தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் ஜூன் 21 ஆம் தேதி வரை 27 மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மே 9 ஆம் தேதி முதல் மதுபான கடைகள் மூடப்பட்டு இருந்தது. கடந்த 34 நாட்களாக மூடப்பட்டு இருந்த மதுபான கடைகள் நேற்று திறக்கப்பட்டது. டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட ஒரே நாளில் ரூ.165 கோடிக்கு மது பாட்டில்கள் விற்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்டுப்பாடு வழிமுறைகளை மதுபிரியர்கள் கடைப்பிடிக்க ஞாயிற்றுகிழமை டாஸ்மாக் கடைகளின் முன்பு தடுப்பு அரண்கள் அமைக்கப்பட்டது. வட்டத்திற்குள் நின்று சமூக இடைவெளியை பின்பற்றி மதுபாட்டில்களை வாங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகள் 34 நாள்களுக்குப் பிறகு திறக்கப்பட்டதால் பல இடங்களில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. கூட்டத்தை காவல்துறையினரால் கட்டுப்படுத்த முடியவில்லை. டாஸ்மாக் கடைகளுக்கு வந்த மதுபிரியர்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான கிருமி நாசுனி தெளிக்கப்பட்டு, சமூக இடைவெளி பின்பற்றப்பட்டது.

ஒரு சில டாஸ்மாக் கடைகளில் மாலை 4 மணிக்கு மேல் இளைஞா்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. கடைகள் மூடக்கூடிய நேரத்திற்கு முன்பு அனைத்து கடைகளிலும் மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதியது. இதனால் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த காவல்துறையினருக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. டாஸ்மாக் கடைகளில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க சுழற்சி முறையில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

See also  Western brands pay that tribute to the animals rescue