முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பிளஸ்-2 தேர்வு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

பிளஸ்-2 தேர்வு மே 3-ந் தேதி தொடங்கி மே 21 தேதி முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் பொது தேர்வவை எழுத உள்ளனர்.

12 ஆம் வகுப்பிற்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 16-ந் தேதி நடத்தப்பட உள்ளது. இந்த இரு தேர்வுகளையும் நடத்துவதா அல்லது ஒத்தி வைப்பதா என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

பிளஸ்-2 பொது தேர்வை ரத்து செய்வதற்கான வாய்ப்பு இல்லை. தற்போது மே 3-ஆம் தேதி தேர்வை தொடங்கினால் அந்த சமயத்தில் கொரோனா பாதிப்பு உச்சக்கட்டத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த நேரத்தில் தேர்வு நடத்தினால் அது நோய்தொற்று பரவுவதற்கு வழிவகுத்துவிடும். எனவே தேர்வை வேறு ஒரு தேதிக்கு ஒத்தி வைக்கலாமா? என்பது குறித்து விவாதித்தனர். இது தொடர்பாக முடிவுகள் எடுக்கப்பட்டும். தேர்வு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

See also  ஒத்திவைக்கப்பட்ட IPL 14 சீசன் மீண்டும் நடத்தப்பட வாய்ப்பில்லை - மைக்கேல் ஆதர்டான்

Categorized in: