கொரோனா காலகட்டத்தில் தொற்று பாதிப்பு உள்ளவர்கள், லேசான அறிகுறி தென்படுபவர்கள் என எல்லோருக்கும் மருத்துவர்கள் கொடுத்த பொதுவான மாத்திரை எதுவென்றால் இந்த டோலோ 650 தான். அதை எந்த அளவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும், அதிகமாக எடுத்துக் கொண்டால் என்னென்ன பக்க விளைவுகள் உண்டாகும் என்பது குறித்து இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

  • கோவிட்-19 தொற்றுக் காலத்தில் உலக அளவில் அதிகம் விற்றுத் தீர்ந்த மருந்து இதுதானாம். உலக அளவில் விற்ற மாத்திரைகளின் அளவை அடுக்கி வைத்தால், உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை விட பல நூறு மடங்கு உயரமாக இருக்குமாம்.
  • உலக அளவில் மட்டுமல்ல, இந்தியாவில் எவ்வளவு விற்பனை ஆகியிருக்கிறது தெரியுமா? கடந்த ஓராண்டில் மட்டும் கிட்டதட்ட 650 கோடி (டன்) அளவுக்கு விற்பனை ஆகியிருக்கிறது.

​பயன்படுத்துவதால் என்ன பயன்?

  • பருவ காலத்தொற்றுக்கள், தலைவலி, காய்ச்சல், உடல் வலி போன்ற சின்ன சின்ன நோய்க்கான முன் அறிகுறிகள் தோன்றும் சமயங்களில் இந்த மாத்திரை எடுத்துக் கொள்ளலாம்.
  • ஆனால் பலரும் காய்ச்சல் அதிகமாக இருக்கும் சமயங்களிலும்கூட டோலோவை மருந்துக் கடைகளில் வாங்கி சாப்பிடுகிறார்கள். அது மிகவும் தவறு. இப்படி எதற்கெடுத்தாலும் டோலோ மாத்திரையைப் பயன்படுத்துவது கடும் விளைவுகளை உண்டாக்கும்.

​பக்க விளைவுகள்:

  • DOLO 650 அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் பல்வேறு பக்க விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என மருந்தியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள்.
  • கல்லீரல் பிரச்சினைகள்
  • ரத்தசோகை
  • மஞ்சள் காமாலை
  • உடல் வீக்கம்
  • சருமப் பிரச்சினைகள், தடிப்புகள்
  • டயேரியா

போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

கவனிக்க வேண்டியவை:-

  • கர்ப்பிணிப் பெண்கள் DOLO 650 எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்குமுன் உங்களுடைய மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.
  • அதேபோல தாய்ப்பால் கொடுக்கும் பெண்களும் தேவைப்படும் சமயங்களில் மட்டும் இந்த மாத்திரை எடுக்கலாம்.
  • DOLO 650 எடுப்பதால் சிறுநீரகப் பிரச்சினைகள், இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் எதுவும் ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை. ஆனால் கல்லீரல் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
  • oxyphenbutazone, metamizola, leflunomide, pilocarpine, ethanol, lamotrigine, phenytoin போன்ற சேர்மக் கலவைகளால் ஆன மாத்திரைகள் எடுக்கும்போது அவற்றுடன் சேர்த்து DOLO 650 மருந்துகளை எடுக்கக் கூடாது. அதனால் கடும் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு.
  • மது அருந்திய சமயங்களில் DOLO 650 எடுத்துக் கொள்வது ஆபத்தில் முடியலாம்.
See also  சுற்றுசூழல் பாதுகாப்பு கட்டுரை-Sutru Sulal Pathukappu Katturai In Tamil