இளைஞர்களை தாக்கும் மாரடைப்பு கொரோனாவால் அபாயம்!

ஹைலைட்ஸ்:

  • உலகம் முழுவதையும் வேறு எந்த நோயும் கொரோனா அளவு தாக்கியதில்லை
  • நாடு முழுவதும் ஊரடங்கு,வேலை இழப்பு, பணநெருக்கடி, எதிர்காலம் பற்றிய கவலை.
  • இளைஞர்களுக்கு மனஅழுத்தம் காரணமாக ஏற்படும் மாரடைப்பு.

உலகளவில் கொரோனா நோய் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதையும் வேறு எந்த நோயும் கொரோனா அளவு தாக்கியதில்லை. 2019 ஆம் ஆண்டு சீனாவில் உருவான (COVID 19) இந்த நோய் தொற்றினால் மக்கள் பெரிதும் பாதிப்பு அடைந்து வருகிறார்கள். கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஆண்டு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

அந்த ஊரடங்கின் தொடக்கத்தில் பலருக்கும் ஒரு புதிய அனுபவமாகத்தான் இருந்தது. இது அனைவருக்கும் விடுமுறை காலம் போன்று மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால் மாதக்கணக்கில் ஊரடங்கு நீடித்ததால் வேலை இழப்பு, பணநெருக்கடி, எதிர்காலம் பற்றிய கவலை போன்றவைகள் உருவானதும் பலரும் கடுமையான மனஅழுத்தத்திற்குஆளாகினார்கள். அது ஒரு சில மனிதர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற பல நோய்கள் உருவாக காரணமாகிவிட்டது.

கொரோனா பதிப்பு

கொரோனா பரவல் காரணமாக நோயாளிகளில் பலர் உடனடியாக மருத்துவமனையை நாட தயக்கம் காட்டிவருகின்றனர். அதனால் பெரும் நோயான இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், சுவாசப் பகுதி நோய் போன்ற நோயாளிகளுக்கு இந்த வைரஸ் தொற்றானது அதிவிரைவாக தாக்கிவிடுகிறது. இதனால் இவர்கள் இறக்கவும் நேரிடுகிறது. அதே சமயம் எந்த நோயும் இல்லாமல் முழு ஆரோக்கியத்துடன் இருக்கும் இளைஞர்களையும் இந்த தொற்றுடன் சேர்ந்து  திடீர் மாரடைப்பும் தாக்குகிறது. இது பற்றிய ஆய்வுகள் எதுவும் தெரியவில்லை.

கொரோனா சாதாரண காய்ச்சலுடன் தொடங்கி, இரண்டு மூன்று நாட்களில் இருமல் உருவாகிறது. ஒரு வாரம் கடக்கும்போது சுவாசப்பகுதியை தாக்குகிறது. இந்த நேரத்தில் ஆக்சிஜன் அளவு குறைவதால் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.

காய்ச்சல் ஏற்பட்ட ஒரு வாரத்திற்கு பிறகு இதயம் தொடர்புடைய பிரச்சினைகள் துவங்குகின்றனர். அது இதய தசைகளில் நீர்க்கட்டு உருவாகுவதாகவோ, திடீரென்று இதய செயல்பாட்டை நிறுத்துவதாகவோ அமையலாம். இந்த நேரத்தில் உடலுக்கு முழு ஓய்வும், மனதுக்கு சந்தோஷமும் தேவை. உடனடியாக மருத்துவ சிகிச்சையும் அவசியம். சிலருக்கு வென்டிலேட்டர் அல்லது டயாலிசிஸ் தேவைப்படும்.

கொரோனா பாதித்த நோயாளிகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியின் செல்பாடு மிக குறைவாகவே இருக்கும். அந்த நேரத்தில் ஒரு சில ரசாயனங்கள் அதாவது ஸைட்டோகினின் போன்றவை உடலில் உற்பத்தியாகும். அந்த வகை ரசாயனங்கள் வைரசை மட்டும் அழிக்காமல் உடல் உறுப்புகளின் செயல்பாட்டை தடைசெய்யும் ஆபத்தை உருவாக்கிவிடும்.

