தினமும் உட்கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார். கடுக்காயில் உள்ள கொட்டையை நீக்கி பின் அதை அரைத்து ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் கடுக்காய் என்ற விகிதத்தில்…
ஹைலைட்ஸ் : தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பட்டு நிபந்தனைகள். வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் முகவர்கள், அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் எந்த ஒரு கட்சிகளும் வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்தக்கூடாது என்றும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை(ம) கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதிகள் சமீபத்தில் கொரோனா பரவல் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். தேர்தல் ஆணையமானது, கொரோனா வேகமாக பரவி வந்த நிலையில், அரசியல் கட்சிகளின் பேரணிகள், கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதித்ததை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், கொரோனா இரண்டாவது அலை பரவியதற்கு தேர்தல் ஆணையமே காரணம் என்றும் குற்றம் சாட்டினர். இதையடுத்து தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கையின் போது பின்பற்றவேண்டிய வழிமுறைகள் பற்றி நேற்று ஒரு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது. அந்த அறிக்கையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் முகவர்கள், அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் போன்ற பல்வேறு கட்டுப்பாடு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் இன்று…
மும்பை உயா்நீதிமன்றத்தின் நாகபுரி கிளையானது, வாட்ஸ்அப் குழுவில் உள்ள உறுப்பினா்கள் பதிவிடும் தவறான, சா்ச்சைக்குரிய பதிவுகளுக்கு அக்குழுவின் அட்மின் பொறுப்பேற்க முடியாது என்று அதிரடி கருத்து தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவை சோந்த கிஷோர் தருண் (33) என்பவா் நடத்தி வந்த வாட்ஸ் ஆப் குழுவில், அட்மின் கிஷோர் மீது பெண்களுக்கு எதிராக பாலியல் ரீதியாகவும், நிற ரீதியாகவும் கருத்துகளை பதிவிடுவதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. கிஷோர் மீது தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்கும், பெண்களை இழிவுபடுத்துவது போன்ற பிரிவுளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கிஷோர் இந்த வழக்கை எதிர்த்து மும்பை உயா்நீதிமன்ற நாகபுரி கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் காவல்துறையினர் கூறியதாவது, வாட்ஸ் ஆப் குழுவில் பெண்களுக்கு எதிரான கருத்துகள் தொடர்ந்து பதிவிடப்பட்டு வந்ததாகவும், அந்த நபர்களை கிஷோர் குழுவை விட்டு நீக்கவில்லை எனவும் நீதிபதினரிடம் தெரிவித்தனர். ‘வாட்ஸ்அப் குழுவை நிர்வகிப்பவா் பதிவிடப்படும் கருத்துகளைத் தணிக்கை…
கொரோனாவை கட்டுப்படுத்த மீண்டும் கடுமையான ஊரடங்கை 14 நாட்களுக்கு மாவட்டங்கள்,நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு அமல்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. தினம்தோறும் கொரோனா தெற்று பாதிப்பானது பெருகிகொண்டே வருகிறது.இதனால் நாட்டில் எதிர்பாராத சூழல் நிலவிவருகிறது. இதனால் மாநில யூனியன் பிரதேசம் மற்றும் உள்ளுர் ஊரடங்கு கட்டுப்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதைப்பற்றி மாநில அரசுக்கு உள்துறை செயலாளர் அஜய்குமார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளர்.
அருகம்புல்லை பயன்படுத்தி ஆவி பிடித்து வருவதன் மூலம் முகத்தில் உள்ள அழுக்குகள் சீக்கிரம் நீங்கிவிடும். இந்த முறையே மிகவும் சிறந்தது. இதனால் எப்போது ஆவி பிடிக்கின்றோமோ அப்போது முகத்தை சுத்தமான நீரினால் கழுவிய பின் துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் போய்விடும். ஆவி பிடிப்பதன் மூலம் ஏற்படும் பயன்கள் பற்றி காண்போம் ! 1. ஆவி பிடுப்பதன் மூலம் முகத்தின் துளை வழியே நீர் துளிகள் சென்று கரும்புள்ளிகளையும் ,வெள்ளை புள்ளிகளையும் எளிதில் நீங்கிவிடும். அதற்கு 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்து, பின் தேய்த்தால், மூக்கில் காணப்படும் வெள்ளையான புள்ளிகள் வந்துவிடும். மேலும் அவை எளிதில் வருவதோடு, கரும்புள்ளிகள் வேரோடு வந்துவிடும். பின்னர் அவை வராமல் தடுக்கும். 2.ஆவி பிடிப்பதால், முகத்தில் உள்ள சின்ன சின்ன பருக்கள், கருவாலயம் போன்றவை குறையும். ஆவி பிடிக்கும் போது முகத்தின் துளைகளின் வழியே எண்ணெய் சுரப்பிகளில்…
ஹைலைட்ஸ்: கொரோனவால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுவரும் இந்திய. ஆக்சிஜன் இன்றி திணறி கொண்டு இருக்கும் இந்திய. பிரிட்டன் பிராதமர் போரிஸ் ஜாக்சன்,இந்தியாவுக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் சாதனம்,வெண்டிலெட்டர்கள் போன்ற 600 வகையான மருத்துவ உபயோக சாதனைகளை வழங்குவதாக தெரிவித்துள்ளார். இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா வைரஸால் கோடி கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சி திணறல் ஏற்பட்டு சரியான சுவாசமின்மை காரணமாக பலியாகி வருகின்றனர்.வைரஸ் அதிகமாக பரவி வருவதால் பெருபாலான நாடுகளில் மக்கள் உயிரிழந்து வரும் நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் மருத்துவமனையில் இடத்தட்டுப்பாடு,போதிய கண்காணிப்பு இன்மை,ஆக்சிஜன் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் மக்கள் பாதிக்கபடுகின்றனர். பல்வேறு நாடுகளுடன் இந்திய நல்லமுறையில் நட்பு வைத்துக்கொள்வதால்,வைரஸால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வரும் நமக்கு ஒரு சில நாடுகள் தானாக முன்வந்து உதவவுள்ளனர். அந்த வரிசையில் பிரிட்டன் பிராதமர் போரிஸ் ஜாக்சன், இந்தியாவுக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் சாதனம்,வெண்டிலெட்டர்கள் போன்ற 600 வகையான மருத்துவ உபயோக…
