- Advertisement -
SHOP
Home Blog Page 136

சமுத்திரகனி – வெள்ளை யானை Official டிரெய்லர்

0

சமுத்திரகனி & ஆத்மியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த “வெள்ளை யானை” என்ற அதிரடி நாடகத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லரை வழங்குகிறார்.

திரைப்பட வரவு:
நடிகர்கள்: சமுத்திரகனி, ஆத்மியா, யோகி பாபு, ஈ.ராமதாஸ், மூர்த்தி, எஸ்.எஸ். ஸ்டான்லி, பாவா செல்லதுரை, ‘சலாய் ஆரம்’ ராஜு, சரண்யா ரவிச்சந்திரன்
எழுதி இயக்கியவர்: சுப்பிரமணியம் சிவா
தயாரித்தவர்: எஸ்.வினோத் குமார்
இசை: சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு: விஷ்ணு ரங்கசாமி
ஆசிரியர்: ஏ.எல்.ரமேஷ்
கலை இயக்கம்: ஏ.ஜேகதீசன்
ஸ்டண்ட்: தினேஷ் சுப்பாராயண்
உடைகள்: நாகு
ஒப்பனை: ஏ.சரவணகுமார், பி.ராஜா
பாடலாசிரியர்கள்: ராஜு முருகன், உமா தேவி, அரிவு, அந்தோணி தாசன்
தயாரிப்பு நிர்வாகி: ஏ.எஸ்.சிவச்சந்திரன்
விளம்பர வடிவமைப்புகள்: சசி & சசி
புரோ: ரியாஸ் கே அகமது
டிஜிட்டல் கூட்டாளர்: டிவோ

இன்று தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு; பள்ளிக்கு முகக்கவசம் அணிந்து வந்த மாணவர்கள்

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவளின் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் சுமார் 9 மாத இடைவெளிக்கு பிறகு மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதியுடன் இன்று 13 ஆயிரம் பள்ளிகள் திறக்கப்பட்டன.
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வெழுதும் மாணவர்கள் முகக்கவசம் அணிந்தவாறு பள்ளிக்கு வருகை தந்தனர். பள்ளிக்கு வந்த மாணவர்கள் மகிச்சியுடன் இருந்தாலும் மனதில் சிறு அச்சத்துடனும் இருக்கின்றனர்.
பள்ளியின் வாயில்களிளே மாணாவர்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டும், உடலின் வெப்பநிலை கண்டறியப்படும் பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.  மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பெற்றோற்களின் இரண்டாம் கட்ட கலந்தாய்வின் பின்னர் அனுமதி கடிதத்துடன் பள்ளிக்கு அனுமதிக்கபட்டனர்.
பள்ளியின் வகுப்பறைகளில் மற்றும் இருக்கைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டும், இருக்கையில் இடைவெளி விட்டும் அமரவைக்க வேண்டும் என்ற மாணவர்களின் பாதுகாப்பை பற்றி பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.  பின்னர் போட்டி தேர்வில் எந்த பாதிப்பும் இல்லை என்பதையும் ஆசிரியர்கள் அறிவித்தனர்.  பாடங்களில்  கடினமான பாடத்தை குறைத்தது குறித்த விவரத்தையும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளதனர்.

இன்று தங்கத்தின் விலை சற்று உயர்வு

இன்றைய நிலவரப்படி சென்னையில் தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது.  கடந்த ஒருவாரமாக குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.72 உயர்ந்துள்ளது.  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 1 சவரன் ரூ.36,976 க்கும், 1 கிராம் ரூ. 4,622 க்கும் விற்கப்படுகிறது.  24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 1 சவரன் ரூ.40,048க்கும், 1 கிராம் ரூ. 5,006 க்கும் விற்கப்படுகிறது.

சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 60 காசு உயர்ந்து ரூ.70.60க்கு இன்று விற்கப்படுகிறது.

டாக்டர் பணிக்கு தன் வாழ்வை அர்ப்பணித்த மருத்துவர் சாந்தா மறைவு

மருத்துவர் சாந்தா உடல்நலக் குறைவால் காலமானார்.இவருக்கு வயது 93. சாந்தாவுக்கு ஏற்கனவே ஆஸ்துமா பாதிப்பு இருந்ததால் அவ்வப்போது சுவாச பிரச்சனை ஏற்பட்டுள்ளது.  அதற்காக சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சிலநாட்களாக அவருக்கு உடலநலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அவருக்கு சுவாசிப்பதில் சிரமம்  ஏற்பட்டுள்ளது. அதனால் தனியார்  மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சில மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வீடு திரும்பினார். பின்னர் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மீண்டும் மருத்துவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனிற்றி 19.01.2021 இன்று காலை 3.30 மணிக்கு காலமாகிவிட்டார்.