இதயத்தில் உள்ள எய்ஸ் ரெஸிப்டேர்ஸ்களுடன் கொரோனா வைரஸ் ஒட்டிக்கொண்டு மாரடைப்பை ஏற்படுத்த காரணமாகிவிடுகிறது. சிலருக்கு இதய தமனிகளில் தடைகள் ஏற்படாமலே இதயம் செயலிழகச்செய்கிறார்கள். இது பற்றிய கூடுதல் ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

உடற்பயிற்சி எவ்வாறு செய்வ வேண்டும்? 

உடற்பயிற்சி மேற்கொள்ளாதவர்கள் இதயநோய், சர்க்கரை நோய் போன்றவைகளோடு உடல் எடையினால் பாதிக்கப்படுவார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதிக உடற்பயிற்சி செய்வது இதய செயல் இழப்புக்கு காரணம் என்பது பலருக்கும் தெரியாத ஒன்றே.

உடற்பயிற்சி செய்வதற்கு முன் உடலின் பொதுவான ஆரோக்கிய நிலை, வயது போன்றவைகளை கருத்தில்கொள்ளவேண்டும். எவ்வளவு நேரம் செய்யவேண்டும்? என்பதை தீர்மானிப்பதும் அவசியம். உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும் போதே உங்களால் பேசமுடியவேண்டும். முணுமுணுத்தபடி ஒரு பாடலை மெதுவாக பாடவும் முடியவேண்டும். இவைகளை செய்வதில் சிரமம் ஏற்பட்டால் உடனே உடற்பயிற்சியை நிறுத்திவிடவேண்டும். தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது போதுமானது.

உடற்பயிற்சியே செய்யாதவர்கள் திடீரென்று கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ளவதை தவிர்க்கவும். கனமான பொருட்களை தூக்குவது போன்ற செயல்களையும் செய்யக்கூடாது.

அதனால் திடீர் இதய செயலிழப்பு உருவாகிவிடக்கூடும். சளி , காய்ச்சல் போன்றவை வந்த பின்பு பத்து நாட்கள் வரை கவனமாக இருக்கவேண்டும்.நோய் தொற்றிய பின் சரியான அளவு உணவு, உடற்பயிற்சி, யோகா போன்றவை உடலுக்கு நம்மையை தரும்.

0 Shares:
You May Also Like
Gold Rate in chennai today
Read More

இன்றைய சென்னை தங்க விலை (Chennai Gold Rate Today) – மே 15, 2025

இன்று சென்னை மக்களுக்காக மிகவும் முக்கியமானது – தங்கம் வாங்குவதற்கு சரியான நேரமா இல்லையா என்பதை தீர்மானிக்க இன்றைய தங்க விலை மிகவும் பயனுள்ளதாக…
பட்டா சிட்டா ஆன்லைன் பதிவிறக்கம் செய்வது எப்படி
Read More

பட்டா சிட்டா ஆன்லைன் பதிவிறக்கம் செய்வது எப்படி

  பட்டா சிட்டா ஆன்லைன் சேவைகள் எங்கும் செல்லாமல் ஆவணத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய படிப்படியான செயல்முறையை வழங்குகிறது. பட்டா சிட்டா என்றால் என்ன?…
makkamishi song lyrics
Read More

மக்காமிஷி | Makkamishi Song Lyrics & Video

Makkamishi – “மக்காமிஷி” எனும் கவர்ச்சியான பாடல், ஜெயம் ரவியின் நடிப்பில் உருவான “பிரதர்” திரைப்படத்தின் முதல் ஒரு தனிப் பாடலாகும். இந்த இனிமையான…
Read More

சிறந்த தமிழ் பைபிள் வசனங்கள் மற்றும் quotes

சிறந்த தமிழ் பைபிள் வசனங்கள் மற்றும் quotes அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்: பிரசங்கி 3:11 நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என்…