புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் உடன் GSLV F10 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது. இயற்கை பேரழிவுகள், விவசாயம், வனவியல் கனிமவியல் பேட்டரிகள் தொடர்பான எச்சரிக்கை ஆகியவற்றை அறிந்து கொள்வதற்காக EOS3 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான ISRO வடிவமைத்துள்ளது.

மொத்தம் 2 ஆயிரத்து 268 கிலோ எடை கொண்ட இந்த செயற்கை கோளுடன் GSLV ராக்கெட் நாளை காலை 5 மணி 43 நிமிடங்களுக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதற்கான கவுண்டவுன் இன்று அதிகாலை 3 மணி 43 நிமிடங்களில் தொடங்கியது GSLV ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ள EOS3 செயற்கைக்கோள் அதிநவீன தொழில்நுட்பத்துடன் மிக வேகமாக செயல்படும் செயற்கைக்கோள் ஆகும் என செயற்கைக்கோள் பூமியில் இருந்து 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் விண்ணில் நிலை நிறுத்தப்பட உள்ளது

See also  youtube-ல் 100 கோடி பார்வையாளர்களை கடந்த தனிப்பாடல்