ஹைலைட்ஸ் : உலக புத்தக தினமாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தகமானது நமக்கு ஆசானாகவும் வழிகாட்டியாகவும் இருக்கும். உலக புகழ் பெற்ற நாடக ஆசிரியர் வில்லியம் சேக்ஸ்பியர், இவரின் பிறந்தநாளும் நினைவுநாளுமான இந்த நாளில் உலக புத்தக தினம் கொண்டாடப்படுகிறது. உலக புத்தக தினமாக ஏப்ரல் 23 ஆம்தேதி (இன்று) கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நாளில் அனைவரும் புத்தகம் வாசிக்கு பழக்கத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும். அனைவரும் புத்தகம் வாசிப்பதை ஊக்குவிக்கவேண்டும் என்றும் சிறந்த சமுதாயத்தை படைக்க உறுதி ஏற்போம் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். வில்லியம் சேக்ஸ்பியர் என்பவர் உலக புகழ் பெற்ற நாடக ஆசிரியர், இவரின் பிறந்தநாளும் நினைவுநாளுமான இந்த நாளை அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஏப்ரல் 23 ஆம் தேதி புத்தக தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1996-ம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் நாளில், அனைவருக்கும் வாசிப்பு உரிமை, புத்தகங்களின் அவசியம், நூலகங்களின் வளர்ச்சி,…
ஹைலைட்ஸ் : வெல்லம் மற்றும் எலுமிச்சையின் பயன்கள். வெல்லம் மற்றும் எலுமிச்சை சாறு உடல் பருமனை குறைக்க பயன்படுகிறது. வெல்லம் மற்றும் எலுமிச்சை, இந்த கலவை உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்குகிறது. இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல் பருமன் அதிகரிப்பு பிரச்சனையின் காரணமாக, உடற்பயிற்சி கூடங்களில் தங்களின் பொழுதுகளை கழிக்கின்றனர். இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க நாம் இயற்கை பானங்களை அருந்தவேண்டும். பிரசவித்த தாய்மார்கள் குழந்தை பிறப்பிற்க்கு பின் அதிக உடல் எடையுடன் காணப்படுவார்கள். பின் அவர்கள் தங்களின் பழைய நிலையை அடைய அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். அவர்கள் இந்த வெல்லம் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த கலவையை தினமும் குடிப்பதன் மூலம் அவர்களின் எடையில் மாற்றத்தை காணலாம். அதேபோல் வயது அதிகரிக்க அதிகரிக்க தங்களின் உடல் எடையில் மாற்றத்தை பார்க்கும் 90s காலகட்டத்தினர்,இதுபோன்ற உடலுக்கு நன்மை தரும் பானங்களை குடிப்பதன் மூலம் தங்களின் எடையை கட்டுக்குள் வைத்து…
ஹைலைட்ஸ் : சூரி நடிக்கவிருக்கும் படத்தின் தலைப்பு வெளியீடு. விடுதலை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டனர். சூரி நடிக்கும் படத்தில்,மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வரும் வெற்றிமாறன் அடுத்தகட்டமாக காமெடி நடிகர் சூரியை வைத்து ஒரு படம் இயக்கிவருகிறார். இப்படமானது எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கின்ற சிறுகதையை படத்தின் மையமாக வைத்து தயாரித்து வருகின்றனர். இப்படத்தில் சூரிக்கு துணை நடிகையாக பவாணி ஸ்ரீ நடித்துவருகிறார்.பிரபல நடிகர்,மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் இசை அமைப்பாளராக, பிரபல இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார்.இப்படத்தை எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘விடுதலை’ என்ற பெயரும் வைத்துள்ளனர். இப்படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் வாத்தியார் என்றும் பேசப்பட்டுவருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தளமாக சத்தியமங்கலத்தில் அடர்ந்த…
ஹைலைட்ஸ் : கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில்,தடுப்பூசி போடும் பணி தீவிரம். சீரம் நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்துள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை, சீரம் நிறுவனம் உயர்த்தியுள்ளது. தற்பொழுது இந்திய முழுவதும் கொரோனா வைரஸின் பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையில்,மருத்துவ பணியாளர்கள் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய முழுவதும் பாரத் பயோடெக்கின் தடுப்பூசியாக கோவாக்சினும்,சீரம் நிறுவனத்தின் தடுப்பூசியாக கோவிஷீல்டும் தற்பொழுது பயன்பாட்டில் இருந்துவருகின்றது. இதில் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ் ரூ.250 க்கு விற்கப்பட்டு வந்த நிலையில்,டோஸின் விலையினை சீரம் நிறுவனம் தற்பொழுது உயர்த்தியுள்ளது.இச்செய்தியானது மருத்துவர்க்ளுக்கும்,பொதுமக்களுக்கும் அதிர்ச்சியை தருகின்றது. சீரம் நிறுவனம் இதுகுறித்து விளக்கம் தந்ததில், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளின் தடுப்பூசியை ஒப்பிட்டு பார்த்தால் கோவிஷீல்டின் விலை குறைவு என்றும், மத்திய அரசின் அறிவுறுத்தலின் படியே விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. இருந்தும், இந்த திடீர் விலையேற்றம் பலருக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.