அனைவருடைய மனதிலும் நீங்காத இடத்தை பெட்ரா இவருக்கு பிரதமர் மோடி,  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பல்வேறு  அரசியல் கட்சித் தலைவர்களும்  இரங்கல் தெரிவித்துள்ளனர்.

புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு  பணியில் அகில இந்திய அளவில்  சிறந்த முன்னோடியாக திகழ்ந்தவர்.   மேலும் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் 60  ஆண்டிற்கும் மேலாக  தலைவராக பணியாற்றி உள்ளார்.

மேலும் இவருடைய மருத்துவ சேவைக்காக பத்ம விபூஷண் உள்ளிட்ட பல்வேறு  விருதுகள் கிடைத்துள்ளது.
பொதுமக்களுக்கு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை மேற்கொள்வதற்கு முக்கிய பங்காற்றியுள்ளார்.

இவரது உடல் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் பொது மக்களின்  அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவரின் உடல் அனைத்து அரசு மரியாதையுடன் நல்லடக்கம்  செய்யப்படும் என அறிவித்து உள்ளார்

சாலையோரம் தூங்கிய தொழிலாளர்கள் 13 பேர் பலி

0

லாரி ஏறி சாலையோரம் தூங்கி கொண்டு இருந்த கூலி தொழிலாளர்கள் 13 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள் .இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இவர்கள் அனைவரும் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாடா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது .இந்த சோக சம்பவம் நடந்த இடம் குஜராத் மாநிலம் சூரத் அருகே உள்ள கொசம்பாவில் தான் .இந்த சம்பவம் மக்களுக்கு இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

8ம் வகுப்பு முடித்தோருக்கான ஊரக திறனாய்வு தேர்வு

0

தமிழகத்தில்  ஊரக திறனாய்வு தேர்வானது, வரும் 24ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ளன.
இதில் 860 மாணவர்கள், 9 மையங்களில் பங்குப்பெற உள்ள நிலையில்.  8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றும், 50 சதவீத மதிப்பெண்களுடன் இருக்க வேண்டும்.  எனேவே  மாவட்டம் வாரியாக தேர்வு செய்யப்பட்டும் 50 மாணவர்கள் மற்றும் 50 மாணவியர்களுக்கு, கல்வி உதவித்தொகையானது 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
இந்த ஆண்டுக்கான தேர்வு, வரும் 24-ம் தேதி  நடக்க உள்ளது. இந்த தேர்விற்குக்கு 860 மாணவ – மாணவியர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு ஒன்பது பள்ளிகளான உத்திரமேரூர் அரசு பெண்கள், வாலாஜாபாத் அரசு பெண்கள், பெரிய காஞ்சிபுரம் அரசு பெண்கள், பி.எம்.எஸ்., அரசு பெண்கள், பச்சையப்பன் மேல்நிலை ஆண்கள், ஜே.ஜே., ஆண்கள், ஸ்ரீபெரும்புதுார் அரசு பெண்கள், குன்றத்துார் அரசு பெண்கள், சேக்கிழார் ஆண்கள் அரசு மேல்நிலை என,  தேர்வு மையமாக அமைக்கப்பட்டுள்ளன.
இதில், 10 மாணவர்கள்  400 சதுரடி பரப்பில் உள்ள  வகுப்பறையில் தேர்வெழுத ஒழுங்கு செய்யப்படும் என்பதை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட கல்வித்துறையானது  கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளை பின்பற்றவும் அறிவுறுத்தி உள்ளனர்.

மாஸ்டர் ஸ்னீக் பீக்

0
மாஸ்டர் - ஸ்னீக் பீக் | தலபதி விஜய் | விஜய் சேதுபதி | அனிருத் ரவிச்சந்தர் | லோகேஷ் கனகராஜ்

சந்தனம் – பாரிஸ் ஜெயராஜ் Official டிரெய்லர்

0

பாரிஸ் ஜெயராஜ் அதிகாரப்பூர்வ டிரெய்லர் | சந்தனம் | சந்தோஷ் நாராயணன் | ஜான்சன் கே –

#ParrisJeyaraj |#ParrisJeyarajTrailer | #Santhanam | #SanthoshNarayanan | #JohnsonK

சந்தனம்
இல் & என
"பாரிஸ் ஜெயராஜ்"

