நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 65 திரைப்படத்திற்கு பீஸ்ட் என பெயரிடப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்திற்கு அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சதிரன் இசையமைக்கிறார்.

பீஸ்ட் திரைப்படத்தின் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.
மிஸ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. அதன் பின் பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தளபதி 65 திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்க இருந்தது. இன்று தளபதி விஜயின் 47 வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். இதனால் நேற்று பீஸ்ட் திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.