Advertisement
Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use

வங்கியை விட அதிக வட்டி தரும் போஸ்ட் ஆபீஸ்

  • மத்திய அரசின் சிறிய சேமிப்பு திட்டங்களில் தபால் அலுவலக மாத வருமான திட்டமும் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் நாம் ஒவ்வொரு மாதமும் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது.
  • இந்த திட்டத்தில் நாம் முதலீடு செய்தால் ஒவ்வொரு மாதமும் நமக்கு ஒரு நிலையான வருமானம் கிடைக்கும்.
  • இந்தத் திட்டத்தில் இணைய ஒரு தனிநபர் கணக்கு அல்லது கூட்டுக் கணக்கைத் திறந்து, அதில் மொத்த தொகையை டெபாசிட் செய்ய வேண்டும்.
  • இந்த முதலீடுகளின் அடிப்படையில் நாம் பணம் சம்பாதிக்கலாம். இந்த திட்டதின் காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
  • மேலும், நம்முடைய முதலீட்டிற்கு அரசு 100 சதவீதம் உத்தரவாதம் தருகிறது. இந்திய குடிமகன் அனைவரும் தபால் அலுவலக மாத வருமான திட்டத்தின் கீழ் முதலீடு செய்யலாம். இதன் மூலம் நமக்கு மாத வருமானம் கிடைக்கும்.
  • அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்புக் கணக்கு வைத்திருந்தால் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் ஒரு கணக்கைத் திறக்க முடியும். இதற்காக, நாம் ஐடி ஆதாரத்தை வழங்க வேண்டும்.
  • மேலும் வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஆதார் அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை வழங்கினால் போதும். இத்துடன் இரண்டு பாஸ்போர்ட் அளவு போட்டோவும் வழங்க வேண்டும்.
  • இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ஒரு தனிநபர் கணக்கில் ரூ .4.5 லட்சம் வரை மட்டுமே முதலீடு செய்ய முடியும். அதேநேரம் கூட்டுக்கணக்காக இருந்தால் அதில் அதிகபட்சமாக ரூ .9 லட்சம் வரை மட்டுமே முதலீடு செய்ய முடியும்.
  • இந்த கூட்டுக் கணக்கில் மூன்று பேர் சேர்ந்து கூட முதலீடு செய்யலாம். ஆனால் அதிகபட்ச முதலீட்டு ரூ .9 லட்சம் மட்டும் தான்.
  • இந்த ஆண்டு தபால் அலுவலக மாத வருமான திட்டத்தின் வட்டி விகிதத்தை அரசாங்கம் அதிகரித்துள்ளது. அதன்படி அரசாங்கம் தற்போது 6.6 சதவீதம் வரை வருடாந்திர வட்டியை நிர்ணயித்துள்ளது.
Previous Post
SBI bank

ரூபாய் 1000 முதலீட்டில் லட்சங்களை தரும் SBI வங்கி

Next Post
PAN Card Aadhaar Card

மார்ச் 31 ஆம் தேதி கடைசி நாள் பான் ஆதார் இணைப்பை செக் செய்வது எப்படி?

Advertisement