இசை: சந்தோஷ் நாராயணன்

ஜான்சன் கே எழுதி இயக்கியுள்ளார்
கே.குமார் தயாரித்தார்
தயாரிப்பு வீடு - லார்க் ஸ்டுடியோஸ்
நடிகர்கள்: என்.சந்தனம், அனிகா சோதி, மாருதி பிருத்விராஜ், மொட்டாய் ராஜேந்திரன்
டாப்: ஆர்தர். கே .வில்சன்
நடனம்: சாண்டி
கலை இயக்கம்: ஜி.துரைராஜ்
ஜான்சன் எழுதியது மற்றும் இயக்கியது .கே
ஆசிரியர் - பிரகாஷ் மபு
டாப்: ஆர்தர் ஏ வில்சன்

இன்று மாலை வெளியாகும் “பாரிஸ் ஜெயராஜ்” படத்தின் ட்ரெய்லர்

0

மக்களிசை நாயகனான “சந்தோஷ் நாரயணன் ” இசையமைத்த, ஜான்சன் இயக்கத்தில் உருவாகிய “சந்தானம்” நடிப்பில் வரும் “பாரிஸ் ஜெயராஜ்” என்ற இப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை 5 மணியளவில் வெளியிடப்படும் என்றும்.
இப்படத்தினை Lark studios தயாரிப்பில் உள்ளது என்றும் படக்குழுவினர் அறிவித்து வெளியிட்டனர்.

பொங்கலை தொடர்ந்து குறைந்துவரும் தங்கத்தின் விலை 

ஜனவரி 16 அன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 36,864க்கு விற்க்கப்பட்டது. வாரத்தின் முதல் நாளான இன்று இந்த விலையில் ஒரு சவரனுக்கு ரூ. 48 குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு சவரன் ரூ. 36,816 க்கு விற்கப்படுகிறது. இந்த விலை குறைவு தங்கம் வாங்குபவரிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு  கிராம் வெள்ளி ரூ. 69.70 விற்கப்படுகிறது.

சாதனை படைக்குமா? இந்திய அணி…

வரலாற்றில்  முதல் வெற்றியாக இந்திய அணி சாதனை படைக்க வாய்ப்பு உள்ளன. பார்டர் – கவாஸ்கர்  தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸின் 294 ரன்களை குவித்த ஆஸ்திரேலியா அணியானது இந்தியாவிற்கு 324 ரன்களை இலக்காக நிர்ணயித்து உள்ளது.  எனவே அதிகபட்சமாக சிராஜ் -5 மற்றும் ஷர்துள்-4 விக்கெட்டுகளை எடுத்து வீழ்த்தினார்கள்.  இதனை தொடர்ந்து இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் “பிரிஸ்பேன்” மைதானத்தில் நடக்க இருக்கும்  போட்டியில் இந்திய அணி வரலாற்று சாதனையான தனது முதல் வெற்றியை பதித்து வைக்கலாம்.

 

 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி பாதிப்பு எதுவும் இல்லை!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் ஜனவரி 16 ம் தேதி தொடங்கப்பட்டது.  தொடங்கிய முதல் நாளிலே  2,07,229 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது .  இது பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா  போன்ற நாடுகளில் போடப்பட்ட தடுப்பூசியை விட அதிகம் என்று மத்திய சுகாதார துறை கூடுதல் செயலாளர் மனோகர் அக்னானி  கூறுகிறார்.
நாடுமுழுவதும் ஜனவரி 17ம் தேதி மாலை வரை 2,24,301 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  இதில் 447 பேருக்கு லேசான காய்ச்சல், தலைவலி, மயக்கம்  போன்ற அறிகுறிகள் இருந்ததாக கூறப்படுகிறது.  ஆனால் மூன்று பேர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  இரண்டு பேர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பி இருக்கிறாரகள்.  இவர்கள் டெல்லியை சேர்ந்தவர்கள்.  ஒருவர் மட்டும் மருத்துவமனையில் தொடர் கண்காணிப்பில்   உ ள்ளனர் என்று மத்திய சுகாதார துறை சார்பாக கூறப்படுகிறது.

மாஸ்டர் – மேக்கிங் வீடியோ | தலபதி விஜய் | விஜய் சேதுபதி | அனிருத் | லோகேஷ்

0

மாஸ்டர் – மேக்கிங் வீடியோ | தலபதி விஜய் | விஜய் சேதுபதி | அனிருத் | லோகேஷ்

மாநாடு official மோஷன் போஸ்டர்

மானாடு அதிகாரப்பூர்வ மோஷன் போஸ்டர் | STR | கல்யாணி | எஸ்.ஜே.சூர்யா | வெங்கட் பிரபு | ஒய்.எஸ்.ஆர் | வி ஹவுஸ் #STR #vp09 #maanaadu #MaanaaduMotionPoster #abdulkhaaliq #aVPpolitics #SilambarasanTR V House Productions present the official motion poster of #Maanaadu (மாநாடு)